ஏ.சி.நீல்சன் என்றொரு கருத்து கணிப்பு நிறுவனம் உண்டல்லவா? அவர்கள் ஆசிய அளவிலான சர்வே ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். தலைப்பு - செரைக்கணுமா? வேண்டாமா? என்பது தான். வேற பொழப்பு இல்லையா என்கிறீர்களா? அதுதானே அவர்கள் பொழப்பு. சரி, சர்வே முடிவு என்ன?
இந்திய பெண்களுக்கு முழுக்க மழித்த ஆண்கள் தான் பிடிக்குமாம். அப்பத்தான் கிஸ் பண்ண விரும்புவார்களாம். சென்னை, மும்பை பெண்களுக்கு ரெண்டு மூணு நாளு தாடி இருந்தாலும் ஒகேவாம். எந்த ஊர் ஆண்கள் மீசை வைக்கிறார்கள்? எவ்வளவு நேரத்தில் சேவிங் பண்ணுகிறார்கள்? எந்த நடிகருக்கு மீசை எப்படி இருந்தால் நல்லாயிருக்கும்? என்றெல்லாம் நாட்டுக்கு தேவையான பல தகவல்கள் இந்த சர்வே முடிவின் மூலம் தெரியவந்திருக்கிறது.
---
ஆந்திராவில் காந்தி என்ற பெயருக்கு ரேஷன் கார்டு கொடுத்த செய்தியை படித்தீர்களா? நம்மூர்ல அடிக்கடி இந்த மாதிரி குமுதத்தில் செய்வார்கள். பாரதியாருக்கு சாதி சான்றிதழ், லைசென்ஸ் என்று. ஆனால், காந்திக்கு ரேஷன் கார்டு வாங்கியவர் பண்ணிய குசும்பு கொஞ்சம் ஓவர்.
ரேஷன் கார்டில் இருந்த புகைப்படம், காந்தியின் உண்மையான புகைப்படம். கொடுத்த பெயர், ’காந்தி தாத்தா’. அப்பா பெயர், ‘நாதுராம் கோட்சே’. முகவரி, நம்பர் 15, காந்தி தெரு, காந்தி சாலை. (விவேகானந்தர் குறுக்கு சந்து என்பதுபோல்!) இப்படித்தான் கொஞ்ச நாள் முன்பு, ஆந்திராவில் லட்சுமி என்ற பெண்ணுக்கு சானியா மிர்சா படம் போட்ட ரேஷன் கார்டு கொடுத்தாங்களாம்.
ஐயா, அதிகாரிகளே, மோசடி பண்ணுங்க. கொஞ்சம் நம்புற மாதிரி டீசண்டா பண்ணுங்க.
---
கனடாவில் ஐபிஎம் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நேதலி என்றொரு பெண்மணி, உடம்பு சரியில்லாததால் வேலைக்கு செல்லவில்லை. கடும் மன உளைச்சல் என்று காரணம் சொல்லி, அவருடைய காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து மாத மாதம் பணம் பெற்று வந்திருக்கிறார். ஒரு சமயத்தில் பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். என்ன காரணமென்றால், அவருடைய பேஸ்புக்கில் இருந்த புகைப்படங்களை காட்டியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்களில் அம்மணி பாரில் என்ஜாய் பண்ணியது, பர்த்டே பார்ட்டி கொண்டாடியது, விடுமுறையில் ஊருக்கு சென்றது எல்லாம் இருந்திருக்கிறது.
இனி என்ன பண்றது’ன்னு அம்மணி பேசாம விட்டிருக்கும்’ன்னு நினைக்கிறீங்களா? அதுதான் இல்லை. டாக்டர்தான் கவலையை மறக்க பாருக்கு போயி நண்பர்களுடன் ஜாலியா இருங்க. வேற வேற ஊருக்கு ட்ரிப் போயிட்டு வாங்க’ன்னு அட்வைஸ் பண்ணியிருக்காரு’ன்னு சொல்லி வக்கீல் வைச்சு போராடிட்டு இருக்காங்க.
அதானே, கவலையை மறக்க வேற என்ன பண்ண முடியும்?
---
கொலம்பஸுக்கு கல்யாணம் ஆகியிருந்தா என்னவாயிருக்கும்’ன்னு ஒரு மெயில் வந்தது.
அவரு வீட்டை விட்டு கிளம்பும் போது இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருந்திருக்குமாம்.
- ஏங்க, எங்க போறீங்க?
- யாரு கூட வருறது?
- எதுக்கு?
- எப்படி போறீங்க?
- என்னது கண்டுபிடிக்க?
- எதுக்கு நீங்க மட்டும் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்க்கறீங்க?
- நீங்க இல்லாம, நான் என்ன பண்றது?
- நானும் வரட்டுமா?
- எப்ப வருவீங்க?
- நைட் சாப்பாட்டுக்கு வந்திருவீங்களா?
- எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
- நீங்க வேணுமின்னே, என்னை சேர்க்காம பிளான் போட்டு இருக்கீங்க?
- எல்லாம் கடைசி நேரத்துல திட்டம் போடுறது?
- எதுக்குன்னு சொல்லுங்க?
- நான் எங்க அம்மா வீட்டுக்கு போகணும்.
- நீங்க தான் என்னை வந்து விட்டுட்டு போகணும்.
- நான் திரும்பி வர போறதில்லை.
- என்னது சரியா?
- எதுக்கு நீங்க என்னை தடுக்க மாட்டேங்கிறீங்க?
- அப்படி என்ன எழவை கண்டுபிடிக்க போறீங்களோ!
- எப்ப பாரு, இந்த மாதிரி வெட்டி வேலைத்தான்.
- போன தடவையும், இப்படித்தான் ஏதோ பண்ணுனீங்க.
- இப்பயெல்லாம் நீங்க இந்த மாதிரி வேலையைத்தான் பார்க்கிறீங்க.
- எனக்கு இன்னும் புரியலை. இன்னும் அப்படி கண்டுபிடிக்க என்ன இருக்கு?
இதுக்கு மேல, அவரு அமெரிக்காவை கண்டுப்பிடிச்சிருப்பாரு? சரி, அப்படியே கூட்டிட்டு போயிருந்தா?
:-)
.
9 comments:
ஆமா.. ஆந்திராவில் அனுஷ்கா பெயரில் அனுஷ்கா போட்டோ ஒட்டியே இலவச வீட்டு மனைப்பட்டா கொடுத்திருக்காங்களாம்... வேறு யாருக்கோ :)
<<<
- எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
- நான் எங்க அம்மா வீட்டுக்கு போகணும்.
- அப்படி என்ன எழவை கண்டுபிடிக்க போறீங்களோ!
- எப்ப பாரு, இந்த மாதிரி வெட்டி வேலைத்தான்.
- போன தடவையும், இப்படித்தான் ஏதோ பண்ணுனீங்க.
>>>
ஹிஹிஹி :)
கலக்கல் :D
கொலம்பஸ் மட்டும் கல்யாணம் பண்ணிட்டு, பொண்டாட்டி சொன்னதைக் கேட்டு வீட்டிலேயே இருந்திருந்தா அமெரிக்காவைக் கண்டுபிடிச்சிருக்க முடியாது; இப்ப இத்தனை பிரச்னைகளும் அமெரிக்காவை வச்சு வந்திருக்காது!!
அவர் பொண்டாட்டி சொல் கேக்காததினாலத்தானே நாமல்லாம் இப்ப அமெரிக்காவைப் பாத்து பயந்துகிட்டிருக்கோம்!!
ஹிஹி ஹிஹி ரசித்துப் படித்தேன்
ஓ! அப்படியா? பீர்...
வாங்க Mastan
ஹுஸைனம்மா,
சூப்பருங்க... எப்படி இப்படியெல்லாம்?
நன்றி தியா
Post a Comment