மும்பை தாக்குதலில் கைது செய்யப்பட்ட கசாப், பலமுறை மாற்றி மாற்றி பேசியிருக்கிறான். அவனுடைய தற்போதைய வாக்குமூலம், இந்தியர்கள் அனைவரையும் கிறுக்கர்களாக்கியிருக்கிறது. தான் இந்தியா வந்தது சினிமாவில் நடிக்கத்தான் என்றும், சும்மா சுற்றிக்கொண்டு இருந்தவனை போலீஸ் தவறாக கைது செய்தது என்றும் கூறியிருக்கிறான்.
அவன் மேலும் கூறியவை,
- இந்த கேஸே ஜோடிக்கப்பட்டது.
- பாகிஸ்தானில் இருந்து முறையான விசாவில் வந்தேன்.
- படத்துக்கு போகலாம் என்று சுற்றிக்கொண்டு இருந்தவனை, பாகிஸ்தானி என்பதால் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்.
- தன்னை போல் இருக்கும் அபு அலிகத் எனும் தீவிரவாதியின் குற்றங்களை தன் மேல் சுமத்தியிருக்கிறார்கள்.
- வீடியோவில் வருவதும் அபு அலிகத் தான்.
இவ்வாறு அமைதியாக, தெளிவாக கூறியிருக்கிறான். இப்படியெல்லாம் பேச இவனுக்கு யார் கற்றுக்கொடுக்கிறார்கள்? இல்லை, தானாகவே இப்படி பேச கற்றுக்கொள்ளும் சூழல் இவனுக்கு அமைந்திருக்கிறதா? இவனுக்கும் ஆதரவாக பேச, ஒரு இந்திய வழக்கறிஞர் இருப்பது, இந்திய ஜனநாயகத்தின் பலமா, பலவீனமா?
“தீவிரவாதிகளுக்கும் போலீஸுக்கு துப்பாக்கி சண்டை நடந்திருக்கலாம். ஆனா, நான் அவன் இல்லை.” என்று கூலாக சொல்லுகிறான். ”ரயில் நிலையத்தில், மூன்று காவலர்களை நீ சுட்டு கொன்றிருக்கிறாய் என உன்மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்ற சொன்னதற்கு, “நானா?” என்று பதில் கேள்வி சாதாரணமாக எழுப்புகிறான்.
ஏ.கே.47 பற்றி கேட்டதற்கு, “நான் இதுவரை அதை தொட்டதேயில்லை.” என்றவன், நல்லவேளை பார்த்ததேயில்லை என்று சொல்லவில்லை. அதற்கு பதில், இப்படி சொல்லியிருக்கிறான். “போலீஸ் வைத்திருந்ததை பார்த்திருக்கிறேன்.” என்று. நல்லவன் தான். பரவாயில்லை. தாக்குதல் நடத்தியதே போலீஸ் தான் என்று சொல்லவில்லையே?
இதன் மூலம் இதுவரை விசாரிக்கப்பட்ட, சம்பவத்தை நேரில் கண்ட 610 சாட்சியங்களை பொய் என்றிருக்கிறான். இவர்கள் அனைவரும் கிரைம் பிராஞ்ச் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் என்பது இவன் கூற்று. “என் போட்டோ தான் உலகம் முழுக்க காமிச்சாங்களே! அத இவுங்ககிட்ட காமிச்சு, எனக்கு எதிரா சாட்சி செய்ய சொல்லிட்டாங்க.”
நீதிபதி அவனிடம் “டேய் கண்ணா! நீயே தானே ஆறு மாசம் முன்னாடி குற்றத்தை ஒப்புக்கொண்டு, சிசிடிவில வந்தது நான் தான்’ன்னு சொன்ன?” என்று நினைவுப்படுத்தியதற்கு, “அப்ப போலீஸுக்கு பயந்து பொய் சொன்னேன். “ என்று உச்சக்கட்ட பல்டி அடித்திருக்கிறான்.
படிக்கும்போது ஜோக் போல இருந்தாலும், இது எல்லாமே நம் நாட்டு நீதிமன்றத்தில் ஒரு கடுமையான தாக்குதலை நடத்திய தீவிரவாதியால் சொல்லப்படும் உண்மையான வாக்குமூலங்கள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும், பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிக்களுக்கோ, இல்லை சர்வதேச உலகத்திற்கோ, இந்தியாவின் நீதித்துறையும், விசாரணை முறைகளும் எவ்வளவு பலவீனமாக தெரியும்? மக்களை, குழந்தைகளை கருணையேயில்லாமல் சுட்டு தள்ளிக்கொண்டு இருந்தவனை கைது செய்து விசாரிக்கும் முறையா?
இப்படித்தான் கொஞ்ச நாட்கள் முன்பு, அவன் மட்டன் பிரியாணி கேட்டு, கொடுத்த தட்டுகளை தூக்கியெறிந்தாக, சிறைத்துறை அதிகாரிகள் கோர்ட்டில் வந்து நீதிபதியிடம் புலம்பினார்கள். நீதிபதியும் அவனிடம் அப்படியா? என்று கேட்டதற்கு, அவனும் தைரியமாக ஆமாம் என்று சொல்லியிருக்கிறான். உலகத்திலேயே ஒரு தீவிரவாதியின் அசைவ உணவை பற்றி வழக்கு மன்றத்தில் விசாரிக்கும் நாடு, நமது நாடாகத்தான் இருக்கும்.
நாட்டில் இருக்கும் ஒரு சராசரி பிரஜைக்கும் உண்மை தெரிந்திருக்கும் நிலையில், ஏன் நமது விசாரணை முறைகள் இப்படி பலவீனமானதாகவும், நேர விரயமாக்குவதாகவும் இருக்கிறது? ’ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது’ என்னும் சிந்தாந்தம் தவறு என்று சொல்லவில்லை. ’ஒரு குற்றவாளியும் தப்பிக்கக்கூடாது. ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது’ எனும் நிலை சாத்தியமில்லையா? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் என்பதே குற்றங்களை சகஜமாக்குகிறதே?
மதுரையில் அத்தனை பேர் கண் முன்னால் நிகழ்த்தப்பட்டு, உலகத்திற்கே டிவியிலும் போட்டுக்காட்டப்பட்ட தினகரன் அலுவலக வன்முறை வெறியாட்டங்கள், ஏதோ அனைவரும் தூக்கத்தில் கண்ட கனவு போல், விசாரணையில் சாட்சியங்கள் பல்டியடித்ததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கோ, நடத்தும் வழக்கறிஞர்களுக்கோ அல்லது கவனிக்கும் மக்களுக்கோ, இவையெல்லாம் கேஸ்கள். அவ்வளவே. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான், வழக்குக்கள் தங்கள் வாழ்வில் இழப்புகளை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கான சந்தர்ப்பங்கள். அவர்களை திருப்திப்படுத்தாத தீர்ப்புக்கள் எவையும், நியாயமான தீர்ப்புக்கள் அல்ல.
ஒருவர் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர் தானா என்று உறுதிசெய்துக்கொண்ட பிறகு, அவர் நீதிபதிக்கு இணையான இடத்தில் வைக்கப்பட வேண்டும். வழக்கின் திசையையும், நீதிபதியின் தீர்ப்பையையும் பரிசீலனை செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறான மாற்றங்களும், புரட்சிகளும் நீதித்துறையில் ஏற்படாத வரை, வழக்குகள் வெறும் வழக்கமானதாக மட்டுமே இருக்கும்.
.
13 comments:
காசப் "நான் அவன் இல்லை" அப்படின்னு சொல்றான். நடக்கவே இல்லைன்னு சொல்லலை. நம்ம் ஜனநாயகம் அப்படி ஸார். பார்லிமெண்ட் உள்ள வந்து சுட்டவனே இன்னும் ஜாலீயா ஜெயில் சாப்பாடு சாப்பிட்டு இருக்கான். அவன மாதிரி இவனும் இருந்துட்டு போகட்டும்.
இவனை அப்பவே முடிச்சிருக்கணும்...கோர்ட்டுக்கு கொண்டுவந்து நீதி விசாரணை எல்லாம் வீண் செலவு...நாதேறி..
இவுங்க சொல்றத எல்லாம் கேட்கும் நாம்தான் அப்பாவி.........முப்பது கோடி என்ன முன்னூறு கோடியும் செலவு செய்வோம். கடைசில காசாப் என்பவன் இந்தியா வரவேயில்லை என்று சொன்னாலும் ஆச்சர்யமில்லை.....
உலகிலேயே மிகபெரிய ஜனநாயகம் - இந்தியா (ரொம்ப முக்கியம்)
dear friend,
nam naattu neethithuranien pokkai ungal aathangathil velipaduthiulleerhal, mubai thaakkuthal, aduthu mathurai thinakaran paththirikkai thaakkuthal patrium solliulleerhal aanal babari masjith sambavam, kujarath sambavam maranthuviteerhal maranthuvitteerhala? illai maraithu vitteerhala? kutram seitha ellorume kutravalihal thane?
புடிச்சமா... போட்டுத்தள்ளனமாங்கற விட்டுப்புட்டு கொஞசிட்டு இருக்கானுங்க...
தறுதலைக்கு நாக்க இழுத்து வச்சு அறுக்கறதை விட்டுட்டு அவன் கேட்கறதையெல்லாம் வாங்கிகொடுக்குறானங்க... அவனுக்கு வாங்கும்போது அவன் பேரைசொல்லி தங்களுக்கும் சேர்த்து வாங்கித்தின்னுவானுங்க இந்த முட்டாள் போலீஸ்காரனுங்க...
போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும்..
என்ன பண்றது, சம்பத்? நாட்டுல கஷ்டப்பட்டு வேலைப்பார்க்கிறவன விட, இவுங்க தான் சொகுசா இருக்கிறாப்புல தெரியுது.
உங்கள் கருத்தை பகிர்ந்ததற்கு நன்றி, ரெண்டு.
திப்பு சுல்தான்,நான் எதையும் மறைக்கவுமில்லை... மறக்கவுமில்லை... சமீபத்திய செய்திகளின் அடிப்படையில் எழுதிய பதிவு இது. நீங்கள் சொல்வது போல், குற்றம் செய்த எல்லோருமே குற்றவாளிகள் தான்.
நாஞ்சில் பிரதாப், நம்மளால இப்படி புலம்பத்தான் முடியுது...
கசாபை விசாரிக்கும் நீதிபதியை கொண்டு போய் நம்ம ஊரு போலிஸ்காரங்க லாக்கப்புல வச்சு அடிசாங்கான நான்தான் கசாபுன்னு ஒத்துக்குவார். இது நம்ம நாடு காவல்துறையின் பலமா ,பலவீனமா
See the fundamental/Basic system is fault...Staring from the low class to the high officials its been corrupted.Which is the last case we hear about Sentence of Death. Auto Shankar....so we do have human rights commision formed by 6 family members come in front of court and protest....idiotic...Why the hell we left the terrorist in Kandhahar...why the hell we still providing fucking proof to pakistan...where you caught him india..right...not in pakistan...what they have to do if pakistan agree all for this....went and @%!$@^% american's @@#%^! ... we need a dictator like hitler...will take is own decision...never worried...right or wrong one single decision....One Last word..."WE DONT NEED TERRORIST TO RUINED THE COUNTRY WE DO HAVE ENOUGH POLITICIANS"
இனியவன்,
நெடுமாறன் பேட்டியில் சொல்லியிருந்தாரே? சாகவே இல்லாத ஒரு பெண்ணை கொன்றதாக பெண்ணின் கணவரையே ஓத்துக்கொள்ள வைத்தவர்களும், இது போன்ற போலீஸ் தான்.
கார்த்திக், உங்கள் கோபம் புரிகிறது. கசாப் பற்றி வரும் செய்திகள், இன்னமும் நமது கோபத்தை அதிகரிக்கிறது.
இன்று கசாப், ‘நான் ஒரு சமையல்காரன்’ என்று சொல்லியிருக்கிறான்.
Post a Comment