திருசெந்தூர் வரை சென்ற நான், இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம் என்று நண்பனிடம் சொல்ல, கன்னியாகுமரி சாலையில் குலசேகரபட்டிணம் நோக்கி பைக்கில் சென்றோம். குலசேகரபட்டிணம் - முத்தாரம்மன் கோவிலுக்கு பிரபலமானது. தசரா திருவிழாவின் போது, பக்தர்கள் பல்வேறு வேடங்களில் இங்கு கூடுவார்கள். இதுவரை போனதில்லை என்றதால், கோவிலை காணும் ஆர்வமுடன் சென்றோம்.
கோவிலின் அருகில், நடக்கும் தூரத்தில் கடற்கரை உள்ளது. அங்கு சென்று பார்த்தபோது, தூரத்தில் மலை போன்ற அமைப்பில் ஒரு ஊர் தெரிந்தது. அங்கு இருந்தவரிடம் கேட்டதற்கு, மணப்பாடு என்றார். ஊர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். சென்று பார்த்தது கிடையாது. போனோம்.
கடற்கரை. பக்கத்திலேயே கடல் மணலால் அமைந்த சிறு மலை போன்ற மேடு. உச்சத்தில், ஒரு தேவாலயம். பின்னால், கலங்கரை விளக்கம். இடத்தின் அமைப்பைப்போல, இடத்தின் வரலாறும் ஆச்சரியப்படுத்தும்.
மணப்பாடு, ஒரு சின்ன கடற்கரையோர கிராமம். 1540இல் இந்த பக்க கடலில் சென்ற ஒரு போர்ச்சுக்கீசிய கப்பலொன்று புயலில் சிக்கியது. கப்பலின் கேப்டன் தங்களை காப்பாற்றினால், கப்பலின் பாய்மரத்தால் சிலுவை செய்து வைப்பதாக வேண்டி கொள்ள, கப்பல் இந்த ஊர் பக்கம் கரை ஒதுங்கியது. அவரும் சிலுவையை செய்து வைத்தார்.
பிறகு, இருவருடங்கள் கழித்து இங்கு புனித பிரான்சிஸ் சேவியர் வந்தார். இவர் இப்பகுதியில் கிருஸ்துவம் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இங்கும் ஒரு குகையும், நாழிக்கிணறும் திருச்செந்தூரில் உள்ளது போல் இருக்கிறது. மணல்மேடு முழுவதும் நிறைய சிலுவைகள்.
மேலிருந்து ஊரை பார்ப்பது, அருமையான வ்யூ.
ஒரு விதத்தில் ஜெருசேலம் போல் இருப்பதால், இவ்வூரை எட்டாம் போப் லியோ ‘சின்ன ஜெருசேலம்’ என்றழைக்க, மணப்பாடு இப்படி ஒரு செல்லபெயருடனும் அழைக்கப்படுகிறது.
படங்களை பெரிதாக்க, படத்தின் மீது க்ளிக்கவும்.
மணப்பாடை கூகிள் மேப்பில் காண,
View Larger Map
மேலும் விரிவான தகவல்களுக்கு,
http://www.manavai.com/n_about.htm
.
6 comments:
படங்கள் அருமை சரவணன்..
கடற்கரையில் சிறு சிறு தீவுகள் போல நீர் தேங்கி இருக்குமா?
இதே போல உவரியும் (Ovari) மிக அழகான கடற்புறம்...
தஞ்சை மாவட்டத்தை காவிரி அழகாக்கியிருப்பதை போல,
உங்கள் பகுதிக்கு வங்காள கடலின் வனப்பான கடற்புறங்கள்...
பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்..!!
மேப் சூப்பர்!
நன்றி மகேந்திரன்.
ஓரத்தில் என்றில்லாமல், சற்று தொலைவிலும் கடலில் மணல் மேடுகள் உள்ளன. இதனால், கடலின் நடுவே வரும் அலைகள் வித்தியாசமாக தெரிகிறது.
வால்பையன்,
அவ்வளவு படம் பிடிச்சு போட்டிருக்கேன். அதையெல்லாம் விட்டுட்டு மேப் சூப்பரு’ன்னுட்டீங்களே!
மிக மிக அழகான இடம்.
அந்த இடத்தில் நான் எடுத்த சில படங்கள் இதோ...
http://www.flickr.com/photos/seeveeaar/tags/manappadu/
குலசை தசரா திருவிழாவில் எடுத்த சில படங்கள் இதோ
http://www.flickr.com/photos/seeveeaar/tags/kulasai/
CVR,
நான் நேரில் பார்த்ததை விட, உங்கள் புகைப்படங்கள் தத்ரூபமாக, துல்லியமாக, அழகாக இருக்கிறது. அசத்தலாக இருக்கிறது.
உங்களிடம் கற்றுக்கொள்ள ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது.
Post a Comment