ஓவியங்கள் வரைவதுபோல், சிறுவயதில் இருந்த இன்னொரு பொழுதுபோக்கு, பத்திரிக்கையில் வரும் படங்களை கட் செய்து, ஒரு நோட் முழுக்க ஒட்டுவது. அப்படி ஒட்டிய ரஜினி படங்களில் சில, இப்பதிவில்.
இப்ப, எல்லா நடிகர்களையும் ரசிக்கும் பக்குவம் இருக்கிறது. ஆனால், ஒன்றும் அறியாத வயதில், எந்த வித தூண்டுதலும் இல்லாமல் ரசித்தது ரஜினியைத்தான்.
இது ஏதோ அப்பொழுது என்று சொல்லிவிட முடியாது. இன்றும் குழந்தைகளுக்கு பிடித்த நடிகர் - ரஜினிதான்.
இன்று ரஜினி படம் பார்த்துவிட்டு, ரஜினியின் நிஜ புகைப்படத்தை பார்த்தால், அது ரஜினி என்று நம்ப மறுக்கும் குழந்தைகளைக் கூட, எப்படி ரஜினி தன் செய்கைகளால் திரையில் கவர்கிறார்?
எனக்கு இப்போது நினைவில்லை. அந்த வயதில் எப்படி என் கையில் ‘ரஜினி ரசிகன்’ புத்தகம் கிடைத்தது என்று. யாரோ ஒரு ரஜினி ரசிகர் என்னை சுற்றி இருந்திருக்க வேண்டும்.
இதில் உள்ள படங்கள், ரஜினி ரசிகன் போன்ற புத்தகங்களில் இருந்தும், பொங்கல் வாழ்த்துக்களில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டது. ஏதோ, மட்டமான பசை பயன்படுத்துயிருக்கிறேன். நண்பர்கள், என் வயதையொட்டிய உறவினக்கார பசங்க, எனக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புவதென்றால், ரஜினி படங்களைத் அனுப்புவார்கள்.
மீதி நாளை...
.
6 comments:
வாவ் :))) சூப்பரூ கலெக்ஷனு ! மீ த கூட இப்பிடி நிறைய செஞ்சுவைச்சிருந்தேனாக்கும்! பேப்பர்ல வரும் (வெள்ளி ஞாயிறு ஸ்பெஷல்) ரஜினிபடங்கள் எல்லாம் கட்டிங்க் ஒட்டிங்க்தான்!
எப்பவுமே டைரியில முகப்பு பக்கம் தலைவருதான் :))
நல்ல பதிவு.., பலருக்கும் பழைய ஞாபகங்கள் வந்து இருக்கும்.., பாராட்டுக்கள்..,
naankooda ippadiththanga....:)
nalla collection...
நன்றி ஆயில்யன்...
நன்றி பேநா மூடி
ஓ! நீங்களும் இப்படிதானா? கிருத்திகா...
Post a Comment