Wednesday, December 9, 2009

நாட்டு சரக்கு - தவளை எங்கே?

அப்பாடா! ஒரு வழியா இளையராஜாவுக்கு நன்றாக இசையமைக்க தெரியுமென்று சாரு ஒத்துக்கொண்டுள்ளார்.

இசைத்துறை வல்லுனரும், இளையராஜாவின் தீவிர ரசிகருமான அகிலன் தன் பதிவில் ராஜா-ரஹ்மான் ஒப்பீடு பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவையும் ஏ ஆர் ரஹ்மானையும் அல்லது வேறு ஒரு இசையமைப்பாளரையோ ஒரே நேர்கோட்டில் வைப்பது எந்த வகையில் நேர்மையான பார்வையாக இருக்க முடியும்? அது முற்றிலும் நமது ரசனையில் இருந்து எழுவதுதானே? அதைவிட அபத்தமானது சலம்டாக் மில்லினியரையும் நான் கடவுளையும் ஒப்பிடுவது. இரண்டு இசையின் வெளிபாடுகளுக்கும் இரு வேறு பெரும் காரணங்கள் இருக்கிறது. அதை இசையமைப்பாளன் மட்டும் தீர்மானிப்பதில்லை.

...

இளையராஜாவின் சமீபத்திய படமான ‘பா’வை பார்ப்போம் அதில் ஒர் இறுதி காட்சி. அந்தப் பையன் இறக்கப் போகிறான், தனது தந்தைக்கும் தாயிற்கும் திருமணம் நடத்துகிறான், திருமணத்திற்கு தீயை சுற்றிச் சுற்றி நடப்பதுபோல், அவர்கள் அவனது படுக்கையைச் சுற்றி சுற்றி நடக்கிறார்கள், அவனது பாட்டி திருமண மந்திரம் சொல்கிறாள். பையன் மன நிறைவு கொள்கிறான். தந்தையின் முகத்தில் சோகம், இப்பொழுதான் பழகியிருக்கிறான் அதுவும் தனது மகன் என்று தெரியாத நிலையில். தெரியும் போது பையன் மரண படுக்கையில், அந்த சமயம் அவன் ‘பா’ என்கிறான். தந்தையின் முகத்தில் சந்தோஷம், ஏமாற்றம், விரக்தி. சற்று நேரத்தில் பையன் இறக்கிறான். ஒரு சில நிமிட சம்பவங்கள் அனைத்தும். இந்த அத்தனை உணர்ச்சிக்கும் இளையராஜா இசை வடிவம் கொடுத்திருப்பார். ஒவ்வொரு சின்னச் சின்ன உணர்ச்சிக்கும். மந்திரங்கள் உச்சரிக்கும் போது, தந்தை கவலையாகப் பார்க்கும் போது, சட்டென்று பையன் பா என்று சொல்லும் போது (முதல் முறையாக அவன் வாழ்வில் அவன் உச்சரிக்கும் வார்த்தை, அவன் தந்தை முதல் முறையாக அவனது வாழ்வில் கேட்கும் வார்த்தை) நமது கலாச்சரத்திற்குப் பழக்கப்பட்ட வயலின் நாதம் அந்த இடத்தில் ஒலிக்கும், உடனே அந்த இசை சற்றென்று தடம் மாறுகிறது காரணம் அவன் இறக்கிறான். மிகச் சிக்கலான இசைக் கலவை.


மேலும் வாசிக்க...

---

துவரம் பருப்பு விலை தாறுமாறாக போனதால், அதற்கு இணையான ஒரு ஐட்டத்தை கவர்மெண்ட் கனடாவில் இறக்குமதி செய்யப்போகிறார்கள். இதற்கு அரசாங்க தரப்பில், சத்தானது, விலையும் குறைவானது என ஆதர குரல் கொடுத்தாலும், மற்றவர்கள் இதன் சுவை துவரம் பருப்பு போல் வராது என்கிறார்கள். கிலோ இருபத்து ஜந்து ரூபாய் தான் வருமென்பதால், அரசாங்கம் இந்த எதிர்ப்பு குரலை எல்லாம் கண்டுக்கொள்ளபோவதில்லை. ஆரம்பத்தில், பாம் ஆயில் கொண்டு வந்த போதும், இப்படி எதிர்ப்பு இருந்தது. அப்புறம் சரியாகிவிட்டது என்கிறார்கள்.

---

சிவகாசி ஊர் பெயரை மாற்றபோகிறார்கள். விஜய் நடித்ததாலா? இல்லை, பேரரசு எடுத்ததாலா? இரண்டும் இல்லை. ஊரில் அடிக்கடி நடக்கும் விபத்துகளை தவிர்க்க, நியூமராலஜிப்படி பெயரை மாற்றுகிறார்கள். பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. ஒரு எழுத்து எக்ஸ்ட்ராவாக சேர்க்கிறார்கள். Sivakasi, இனி Sivakaasi.

இந்த பெயரை பயன்படுத்தும்படி உள்ளூர் மக்களுக்கும், நிறுவனங்களும் வேண்டுகோள் எழுப்பி , ஊரு முழுக்க சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுல இருக்குற ஊருக்கு, ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் மாற்ற சொல்லி, எந்த ஜோசியருய்யா சொன்னது?

---

என் நண்பனுடன் கோவை சாலையில் நடந்துக்கொண்டிருந்தேன். அவன் ஒரு சைனா மொபைல் வைத்திருந்தான். போலி IMEI நம்பர் தடை விவகாரத்தால் ஒரு சிம் வேலை செய்யவில்லை. சரி செய்ய கடைகளில் 200 முதல் 400 வரை கேட்கிறார்கள். அந்த கடுப்பில் இருந்தவன், பெட்டிக்கடைகளில் தொங்கி கொண்டிருந்த தினசரி தலைப்பு செய்தியை பார்த்து இன்னும் கடுப்பானான். செய்தி - நாளை முதல் பொது இடங்களில் புகைப்பிடித்தால், 200 ரூபாய் அபராதம்.

“என்னங்கடா நினைச்சிக்கிட்டாங்க? கடையில சைனா மொபைல் விப்பாங்களாம். ஆனா, வாங்கி யூஸ் பண்ணா பணம் கட்டணும்’மாம். அப்புறம் ஏன் அதை விக்கவுட்டீங்க? இவுங்க தம்மு விப்பாங்களாம். வாங்கி அடிச்சா, பைன் கட்டணும்மாம். வாங்கிக்கிட்டு போயி வீட்டுக்குள்ளயா அடிக்கணும்? இப்படியே போச்சு’ன்னா, இன்னும் கொஞ்ச நாள்ல ரோட்டுல சிக்கன் கபாப் தின்னா கூட பைன் கேட்பானுங்க” என்று பொறிந்து தள்ளினான்.

---

கேபிள் சங்கர், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கின முதல் படமான டுயல் (Duel) பத்தி சொன்னதுக்கு அப்புறம் அந்த படம் பார்க்க ரொம்ப ஆர்வமா இருந்தேன். படமும் ஒரு வழியா பார்த்தாச்சு. ரெண்டு கேரக்டரை வைத்து மிரட்டியிருந்தார். லாரி எழுப்பும் ஒலியும், அதை காட்டும் கேமரா கோணமும் அபாரம். ஆனா, கடைசி வரை ஏன் இந்த விரட்டல்’ன்னு சொல்லவேயில்லையே?

ஹீரோ காரை விட்டு இறங்கி லாரியை நோக்கி நடந்தால், லாரிக்காரன் ஓடிவிடுகிறான். காரில் போனால், விரட்டுகிறான். ஆனால், அதே சமயம், குழந்தைகள் சென்ற ஸ்கூல் பஸ், கிளம்ப உதவுகிறான். ஒரு வேளை, அவனுக்கு அந்த கார் மேல் தான் கோபமா? இதையெல்லாமேயே காட்சிகள் மூலம் பார்ப்பவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இயக்குனரின் நோக்கமா?

---

போன வருடம் நடந்த மும்பை தாக்குதலுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? என்று எப்போதும் போல் கேள்விகள் வந்துக்கொண்டே இருக்கிறது. இந்த வருடம், அதே தினத்தன்று என்டிடிவியில் ஒளிப்பரப்பான உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பேட்டியில், ஒருவர் மும்பை தாக்குதலால ஏற்பட்ட இழப்புக்களை கூறிவிட்டு, ”ஆனால் இன்னமும் கசாப்பிடம் விசாரணை நடந்துக்கொண்டிருக்கிறது. ஏன்?” என்று அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார். அதற்கு சிதம்பரம், “என் நிலையில் நீங்க இருந்தா என்ன பண்ணுவீங்க?” என்று பதில் கேள்வி எழுப்பினார். கேள்வி கேட்டவர் ஏதும் பதில் சொல்லவில்லை. சிறிது மௌனத்திற்கு பிறகு, “அது தான் பதில்” என்றார் சிதம்பரம்.

ஆனால், கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானில் நிறைய குண்டு வெடிக்கிறதல்லவா? பாகிஸ்தானும் இந்தியா மேல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சும்மா தான் சொல்கிறார்களா? இல்ல...??? ஒண்ணும் புரியலை.

---

இது ஒருமுறை கூர்க் சென்ற போது எடுத்த படம். பெருசு பண்ணி பாருங்க. இதில் ஒரு தவளை இருக்கிறது. எங்கே’ன்னு சொல்லுங்க பார்க்கலாம்?



ஆங்கில எழுத்தையும், எண்ணையும் இணைத்து எந்த கட்டம் என்று கூறுங்கள்.

.

14 comments:

bandhu said...

c4

ரோஸ்விக் said...

frag is in C4 man. Send me the gift (not frag). :-))

Karthick said...

C4

Ragu said...

I found the frog. it is C4

Ragu said...

i found the frog.It is C4

கிரி said...

"பிறகு விகடனில் அவருடைய பேட்டி ஒன்றைப் படித்தபோது ‘இவர் சாதாரண ஆள் இல்லை ’ என்று தோன்றியது. ஏனென்றால், என்னுடைய பேட்டி எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்தப் பேட்டி."

:-)

தவளை C4

வால்பையன் said...

சத்தியமா தவளையை கண்டுபிடிக்க முடியல!

Unknown said...

நல்ல பதிவு... :-)

வால்பையன் said...

பின்னுட்டங்களுக்கு பிறகு தான் என்னால்கண்டுபிடிக்க முடிந்தது!

கண்ணு டஞ்சன் ஆயிருச்சோ!?

சரவணகுமரன் said...

ரவி, ரோஸ்விக், கார்த்திக், ரகு, கிரி,

கஷ்டம்’ன்னு நினைச்சேன். ஈஸியாக கண்டுப்பிடிச்சிட்டீங்களா? வாழ்த்துக்கள்...

சரவணகுமரன் said...

ரோஸ்விக்,

கிப்ட்’டா? அதுக்கு வேற போட்டி வைக்குறேன்... :-)

சரவணகுமரன் said...

கிரி,

அதைப்படிச்சிட்டு நானும் சிரிச்சேன்.

சரவணகுமரன் said...

என்ன வால்பையன், இவ்ளோ பேர் கண்டுப்பிடிச்சிட்டாங்க. ஒருவேளை, கண்டுப்பிடிக்காதவர்களில், நீங்கள் ஒருவர் தான் பின்னூட்டம் இட்டுயிருப்பீர்களோ?

சரவணகுமரன் said...

நன்றி பேநா மூடி