பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்.
கமலா தியேட்டர் வளாகத்தில் புதிதாக ஒரு ரெஸ்டாரெண்ட் அமைத்திருந்தார்கள். தியேட்டரின் உரிமையாளர் சிதம்பரம், எந்த விழா என்றாலும் சிவாஜியைத்தான் அழைப்பார். இந்த முறையும் சிவாஜியை அழைக்க செல்ல, சிவாஜி ‘ரஜினியை வைத்து திறந்து கொள். நான் அவனிடம் சொல்கிறேன்’ என்றிருக்கிறார். அந்நேரத்திய அரசியல் தோல்வியால, இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
அவர் ரஜினியிடம் செல்ல, ரஜினியும் ஒத்துக்கொண்டுள்ளார்.
திறப்பு விழாவின் போது, எப்படியோ சிவாஜியும் வந்திருக்கிறார். ஆனால், மேடையில் அமராமல் கீழே வந்திருந்த கூட்டத்துடன் அமர்ந்திருந்தார். இதை கண்ட ரஜினி, அவர் மேடைக்கு வந்தால்தான் நான் மேடையில் இருப்பேன் என்று பிடிவாதமாக கூற, பிறகு சிவாஜி மேலே வந்திருக்கிறார்.
முதலில் மேடையில் பேசிய உரிமையாளர், தான் சிவாஜியை அழைத்ததைப் பற்றியும், அவர் ரஜினியை அழைக்க சொன்னதையும் கூறி, வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அதன் பிறகு, ரஜினி பேசினார்.
”நான் கொஞ்ச நாள் முன்னாடி நிறைய படங்களில் ஓய்வில்லாமல் நடிச்சேன். தூக்கமில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தேன். மெண்டலி டிப்ரெஸ்ட். அந்த மாதிரி இருக்கறப்போ, இங்க, கமலா தியேட்டருக்கு ஒருமுறை வந்திருந்தேன்.
தியேட்டர் ஊழியர் ஒருவருடன் ஏதோ பிரச்சினையாகி விட்டது. கோபத்தில் அவரை அடித்து, இங்கு வைத்திருந்த கண்ணாடியை உடைத்தேன். வாயில் பீடா போட்டிருந்தேன். த்தூ... என்று துப்பிவிட்டு போனேன். என்னுடைய அன்றைய செயலுக்கு, இப்ப மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று அவர் பேசும் போது கூறினார்.
பிறகு, விழா முடிந்து சிதம்பரம் அவர்கள் ரஜியை சந்தித்து,
”எதுக்கு சார், இதையெல்லாம் இப்ப மேடையில் கூறணுமா?” என்றதற்கு,
ரஜினி கூறியது,
“இதையெல்லாம் சொல்லத்தான், நீங்க கூப்பிட்டவுடன் நான் வந்தேன்.”
கமலா தியேட்டர் உரிமையாளர், வி.என்.சிதம்பரம் எழுதிய ’நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்’ புத்தகத்திலிருந்து.
.
18 comments:
மிகவும் நல்ல பகிர்வு...
தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஸ்டார்ட் ஆகிடுச்சேய்ய்ய்ய்ய் :))
ஒரு நல்ல மனிதனின் நல்ல குணத்தை
(மன்னிப்பு கேக்கறவன் மனுசன்.. மன்னிக்கறவன் பெரிய மனுசன் ... கமல் சொன்னது நினைவுக்கு வந்தது..) பகிர்ந்துக்கொண்மைக்கு மிக்க நன்றி...
birth day ஸ்பெஷல் தானா...
தலைவர் தலைவர்தான் :)
தெரியாத விஷயம்...நன்றி...
நன்றி மணிகண்டன்
ஆமாம் ஆயில்யன்
நன்றி பிரியா
வாங்க பேநா மூடி... அதை நீங்க தான் சொல்லணும்.
வாங்க கிருத்திகா
வாங்க ஜெட்லி
'ரஜினி என்பவரை ஏன் கொண்டாட வேண்டும்' என்று அடிக்கடி சில முணுமுணுப்புகள் கேட்கும். அவற்றுக்கான நச் பதில்களில் ஒன்றாக இருக்கும் தகுதி இந்தப் பதிவுக்கு உண்டு சரவணகுமரன். நன்றி.
-வினோ
It really moved me.Thank you very much.
He is definetely a good soul.
நன்றி வினோ
நன்றி விவேக்
நன்றி சுவாமி
Post a Comment