ரொம்ப நாட்களாக பார்க்க நினைத்த வெட்னஸ்டே, இப்பொழுது தான் பார்த்தேன். பல பேர் இவ்விரு படங்களை ஒப்பிட்டு எழுதிவிட்டார்கள். எல்லோருமெ வெட்னஸ்டேவைத்தான் சிறந்ததென சொல்லியிருந்தார்கள். உண்மைதான். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான அந்த இரண்டிலும் ஹீரோக்கள் இல்லாமல், சாதாரணமான மனிதர்களை காட்டியிருப்பது, படத்தில் சொல்லியிருக்கும் பிரச்சினையும் அதன் களமும் - ஒரிஜினல் படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்டுகள். ஆனாலும், தமிழ் ரீ-மேக்கை முழுவதுமாக மட்டம் தட்டிவிட முடியாது.
தமிழில் நன்றாக இருந்தது என்று நான் நினைக்கும் விஷயங்கள்.
கமலிடம் ‘நல்லா நடித்திருப்பது யார்? நீங்களா, நஸ்ருதீன் ஷாவா?” என்று கேட்டதற்கு சொல்லமுடியாது என்றார். நஸ்ருதீன் ஷா தான். தமிழில், நுனி நாக்கு ஆங்கிலம், எக்ஸ்ட்ரா மேதாவித்தனம் என ஒரு சூப்பர் ஹீரோவாக வந்தார் கமல். ஹிந்தியில், மாடிப்படி ஏறி முச்சிறைக்கும்படியான சாதாரண மனிதன். ஆனால், கமிஷனர் கேரக்டரில் கம்பீரமாக மோகன்லால் ஜெயிக்கிறார். ஹிந்தி கமிஷனர் அனுபம்கேர், ஏதோ சங்கீத வித்வான் போல் வெள்ளை ஜிப்பா போன்ற சட்டை அணிந்து அலுவலகத்தில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார். இப்படித்தான் மும்பை கமிஷனர் இருப்பாரோ?
மற்ற இரு போலீஸ்களும், தமிழில் சூப்பர் காப். ஹிந்தியில் ஒருவர் கான்ஸ்டபிள் போல இருந்தார். இன்னொருவர் பரவாயில்லை. கிட்டத்தட்ட கணேஷ் போல் தான். என்ன, குற்றவாளிகளை அடிக்கும்போது, சரியாக படிக்காத பையனை அடிக்கும் அப்பா போல் அடிக்கிறார்.
ஹிந்தியில் வரும் சி.எம்., சபாரி அணிந்த பாதுகாப்பு அதிகாரி போலிருந்தார். தமிழில், நிஜ வாய்ஸ் கொடுத்து, நிஜ வசனம் கொடுத்து (தேர்தல் வெற்றிக்கு எந்த பிரச்சினையும் வராதே?), நிஜ முதல்வரை நமது கற்பனைக்கு விட்டிருந்தார்கள்.
காம்பியராக வரும் நடிகை, ஹிந்தியில் ஒரு காமெடி பீஸ். தமிழில் நல்ல பிகர்! அதுமட்டுமில்லாமல், ஹிந்தியில் அந்த காம்பியர் எடுக்கும் தெருவோர பேட்டி, காமெடியாக எடுக்கவேண்டும் என்று நாடகத்தனமாக எடுக்கப்பட்டுயிருந்தது. பயந்த முட்டாளாக காண்பித்த பெண்ணை, தமிழில் தைரியமான அறிவார்ந்த பெண்ணாக காட்டியிருக்கிறார்கள். கமிஷனர் முன் சிகரெட் புகைக்கும் அளவுக்கு தைரியம்.
அதேப்போல் தான், பாதுகாப்பு கேட்டு வரும் சூப்பர் ஹீரோவை காட்டும் காட்சிகளும் - நகைச்சுவைக்கென்ற நாடகத்தனமான படமாக்கம்.
இசை - அழுத்தம் திருத்தமாக இருந்தது தமிழில் என்பது என் கருத்து. ஆனால், அதையும் முழுமையாக புதுமையாக இசையமைத்தது என்று சொல்ல முடியாது. ஹிந்தியை அடிப்படையாக வைத்து தான் ஸ்ருதி இசையமைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.
தமிழில் தீவிரவாதிகளை கொண்டு செல்ல கண்டெயினர் - ஹிந்தியில் ஸ்கூல் பஸ் போன்ற வாகனம். தமிழில் இறுதியில் குண்டு வெடிப்பது சுமோ - ஹிந்தியில் இரண்டு பெஞ்ச். இப்படி பெரிய படங்களுக்குரிய ரிச்னஸ், தமிழில் அதிகம். ஆனால், அதையும் யதார்த்தம் மீறிய காட்சியமைப்பாக குறை சொல்லலாம்.
ஹிந்தியில் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மனிதனின் உணர்ச்சிகரமான பேச்சு யதார்த்தமாக இறுதியில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. தமிழில் அந்த அளவிற்கு இல்லாததற்கு, தொடர் பாதிப்பு இங்கு வட இந்தியா போல் இல்லாதது எனலாம். ஆனால், அதற்கு படைப்பாளியை குற்றம் சொல்லமுடியாது. ரீ-மேக் செய்வதற்காக மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முயன்றிருக்கிறார்கள். கஷ்டமான வேலைதான். இந்த அளவிற்கு இழுத்து கட்டுவதற்கும் திறமை தேவைதான். ஆங்காங்கே லாஜிக் லூஸாக இருந்தாலும், தேசபக்தி எனும் ஸ்ட்ராங்க் முடிச்சு போட்டு கட்டியிருக்கிறார்கள்.
சுருக்கமாக சொல்வதென்றால், உள்ளூர் கதையின் நாயகனை தமிழில் உலக நாயகனாக்கியிருக்கிறார்கள். யதார்த்தமாக எடுக்கிறேன் என்று சிம்பிளாகவும், ஹிந்தி போல் வேறு யாரையாவது நடிக்க வைத்து எடுத்திருந்தாலும், இப்போது போல் வெற்றியடைந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.
.
8 comments:
மும்பையின் போலீஸ் கமிஷனர் தமிழன் தான் என நினைக்கிறேன்.
அப்படியா?
ஆமாம். அவர் பெயர் சிவானந்தம். தற்போதைய மும்பை கமிஶநர்.
எப்போதுமே ரீமேக் படங்கள் ஒரிஜிநல் படங்கள் போல் இருக்காது. அதனால் ஒப்பிட்டு பார்க்காமல் படம் பார்த்தால் இந்த மாதிரி தோன்றாது.
Nasuruddin shah தோற்ததில் 55 - 60 வயது போல் இருக்கிறார் எனவே முச்சு வாங்கும். கமல் 40 - 45 வயது போல் தோற்றம் முச்சு வாங்காது .
Nasuruddin shah தோற்ததில் 55 - 60 வயது போல் இருக்கிறார் எனவே முச்சு வாங்கும். கமல் 40 - 45வயது போல் தோற்றம் முச்சு வாங்காது .
http://en.wikipedia.org/wiki/Mumbai_Police
நன்றி சம்பத். எந்த படமாக இருந்தாலும், ஒரிஜினல்-ரீமேக் படங்களை காணும்போது ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க முடிவதில்லை. ஒப்பிடாமல் இருக்கவேண்டுமெனில், ஏதேனும் ஒரு படத்தை மட்டும் பார்க்க வேண்டும்.
Nowfal,
அதுவும் சரிதான்.
Post a Comment