Wednesday, December 2, 2009

புது இசை... இளம் இசை...

சித்து - ப்ளஸ் டூ பஸ்ட் அட்டெம்ட்

மகன் சாந்தனுவை வைத்து, பாக்யராஜ் சைலண்டாக எடுத்திருக்கும் படம். இசை - முதல் படம் பாரிஜாதத்திலேயே ’உன்னை கண்டேனே’வுக்காக பாராட்டை பெற்ற தரன். இதில் சக இசையமைப்பாளர் யுவனை பாடவைத்திருக்கிறார். 'பூவே பூவே’ என்ற யுவனின் பாடல் - இந்த ஆல்பத்தின் ஸ்பெஷல்.



மன்மதனில் ‘என் ஆசை மைதிலியே’ என தந்தையின் பாடலை சிம்புவிற்காக ரீ-மிக்ஸ் செய்தது போல், இதில் சாந்தனுவுக்காக ‘நான் ஆளான தாமரை’ பாடல் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. பாடியிருப்பவர்கள் - வெங்கட் பிரபுவும், சுசித்ராவும். ‘என் சோக கதையை கேளு, தாய்குலமே’ என்ற வரிகளை வைத்துக்கொண்டும் ஒரு பாடல் அமைத்திருக்கிறார்கள். இது பாக்யராஜ் டைப் பாடல். நடுநடுவே கஞ்சா கருப்பு சொந்த குரலில் கமெண்ட்ஸ் அள்ளி தெளித்திருக்கிறார்.

ஒரு பாடலும், அதன் ரீ-மிக்ஸும் பாடியதாலே, யுவன் படத்தை சிடி கவரில் போட்டுவிட்டார்களா? இல்லை, இப்படி ஒரு விளம்பரமா?

தரன் தன் பங்கை செய்து விட்டார். மீதி, பாக்யராஜ் கையிலும், சாந்தனு கையிலும் தான் இருக்கிறது. பார்க்கலாம்.

---

ஓடி போலாமா?

இமான் பாடல்களை தனியாக கேட்டால், நன்றாகத்தான் இருக்கிறது. அவர் இசையமைக்கும் படங்கள் தான் சொதப்பி விடுகிறது. சுந்தர் சி.யுடன் சில படங்கள், சன் பிக்சர்ஸின் மாசிலாமணி என சில படங்களின் பாடல்கள் நன்றாக பிரபலமாகியது. மற்ற படங்கள், யார் இசை என்று தெரியாத லெவலில் இருக்கிறது. அவருடைய இசை இளமை துள்ளலுடன் இருந்தாலும், ஒரே டைப்பில் அமைந்துவிடுவது அவருடைய மைனஸ். இதனாலேயே படத்தின் வெற்றியை சார்ந்து இருக்க வேண்டியதாகிவிடுகிறது.

பாஸ், கூட்டணியை கொஞ்சம் கவனிங்க... அப்புறம், ஆதவனில் இசை பிரியரான ரமேஷ் கண்ணாவின் பெயர் - இளையமான். ஏனென்று கேட்கும் போது, இளையராஜாவிடம் இருந்து ‘இளைய’வை உருவி, ரஹ்மானிடம் இருந்து ‘மான்’யை ஓட்டிக்கொண்டு வந்து் சேர்த்துவிட்டேன் என்பார். இமானும் அப்படிதானோ?

---

அவள் பெயர் தமிழரசி



ஜெய் நடித்து எந்த படம் வந்தாலும், அது அவர் சொன்ன ப்ளாப் படங்களிலும் ஒன்றா? என்றே நினைக்க தோன்றுகிறது. அந்த செட் முடிந்து விட்டதா? ட்ரெய்லர் நல்லாத்தான் இருக்கிறது. இசை - விஜய் ஆண்டனி.

கிராமப்பின்னணியில் நாட்டுப்புற பாடல்கள். மோசர் பேயர் இதற்கு முன் எடுத்த ’பூ’வில் ’ச்சூ ச்சூ மாரி’, குழந்தைகளை கவர்ந்ததென்றால், இதில் ‘குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி’. முன்பு, குழந்தை பாடும் பாடல் என்றால் பெரும்பாலும் ஜானகி அல்லது வேறு பெண் பாடகி பாடுவார்கள். இப்பொழுது, குழந்தைகளே பாடிவிடுகிறார்கள். இந்த பாடலை பாடிய நான்சி குழந்தைதானே?

வீரசங்கர் பாடி மூன்று முறை இடம்பெற்றுள்ள பாடல்கள், கொஞ்சம் இழுவை. மால்குடி சுபா பாடியுள்ள ‘ரங்கு பாய்’ - சூப்பர். ஒண்ணுமே புரியாவிட்டாலும், நம்மையறியாமல் கை தாளமிடும்.

---

ரேனிகுண்டா



டைட்டிலை பார்த்தால் தெலுங்கில் பேரரசு எடுக்கும் படம் போல் இருந்தாலும், இது தமிழ் படம் தான்.

திரைத்துறையினரிடம் எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பை கிளறிவிட்டிருக்கும் படம். போன வாரம் ரிலீஸ் ஆக வேண்டிய படம். திரும்ப சென்ஸார் செய்யப்பட்டிருப்பதால், இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. பாடலையும் சென்ஸார் செய்திருந்தால், சிம்பு பாடிய பாடலை தூக்கி எறிந்திருப்பார்கள். இல்லாவிட்டால், தக்காளி என்றாக்கியிருப்பார்கள்.

படத்தின் ஹீரோ - அஜித்தை வைத்து தொடர்ச்சியாக படமெடுத்த S.S.சக்ரவர்த்தியின் பையன். இசை - கணேஷ் ராகவேந்திரா. இயக்குனர் பன்னீர்செல்வமும் புதியவரா? பாம்பே ஜெயஸ்ரீ பாடிய ‘விழிகளிலே’, இன்னொரு ‘அனல் மேலே பனித்துளி’. தற்போது வரும் படங்கள் போலில்லாமல், நிறைய சீரியஸ் பாடல்கள். இசையை கேட்டால், புது இசையமைப்பாளர் போல் இல்லை.

---

நாணயம்

பிரசன்னா ஹீரோவாகவும், சிபிராஜ் வில்லனாகவும் நடிக்க, எஸ்.பி.பி. சரண் தயாரித்திருக்கும் படம். சுப்பிரமணியபுரம், பசங்களை அடுத்து ஜேம்ஸ் வசந்தனின் இசையில் வந்திருக்கும் படம். ஒவ்வொரு படத்திலேயும் ஒரு பாட்டு நச்’ன்னு இருந்தா போதும்’ன்னு நினைப்பாரோ!

தரன் இசையில் யுவன் ‘சித்து’வில் பாடியிருக்கிறார் என்றால், இதில் ஜேம்ஸ் வசந்தனின் இசையில் தேவி ஸ்ரீ பிரசாத் பாடியிருக்கிறார். அவருடன் பாடியிருப்பது, திரும்பவும் சிம்பு. பாடல்கள் ஒன்றும் ஸ்பெஷலாக இல்லை. எஸ்.பி.பி., சித்ரா பாடியுள்ள ’நான் போகிறேன் மேலே மேலே’ பாடலை தவிர. லெஜண்ட்ஸ் இரண்டு பேர் பாடியிருக்கும் இந்த பாடலை, என்னுடைய மெலடி லிஸ்டில் சேர்த்துவிட்டேன்.

.

14 comments:

Prathap Kumar S. said...

அறிபூர்வாமான பல தகவல்களுக்கு நன்றி தல...

மகேந்திரன் said...

வணக்கம் சரவணன்,
இப்படியெல்லாம் படம் வந்திருப்பதே / வரப்போவதே
நீங்கள் சொல்லிதான் தெரிகிறது..
இந்த பட்டியலில், "நாணயம்" படத்தின்
"நான் போகிறேன் மேலே மேலே" மட்டும் கேட்க ஆவலாயிருக்கிறேன்..
இன்னொரு தகவல்.. "சித்து" படத்தின் ஒளிப்பதிவாளர்
ராசாமதி திரு.அறிவுமதியின் மகன்...!!

Karthick said...

time kedacha aarya2 songs kelunga...telugu songs...melody fast typical ringa ringa...ringa ringa...ringa ringa reeeeaaa..My Pick

சரவணகுமரன் said...

உண்மையாகவே சொல்றீங்களா? இல்ல, நக்கல் பண்றீங்களா? :-)

சரவணகுமரன் said...

மகேந்திரன்,

கேளுங்க... கேளுங்க...

தகவலுக்கு நன்றி...

சரவணகுமரன் said...

கேக்குறேன், கார்த்திக்

ரெண்டு said...

லீலை பாட்டு கேட்டு பாருங்க. ரொம்ப நல்லா இருக்கு...
சித்து +2 அவ்வளவா நல்லா இல்ல. எனக்கு புடிக்கல

Toto said...

பாட‌ல் அறிமுக‌ம் அருமை. த‌ர‌னோட‌ லாட‌ம் ‍: சிறு தொடுத‌லிலே ரொம்ப‌ ந‌ல்லா இருக்கும். இம்மானுவேல் வ‌ச‌ந்த் தின‌க‌ர‌னுடைய‌ சுருக்க‌ம்தான் இமான் [ அழகிய‌ அசுரா என் விருப்ப‌ம் ]. தொட‌ர்ந்து எழுதுங்க‌..

-Toto
www.pixmonk.com

சரவணகுமரன் said...

ரெண்டு,

லீலை இன்னும் கேட்கலை. பரிந்துரைக்கு நன்றி. கண்டிப்பாக கேட்கிறேன்.

சரவணகுமரன் said...

//த‌ர‌னோட‌ லாட‌ம் ‍: சிறு தொடுத‌லிலே ரொம்ப‌ ந‌ல்லா இருக்கும்.//

ஆமாம்... Toto.

//இம்மானுவேல் வ‌ச‌ந்த் தின‌க‌ர‌னுடைய‌ சுருக்க‌ம்தான் இமான்//

சும்மா ஜாலிக்கு தான் அப்படி சொன்னேன்.

நரேஷ் said...

லீலை பாட்டுல்லாம் நல்லாயிருக்கறதா நானும் கேள்விப்பட்டேன்...

ஆனா என்னை அப்புடியே சிலையாக்கிய பாட்டு, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் இரு பாட்டுகள்தான்...

வில்லாடிய களம் எங்கே என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா??? வைரமுத்துவின் வரிகள் சிலிர்க்க வைக்கின்றன....

சரவணகுமரன் said...

நரேஷ், லீலை இன்னும் கேட்கலை... கேட்கணும்.

ஆயிரத்தில் ஒருவன் கேட்டிருக்கிறேன். இனி பொங்கலுக்கு படம் ரிலீஸான பிறகு தான் கேட்கணும்.

thamizhparavai said...

இவ்வளவு படப்பாடல் விமர்சனமா? அதிரடியா இருக்கே...
எதுவுமே கேட்கலை.. இனிமே ஒண்ணொண்ணா கேட்கிறேன்...
‘பையா’ விட்டு விட்டீர்களே...
தரன் மேல் நம்பிக்கை இருக்கிறது...பார்ப்போம்.

சரவணகுமரன் said...

ஹி... ஹி...

தமிழ்பறவை,

பையா, கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.