ஹிந்தியில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் நடித்து அடுத்த மாதம் வெளியாக போகும் படம், Paa. இதில் அபிஷேக்கிற்கு மகனாக அமிதாப் நடிக்கிறார். படத்தின் இயக்குனர் - பால்கி என்றழைக்கப்படும் பாலகிருஷ்ணன். ஒளிப்பதிவு - பி.சி.ஸ்ரீராம். இசை - இளையராஜா.
இந்த தகவல்களை கேட்கும்போது கூட ஒன்றும் தோன்றவில்லை. படத்தின் பாடல்களை கேட்டபிறகு, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறிவிட்டது.
எம்.பி.3 பிளேயரில் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஹிந்தி பாடல்களை இப்படி கேட்டதில்லை. தால், தில்ஸே பாடல்களை சிடியில் பைனரி தேய்ந்து டெசிமலாகும் வரை கேட்டு இருக்கிறேன். அதற்கு பிறகு, இப்பொழுது தான்.
மொத்த பாடல் எண்ணிக்கை - எட்டு. ஏற்கனவே தமிழில் வந்த மூன்று மெட்டுகள் (எனக்கு தெரிந்து) திரும்ப இசையமைக்கப்பட்டு இருக்கிறது. இன்னொரு மெட்டில் மூன்று பாடல்கள். அப்புறம் ஒரு தீம் மியூசிக். அந்த தீம் மியூசிக்கில் ஒரு பாடல். தீம் மியூசிக் கேட்கும்போது திருவாசகம் நினைவுக்கு வந்தது.
இதற்கு முன்னால், பால்கி இயக்கிய சீனி கம் படத்தையும் இதே குழு தான் உருவாக்கியது. அதில், குழலுதும் கண்ணனுக்கு, மன்றம் வந்த தென்றலுக்கு, விழிகளில் போன்ற தமிழ் பாடல்களின் மெட்டுகளே முழுக்க யூஸ் செய்யப்பட்டு இருந்தது.
இதில் ’அலைகள் ஓய்வதில்லை - புத்தம் புது காலை’யும், ’ஆட்டோ ராஜா - சந்தத்தில் பாடாத’வும், ’அது ஒரு கனாக்காலம் - காட்டு வழி’ பாடலும் திரும்ப இசையமைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள பாடல், படங்களில் ரிப்பீட் ஆவது இது ஆறாவது முறை. மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி என்று சுற்றி சுற்றி வந்துள்ளது. இளையராஜாவுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.
மனதை உருக்கும் மெட்டுக்கள், சிம்பொனி கம்போஸிங் என உன்னத தரம். பவதாரிணி ஒரு பாட்டு பாடியிருக்காங்க. அமிதாப் ஒரு பாட்டு பாடியிருக்காங்க. அதுவும் கதாபாத்திரத்தின் குரலில். இந்த பாடலும் தமிழில் வந்தது தான். அது ஒரு கனாக்காலத்தில் இளையராஜா பாடிய ‘காட்டு வழி’ பாடல்.
இயக்குனர் பால்கி, இளையராஜாவின் தீவிர இசை வெறியர் என சொல்லும் அளவுக்கு ரசிகர். திரை உலகிற்கு வருவதற்கு முன்பு, விளம்பர உலகில் பழம் தின்று கொட்டை போட்டவர். விளம்பரங்களுக்கும் இளையராஜாவின் இசையை (அனுமதியுடன்) பயன்படுத்தியிருக்கிறார்.சர்ப், பஜாஜ், கோககோலா, மேகி, ஐசிஐசிஐ என பல பிரபல விளம்பரங்களை உருவாக்கியவர்.
படத்தின் ட்ரெய்லர். படத்தின் தீம் இசையுடன்.
ஹிந்தி தெரியாது என சில நேரங்களில் தான் வருந்தியிருக்கிறேன். இப்பொழுது அருமையான பாடல்களின் அர்த்தம் புரியாமல். இதற்கு முன்னால், அழகான பெண்கள் ஹிந்தியில் ஏதேனும் கேட்கும்போது!
.
20 comments:
ராஜாவின் இசை கேட்பதில் உள்ள பரவசத்துக்கு இணையே இல்லை. அருமையாக பகிர்ந்துள்ளீர்கள். இந்த வாரம் பாலிவுட்டில் இசையுலகில் முதலிடத்தைப் பிடித்துவிட்டது பா. வடக்கில் இப்போது எங்கும் 'பா'டல் மயம்!
-வினோ
டவுன் லோடு லிங்க் குடுத்தா கோடி புண்ணியம் !
நன்றி வினோ
கருத்து கந்தசாமி,
கூகிள கேட்டா அள்ளிக்கொடுப்பாரே?
இளையராஜாவின் இசைக்கு என்றுமே நாம் அடிமைகள் தாம்....
Paa download link
http://www.mediafire.com/?zninnytyz1z
satrajmac@gmail.com
Paa download link
http://www.mediafire.com/?zninnytyz1z
Paa download link http://www.mediafire.com/?zninnytyz1z
ஏங்க இது "The Curious Case of Benjamin Button" படத்தோட தழுவல்ங்கறது உண்மையா? தீம் ம்யூசிக் நல்லா இருக்கு
நண்பர்கள் கவனத்திற்கு
தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....
ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா?
I am a avid fan of Ilayaraja. I am still awaiting orginally composed tune for a Hindi movie from Ilayaraja. Till then I am afraid he cannot make a mark in Bollywood. The songs in Pa are oft repeated tamil hit songs, which do not blend well with lyrics. It appears as if some compromise was made with lyrics!! A major disappointment.
நானும் கேட்டேன் இதைப்பற்றி பதிவு கூடபோட்டேன். பால்கின் விருப்பத்திற்காகவே இளையராஜா பழையை மெட்டுக்களை பயன்படுத்தியதாக பின்னூட்டத்தில் அறிந்தேன்.
நன்றி சரவணன்
ஆமாம், சீனி கம் அருமையான படம், பால்கி தமிழரா?
ஆமாம் பேநா மூடி
பகிர்வுக்கு நன்றி Satraj
தெரியலையே நாகா
அப்படியாகத்தான் இருக்கும் நாஞ்சில் பிரதாப்
பழூர் கார்த்தி,
பால்கி சென்னையில் படித்தவர் என்று தெரியும். பூர்வீகம் தெரியவில்லை.
"பா.." படம் பார்த்துட வேண்டியது தான்..
பால்கி கேட்டு கொண்டதற்காகவே பழைய பாடல்களின் மெட்டுகளை இளையராஜா பயன்படுத்தியதாக எதிலோ படித்தேன்.
சூப்பரப்பு. பாடல்களும் இந்த இடுகையும்.
Post a Comment