அப்பாடா!
ஒரு வழியா கோலங்கள் மெகா...... சீரியல் இன்றோடு முடிந்து விட்டது.
இந்த நாடகத்தை கடந்து வராத தமிழர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
ஒரு நாடகம் ஆரம்பித்து முடிப்பதற்குள் தான், என் வாழ்க்கையில் எவ்வளவு நடந்து விட்டது?
என் வாழ்க்கையை விடுங்க. சீரியலின் நாயகி தேவயானி இரு குழந்தைகளைப் பெற்றுவிட்டார். ஒரு நாயகி இல்லாமல், சீரியல் நடுவே ஆறு மாத காலம் ஓடியது இதுவாகத்தான் இருக்கும். நடுவே, கலைஞர் டிவி சீரியலிலும் நடித்தார்.
இப்படி பல சாதனைகளை பண்ணிய தொடர் இது.
’தொல்காப்பியன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் திருச்செல்வம், ‘தொல்ஸ்’ என்ற பெயரை தமிழகமெங்கும் பிரபலப்படுத்திவிட்டார். தொல்ஸ், தொல்ஸ் என்று அவரை அழைத்து, ரொம்பத்தான் தொல்லைப்படுத்திட்டாங்க.
எத்தனை வருஷம் கழிச்சு, இந்த தொடரை பார்த்தாலும், எதுவும் மிஸ் பண்ணிய மாதிரி இருக்காது. நடுவுல, யாராச்சும், எங்காச்சும் ஒரு ட்ரிப் போயிட்டு வந்திருப்பாங்க. அவ்வளவுதான்.
எப்படி இவ்ளோ நாட்கள் ஓடியது என்று தெரியவில்லை. இதை ரசித்து பார்த்தவர்கள் கூட, ஒரு கட்டத்தில் கடுப்பாகிவிட்டார்கள். வேறு வழியில்லாமல், ’இவ்ளோ பார்த்துட்டோம். இதையும் பார்க்க மாட்டோமா?’ என்று பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஆனாலும் டிஆர்பி, டாப்பு.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொடரின் முடிவு என்ன? வீட்டை விட்டு வெளியேறி, நாயகி அபி, தோழர் தொல்ஸுடன் சேர்ந்து சமூக சேவை செய்கிறார்.
தாய்குலமே, இதை காணத்தானே சோறு போடாமல் காக்க வைத்தாய்? இனியாவது ஒழுங்கான நேரத்தில் சாப்பாடு கிடைக்குமா? தெரியவில்லை. அடுத்தது தென்றலாம்.
இயக்குனர் திருச்செல்வமா? இல்லை. அவர் படம் எடுக்க போகிறார்.
படம் மூணு மணி நேரம் தானே ஓடும்?
கடந்த ஒரு வருட எபிசோட்ஸ், இங்கே.
.
14 comments:
//இந்த நாடகத்தை கடந்து வராத தமிழர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.//
இல்லீங்க,இப்படி ஒரு நாடகம் ரொம்ப காலமாக ஓடியது உங்கள் பதிவைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.
என்னுடன் பழ்கும் பெண்மணிகள் யாரும் இந்த மாதிரி உதவாகரை நாடகங்கள் பார்பதில்லை.அப்படி என்றால் நாங்கள் தமிழர்களில் சேர்த்தி இல்லையோ?
டேய் தொல்ஸ் எதாவது சாக்குபோக்கு சொல்லி சீரியல மீண்டும் தொடர்ந்தா...
கொலைவெறியுடன்
thambi
//அப்படி என்றால் நாங்கள் தமிழர்களில் சேர்த்தி இல்லையோ?//
அப்படி சொல்லலீங்க. பார்க்கவில்லை என்றாலும், இந்த நாடகம் பற்றி தெரிந்திருக்கும் அல்லவா?
வீட்டில் சன் டிவி தெரிந்தும், இந்த நாடகத்தை பற்றி தெரிந்திருக்காவிட்டால், அது ஆச்சரியம் தான்.
thambi,
தொடரமாட்டார்கள் என்று நம்புவோம்.
நானும் தமிழரில் சேர்த்தி இல்லை.
தேவயானி பிடிக்கும் என்றாலும்.... ஒருநாள் இரவு உணவு நேரத்தில் தெரியாமப் பார்த்துட்டு............
போதுமடா சாமின்னு ஆயிருச்சு. முதலும் முடிவும் அன்றே.
யப்பா சாமி.............
ராத்திரி 9ல இருந்து 9.30
வரைக்கும் இனி
நிம்மிதியப்பா...... நிம்மதி......
வாங்க துளசி கோபால்...
தப்பிச்சிடீங்க... :-)
//ராத்திரி 9ல இருந்து 9.30
வரைக்கும் இனி
நிம்மிதியப்பா...... நிம்மதி......
//
சங்கவி,
அப்படியெல்லாம் சும்மா விட்டுட மாட்டாங்க...
என்னாது கோலங்கள் முடிஞ்சிடுச்சா??? ஓ மை காட்!!!
// ராத்திரி 9ல இருந்து 9.30
வரைக்கும் இனி
நிம்மிதியப்பா...... நிம்மதி......
//
ஹி ஹி ஹி
அடுத்த தொடர் ஆரம்பிப்பார்களே :)
Appada.......Oru Perumuchu....
நரேஷ்,
ஏன் இவ்ளோ ஷாக்?
அதானே டாக்டர்? :-)
thirumba thirumba ore kadaiyai seriallaga parkka nam tamizh makkal anjuvathe illai. enru thaniyumo indha serila mogam!!
Post a Comment