கூகிள் டூடுல் தெரியுமல்லவா? ஏதேனும் விசேஷத்திற்கு அல்லது நிகழ்விற்கு அதை குறிக்கும் வகையில், கூகிள் என்ற எழுத்துக்கள் படங்களுடன் அமைக்கப்பட்டு இருக்கும்.
உதாரணத்திற்கு இந்த காந்தி ஜெயந்தி அன்று அவர்கள் வெளியிட்ட டூடுல் இது.
மைக்கேல் ஜாக்சன் இறந்த சமயம் வெளியான டூடுல்.
இந்த படங்களை வரைய சொல்லி, இந்திய சிறுவர்களிடம் ஒரு போட்டி கூட கூகிள் நடத்தியது.
சரி, இது எதுக்கு இப்ப’ன்னு கேட்கறீங்களா? இணையத்தில் உலவுபவர்களில் பலர், இதை மறக்காமல் கவனிப்பார்கள். இன்னைக்கு இந்த விசேஷம். கூகிள் என்ன படம் போட்டுயிருக்குது’ன்னு ஆர்வமா வந்து பார்ப்பாங்க. ஏதாவது விஷயத்திற்கு கூகிள் இம்மாதிரி படம் போடாவிட்டால், சர்ச்சைகள் கூட எழும்புவது உண்டு.
எனக்கு ஒரு வருத்தம். நம்ம ஊர் தலைவர்கள் பிறந்தநாளை கூகிள் கண்டுக்க மாட்டேங்குதே’ன்னு. இப்ப இல்லாட்டினாலும், என்னைக்காவது போட்டுதானே ஆகணும். இன்னைக்கு, இந்தியாவுக்கு பிரத்யோகமா பக்கங்களை வடிவமைப்பவர்கள், நாளைக்கு தமிழகத்திற்காக வடிவமைக்கும் நிலை வரும்.
அப்ப உதவும் என்பதற்காக, கூகிளுக்கு என்னோட உதவி.
ஒரு தலைவரை போட்டா, இன்னொரு தலைவர் கோவிச்சுக்குவாரே? அப்புறம் அவுங்க ஆட்சில, கூகிள தமிழ்நாட்டுல தடைப்பண்ணிட்டா? அதனால, அவுங்களுக்கு ஒண்ணு.
இதையெல்லாம் பார்த்திட்டு, கூகிள் என்னை டூடுல் வரைய கூப்பிட கூடாதப்பா! எனக்கு டைமே இல்லை...
.
17 comments:
படங்கள் சூப்பர். நல்ல கற்பனை.
ரொம்ப யோசிக்கிறமாதிரி தெரியுதே? பார்த்து, இவரு அப்புறம் வாலி, வைரமுத்துவோட உங்களையும் மேடைக்கு மேடை இழுத்துட்டுப் போகப் போறாரு.
கலக்கல்
ரொம்ப நல்ல இருக்கு உங்க ஐடியாவும் டூடுளும்
ஜூப்பரு.
எப்படி இப்படியெல்லாம்..
நல்லா இருந்தது
super super...kalakkitinga
படங்கள் சூப்பர். நல்ல கற்பனை.
நன்றி ப்ளாக் பாண்டி
ஹி ஹி
நன்றி சரண்
நன்றி பின்னோக்கி
நன்றி வைத்தீஸ்வரன்
நன்றி அறிவிலி
நன்றி கணேஷ்
நன்றி கிருத்திகா
நன்றி பிரபு
கல்க்கல்ஸ்!
Post a Comment