Friday, December 11, 2009

(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 8

சிறு வயதில் ரஜினி படங்களில் என்னை கவர்ந்தது, சண்டைக்காட்சிகளும் நகைச்சுவைக்காட்சிகளும். அக்காலத்தில் நான் பார்த்த படங்களும், மறக்க முடியாத காட்சிகளும்.

மனிதன் படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்கு, குண்டுகளை கீ-செயின் போல் சட்டையில் மாட்டிக்கொண்டு ரஜினி புறப்பட்டு போகும் காட்சியை மறக்க முடியுமா? அவர் மேல் எறிந்த குண்டுகளை, அந்தரத்திலேயே பிடித்து அப்படியே திருப்பி எறிவார்.



நாம இப்ப வெளியே போகும்போது, கையோடு தண்ணீர் கொண்டு போகிறோம். ரஜினி, தர்மத்தின் தலைவனில் கையோடு சில்வர் கலரில் ஒரு சின்ன டப்பா வைத்திருப்பார். என்ன குடிப்பார் என்று நினைவில்லை. ஆனால், அந்த டப்பா மட்டும் நினைவிருக்கிறது.



ராஜா சின்ன ரோஜாவில் ஒரு நகைச்சுவைக்கு பெரிய அளவில் பேண்ட் போட்டுக்கொண்டு வருவார். அதுவும் பேஷனாகி, பேகிஸ் என்ற பெயரில் ஒரு ரவுண்ட் வந்தது. இப்ப, அந்த காட்சியை காணும்போது, ஏன் சிரிக்கிறார்கள் என்றுதான் யோசிக்க தோணும். அந்த படத்தில் தான் தமிழ் சினிமாவின் முதல் அனிமேஷன் பாடல் இடம்பெற்றது.



மாப்பிள்ளையில் ரஜினி அறிமுகமாகும் காட்சியில், டெரராக ஒரு வேஷம் போட்டுக்கொண்டு கல்யாண மண்டபத்திற்குள் பைக்கில் வருவார். ஒரு சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு, தீக்குச்சியை பார்க்க, அது பற்றியெறியும். அதை கொண்டு சிகரெட்டை கொளுத்துவதோடு விடமாட்டார். அதை அப்படியே வாயினுள் கொண்டு சென்று, புகையுடன் வெளியே உதடாலேயே எடுப்பார்.



அதிசய பிறவி. தோல்வி படமாக இருந்தாலும், டிவியில் போடும்போதெல்லாம் பார்க்க தயங்கமாட்டேன். இதில் வினுசக்ரவர்த்தி ரஜினிக்கு பொருத்தமான உடலாக, வேறு சில ரஜினிகளை காட்டுவார். ரஜினியின் முந்தைய படங்களை பயன்படுத்தி அமைத்திருக்கும் இந்த காட்சியும், என்னோட பேவரிட்.



அண்ணாமலை. யாருக்குத்தான் பிடிக்காது இந்த ரிவென்ஜ் காட்சி?



சலிக்கவே சலிக்காத பாட்ஷா இடைவேளை பைட்.



பார்க்க வருபவர்களை எண்டர்டெயின் செய்வதை மட்டுமே குறிக்கோளாக வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள். படங்கள்.

35 வருடங்களாக தொடர்ந்து, தனது படங்கள் மூலம் நல்ல எண்டர்டெயின்மெண்டையும், தனது அறுபது ஆண்டுகால வாழ்க்கை மூலம் பல நல்ல பாடங்களையும் வழங்கிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

.

17 comments:

blogpaandi said...

உங்களின் பதிவும், ரஜினியின் படங்களும் அருமை.

Anonymous said...

wishing you many more returns of the day.
(kumaran you can have 50:50 appa many more hits jidaikka vaazthukiren)

thiyaa said...

நல்ல பதிவு,
படங்களும் அருமை.

Chitra said...

HAPPY BIRTHDAY, Rajini!
nice posting..........

The Great Hindu said...

''மாப்பிள்ளையில் ரஜினி அறிமுகமாகும் காட்சியில், டெரராக ஒரு வேஷம் போட்டுக்கொண்டு கல்யாண மண்டபத்திற்குள் பைக்கில் வருவார். ஒரு சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு, தீக்குச்சியை பார்க்க, அது பற்றியெறியும். அதை கொண்டு சிகரெட்டை கொளுத்துவதோடு விடமாட்டார். அதை அப்படியே வாயினுள் கொண்டு சென்று, புகையுடன் வெளியே உதடாலேயே எடுப்பார்.'' Thalaivara romba pidiche scene ithu supara irukum, pakumpothellam siri ippavum irrukum serious avum irrukum.

Unknown said...

அருமையான பதிவு சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..,

கிரி said...

சரவணன்க்குள்ளே இப்படி ஒரு ரசிகன் ஒளிந்து இருக்கிறாரா! :-))

தர்ஷன் said...

அருமையான பதிவு
இன்று முழுநாளும் ரஜியுடனே போய்விட்டது
நீங்கள் சொன்ன பலக்காட்சிகள் எனக்கும் பிடித்தவை

சரவணகுமரன் said...

நன்றி blogpaandi

சரவணகுமரன் said...

அனானி,

ஒன்னியும் புரியலீயே?!!!

சரவணகுமரன் said...

நன்றி தியாவின் பேனா

சரவணகுமரன் said...

வாங்க அருண்

சரவணகுமரன் said...

வாங்க பேநா மூடி

சரவணகுமரன் said...

கிரி,

ஹி...ஹி...

சரவணகுமரன் said...

நன்றி தர்ஷன்

Anonymous said...

happy b'day rajini..Good post saravanan.

சரவணகுமரன் said...

நன்றி அம்மு...