எல்லா வருடம் போல, இந்த வருடமும் எதிர்பார்த்த சில படங்கள் நன்றாக இல்லை, எதிர்பாராத சில படங்கள் நன்றாக இருந்தது. பார்க்கக்கூடாது என்று நினைத்த படங்கள் எதையையும் பார்க்கவில்லை. ஆனால், பார்க்க நினைத்து சில படங்கள் பார்க்க முடியவில்லை. பார்த்ததில், நான் ரசித்த படங்கள் இவை. இது எல்லாமுமே தியேட்டரில் பார்த்தது தான். பழைய ஆங்கில படங்கள் தவிர, வேறு எதுவும் டிவிடியில் பார்ப்பதில்லை.
வெண்ணிலா கபடிக்குழு
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், பிரமாண்ட ஜிகினா வேலைகளும் இல்லாமல், சிம்பிளா போரடிக்காமல் ஒரு படம் பார்ப்பது நிம்மதியான விஷயம். இந்த படம், அப்படிபட்ட படம் தான். கபடி விளையாட்டை களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் முடிவு யூகிக்கும்படியாக இருந்தாலும், ஜாலியான கேரக்டர்கள் மூலம் கதையை கொண்டு சென்றது தொய்வை ஏற்படுத்தவில்லை.
நான் கடவுள்
பலத்த எதிர்பார்ப்புடன் வந்த படம். முதல் முறை பார்த்தபோது, ஏமாற்றமாக இருந்தது. இரண்டாம் முறை, சில விஷயங்கள் கவர்ந்தது. காமெடி, ஆக்ஷன், ஹீரோயிஸம் என கமர்ஷியல் படங்களுக்கு உரிய எல்லா விஷயங்களும் இந்த படத்தில் இருந்தாலும், சொல்லப்பட்ட விஷயங்கள், காட்டிய காட்சிகள் லைட்டாக எடுத்துக்கொள்ளக்கூடியவை அல்ல.
நாடோடிகள்
இரண்டாம் பாதியை விட, முதல் பாதி பிடித்திருந்தது. இடைவேளைக்கு முன்பு வரும் அந்த சேசிங் திருமணக்காட்சி தான் படத்தின் வெயிட். இதுவே, கிளைமாக்ஸை தாண்டியும் மனதில் நின்ற விஷயம்.
சிவா மனசுல சக்தி
செம ஜாலியான படம். இளமை துள்ளலான காட்சிகள். நிறைய காட்சிகள் புதுசா, ப்ரஷ்ஷாக இருந்த படம். எல்லா பாடல்களும் ஹிட்டாகியிருந்தால், படம் பெரிய ஹிட்டாகியிருக்கும்.
யாவரும் நலம்
ரொம்ப அரிதாக வரும் த்ரில்லர் வகையை சேர்ந்த படம். வீட்டுக்கு வீடு இருக்கும் மெகா சீரியலை கருவாக கொண்டு எடுக்கப்பட்ட திகில் படம். சஸ்பென்ஸ் முடிச்சுக்களை எப்படி இயக்குனர் அவிழ்க்க போகிறார் என்று இறுதிவரை நான் ஆவலுடன் பார்த்த படம். இயக்குனரும் ஏமாற்றவில்லை.
ஈரம்
இதுவும் த்ரில்லர் வகையை சேர்ந்தது தான். கதையை விட, மேக்கிங்கில் மிரட்டி இருந்தார்கள். முழுக்க ரசித்தேன் என்று சொல்லமுடியாவிட்டாலும், ஓரிரு காட்சிகளில் மிரட்டியிருந்ததை நன்றாகவே ரசித்தேன்.
அயன்
திரைக்கதையில் நாவலுக்குரிய புத்திசாலித்தனம், ஹிட் பாடல்கள், லொக்கேஷன்கள் என பலரை கவர்ந்த படம். பல வெளிநாட்டு லொக்கேஷன்கள். எல்லாவற்றையும் அம்சமாக படத்தில் சேர்த்திருந்தார்கள். இந்த மாதிரி படங்களை, ரெண்டு மூணு முறைக்கூட பார்க்கலாம்.
ரேனிகுண்டா
ஒரு புது டீம் கொடுத்த தரமான படம் என்று சொல்லலாம். படத்திற்கு ஒளிப்பதிவும், சண்டைக்காட்சிகளும், வசனங்களும் ப்ளஸ். பார்வையாளர்களையும், அந்த அஞ்சு பேரோடு பயணிக்க வைத்து, அவர்கள் நிலையை உணர வைத்திருந்தார் இயக்குனர்.
பசங்க
ஒரு குட் பிலிங் படம். குழந்தைகள், பெற்றோர்கள் இரு தரப்பையும் கவரும் படம். இம்மாதிரி படங்கள் தமிழில் வருவது ரொம்ப குறைவு. பசங்க பார்வையிலேயே போன படம். பார்த்த அனைவரும் ‘நல்லாயிருக்கு’ன்னு சொன்ன படம்.
உன்னைப்போல் ஒருவன்
பெரிய பெரிய நடிகர்கள் சேர்ந்து நடித்த ரீ-மேக். ரொம்ப சின்ன படம். தேவையில்லாத சீன் எதுவும் இல்லாம, சொல்ல வந்ததை மட்டும் சொல்லிவிட்டு சென்ற படம். பெரிய ஆக்ஷன் சிக்வெஸ் இல்லாமல், வெறும் வசனங்களால விறுவிறுப்பை ஏற்றி இருந்த படத்தை, கமல் டிவி டிவியாக வந்து ப்ரமோட் செய்தார்.
இது தவிர, காதல்னா சும்மா இல்லை, ஆனந்த தாண்டவம், திரு திரு துறு துறு போன்ற படங்கள் ஒரளவு கவர்ந்த படங்கள் என்று சொல்லலாம்.
பார்க்க நினைத்து தவறவிட்ட படங்கள், பொக்கிஷம், குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் & சிந்தனை செய்.
.
19 comments:
எனக்கு பிடித்தது " நாடோடிகள்" தான். எல்லோரும் ரசிக்கும் படி இருத்தது. உன்னை போல் ஒருவன் இரண்டாவது. பசங்க அடுத்தது.
சிவா மனசுல சக்தி வேஸ்ட். அதுக்கு கண்டேன் காதலை பரவாயில்லை.
இதில் ரேணிகுண்டா தவிர ஏனைய எல்லாப் படங்களையும் நானும் ரசித்து இருக்கிறேன்.
ரேணி குண்டா இன்னும் பார்க்க்வில்லை...
அதையும் பார்த்தால் போயிற்று
சிவா மனசுல சக்தி நான் மிகவும் ரசித்த படம்.. பீல் குட் ரகம்..
என்னோட rating ...
1.சிவா மனசுல சக்தி
2.பசங்க
3.நாடோடிகள்
4.யாவரும் நலம்
5.அயன்
6.வெண்ணிலா கபடி குழு
7.நான் கடவுள்
மற்ற படங்களை இன்னும் பார்கவில்லை
சிவா மனசுல சக்தி நான் மிகவும் ரசித்த படம்.. பீல் குட் ரகம்..
என்னோட rating ...
1.சிவா மனசுல சக்தி
2.பசங்க
3.நாடோடிகள்
4.யாவரும் நலம்
5.அயன்
6.வெண்ணிலா கபடி குழு
7.நான் கடவுள்
மற்ற படங்களை இன்னும் பார்கவில்லை
நீங்கள் சொன்னதில் நிறைய ரசித்திருக்கிறேன் சிலது பிடிக்காமலும் போயிருக்கிறது Anyway நல்ல ஒரு Idea தந்திருக்கீர்கள்
சிவா மனசுல சக்தி வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்.
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படத்தை நீங்கள் பார்க்காதது ரொம்பவே புண்ணியம்! படம் பயங்கர dry! ஜவ்வு மாதிரி இழுத்தார்கள்! முடிவும் யூகிக்க முடிகிற ஒன்று!
Eeram,nadodigal irandume best movies. Siva manasule shakthi-worst in the list.
சம்பத்,
சிவா மனசுல சக்தி சிலருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... சிலருக்கு சுத்தமா பிடிக்கலை...
பாருங்க பாருங்க....
அருண்மொழிவர்மன்
சதிஷ் கண்ணன்,
உங்களுக்கு SMS பிடிச்சிருக்கா? முதல் இடத்தில் வேற வச்சிருக்க்கீங்க! வேற யாருக்கும் பிடிக்கலை.
என்ன ஐடியா, தர்ஷன்?
ரொம்ப முயற்சி எடுத்து பார்க்காததற்கு அதுவும் ஒரு காரணம், ரவிஷா...
சிவா மனசுல சக்தி, ரொம்ப பேருக்கு பிடிக்கலை போலிருக்கு..
boss neenga miss pannuna 3 padamum super
mudinthal parungalen
சிந்தனை செய் பாருங்க நண்பா. ரொம்ப நல்லா இருக்கும்.
மொக்கை படங்களை லிஸ்ட் போடலாமே!!!
செழியன்,
அப்படியா சொல்றீங்க? ட்ரை பண்றேன்.
ரமேஷ், எல்லாரும் புகழ்கிறாங்க... ஆனாலும் படம் ஓடலை.
மொக்கை லிஸ்ட், ஜெட்லி போட்டுயிருக்காரே!
சிவா மனசுல சக்தி விட காதல்னா சும்மா இல்ல மற்றும் திரு திரு துரு துரு ரசிக்க வைத்தது
Post a Comment