
ரெண்டு நாள் முன்னாடி வாசித்தது.
எஸ்.ராமகிருஷ்ணன்
கோடம்பாக்கத்தில் உள்ள பழைய புத்தக கடை ஒன்றின் வாசலில் ஒரு நாய் சோர்ந்து படுத்துகிடந்தது. நோய்மையுற்ற நாய்களின் முகத்தில் விவரிக்கமுடியாத ஒரு பதற்றம் இருப்பதை கண்டிருக்கிறீர்களா. அது சொல்லற்ற வலி. அந்த நாய் காலை வெயிலை கூட அதிகபட்சமான ஒன்றாக நினைத்தது போல அதை விட்டு விலகி ஒரமாக படுத்து கிடந்தது. அருகில் போய் உட்கார்ந்து அதையே பார்த்து கொண்டிருந்தேன்.
நாயின் உடல் சீரற்று நடுங்கிக் கொண்டிருந்தது. அதன் காதுகள் மடங்கியிருந்தன. கண்கள் பழுத்து போய் ஒடுங்கியிருந்தது. தெருநாயாக இருக்க கூடும். தெருநாய்கள் நோய்வாய்படுவதை போல துரதிருஷ்டம் உலகில் இல்லை. அவை உடனடியாக வெறுக்கபடுகின்றன. நோய்மையின் போதும் துரத்தப்படுகின்றன. நாயின் நெற்றியை தடவிவிட்டபடியே இருந்தேன். உஷ்ணமான அதன் மூச்சு கைகளில் படிந்தது. உயிரியக்கம் என்பதை மனது அரிதாக தருணங்களில் மட்டுமே உணர்கிறது. அந்த நாயின் உடலில் இருந்து வரும் அதிர்வு என்னையும் பற்றிக் கொண்டது.
மேலும் படிக்க...
---
இன்று வாசித்தது.
ஜெயமோகன்
இன்று அலுவலகம் சென்றுகொண்டிருந்த வழியில் ஓர் அழுகைக்குரலைக் கேட்டேன். கிட்டத்தட்ட ஒரு ஐந்துவயதுக்குழந்தை கூவி அழுவதுபோல. சுற்றுமுற்றும்பார்த்தேன். காலிமனையின் ஓர் ஓரத்தில் ஆறேழுமாதம் வயதுள்ள ஒரு தெருநாய் அமர்ந்து அழுதுகொண்டிருந்தது. சாதாரண ஊளை அல்ல. வலியும் துயரமும் நிறைந்த தேம்பல், முறையீடு, மன்றாட்டு, அருகே நின்று அதைக்கூர்ந்து பார்த்தேன். ஒரு பின்னங்கால் முழுக்க வெந்துபோய் சதை வழண்டு வெளுத்து பிய்ந்து தொங்கியது. யாரோ கொதிக்கக் கொதிக்க எதையோ அதன் மீது வீசியிருக்கிறார்கள். ஏதாவது வீட்டுக்குள் நுழைந்து திருடி தின்றிருக்கும். இந்த காலனியில் அது பசியாற்றிக்கொள்ள வேறு வழியும் இல்லை.
நாட்டு நாய்களுக்கே உரிய கூரிய முகம். நரம்பு பரவி விடைத்த பெரிய காதுகள். வைக்கோல் நிறம். ஒல்லியான சிறு உடல். மோவாயும் அடிவயிறும் மட்டும் வெளுப்பு. வெந்த பின்னங்காலை தூக்கி வைத்துக்கொண்டு ஊன்றிய மூன்று கால்களும் வெடவெடக்க தலையை தூக்கி மூக்கை வானுக்கு எழுப்பி கண்மூடி அது அழுதது.
அங்கே நிற்க முடியவில்லை. தாண்டிச்சென்றேன். அழுகை தொடர்ந்து கேட்டது. விலகிச்செல்லச் செல்ல இன்னும் துல்லியமாகக் கேட்பதுபோல. என்ன ஒரு அழுகை! இத்தனை துக்கம் தோய்ந்த ஒரு அழுகையை நான் இதுவரைக்கும் கேட்டதில்லை.
மேலும் படிக்க...
---
இதை வாசித்தவுடன் முன்னாடி வாசித்த இது ஞாபகம் வந்தது.
சாரு நிவேதிதா
எனக்கானால் நாய்களைக் கண்டால் பிடிக்காது. இரவுகளில் இந்த நாய்கள் தான் பெரும் பிரச்சினை. மரணத்தின் வருகையை அறிவிப்பது போன்ற இதுகளின் ஊளைச் சத்தத்தைக் கேட்டு உறக்கம் கலைந்து எழும் அவந்திகா ' சூ... சூ.... ' என்ற அதுகளை விரட்டிக் கொண்டிருப்பது இன்னொரு பிரச்சினை.
.
.
.
தெருவில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டு மாடியில் உலர்த்தியிருந்த என் சட்டைகளைத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போட்டிருந்தன நாய்கள்.
எனக்கு சட்டைகள் என்றால் மிகவும் விருப்பம். அழகழகான சட்டைகள். மாடியிலிருந்து கீழே பார்த்தேன். அடுத்த வீட்டு மாடியின் படிக்கட்டில் நான்கைந்து நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. சத்தம் செய்யாமல் கீழே வந்தேன். எவர்சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் வைத்து நன்றாகக் கொதிக்க விட்டு , வெகு பத்திரமாக என் மீது சிந்தி விடாமல் இரண்டு பக்கமும் துணி கொடுத்து மேலே எடுத்துச் சென்று மாடியின் கைப்பிடிச் சுவரில் வைத்து விட்டு ஓசையெழுப்பாமல் கீழே பார்த்தேன். நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. வெந்நீரை அவற்றின் மேல் சாய்த்தேன். செவிச்சவ்வுகளே கிழிந்து கிழிந்து விடுகிறாற் போல் கத்திக் கொண்டு ஓடின நாய்கள்.
முழுவதும் படிக்க...
.
6 comments:
வணக்கம் சரவணா..
இந்த பதிவினையும் அதன் மூலங்களையும் படிக்கும் போது மீண்டுமொருமுறை இந்த எழுத்தாளர்களின் மீதான நம்பகத்தன்மை குறைகிறது. பாதி படிக்கும் போதே, இவர்களுக்கோ அல்லது இவர்கள் சந்திக்கும் மனிதர்களுக்கோ வேறு வேலையே இல்லையா எனும் அயர்ச்சி ஏற்ப்படுகிறது. ஒருவேளை எனக்கந்த சுதந்திரம் வழங்கப்படாததின் பொறாமையோ என்று என்னை நானே சந்தேகப்படும் படியாகிறது.
ஜெயமோகனின் எழுத்தை படிக்கையில் அந்த நாயை விட எனக்கு உபாதைகள் அதிகரிப்பது போல தோன்றுகிறது. ஆதரவாளர்கள் மன்னிக்க. இது என்னுடைய கருத்து. ஏற்கனவே எனக்கு சாருவின் மேல் ரொம்ப பெரிய அபிப்பிராயம். இதுல நீங்க வேற. ஆதரவற்ற தெரு நாய்களின் மேல் வெந்நீரை ஊற்றியதல்லாமல், அதை எழுத்தில் பதியவைத்தவனை ஒரு எழுத்தாளனாக அங்கீகரிக்க குறைந்த பட்சம் ஒரு காரணம் சொல்லுங்கள் சரவணா.
இதையெல்லாம் படிக்கும் போது தங்கள் இருப்பை தக்கவைக்க இவர்களெல்லாம் எவ்வளவு பிரயத்தனபடுகிறார்கள் என்று பாவமாக இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக ஆத்மாநாமின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
"உன் நண்பர்களை சொல்
நீ யாரென்று சொல்கிறேன் என்றான் ஒருவன்,
நீ யாரென்று சொல்
உன் நண்பர்களை பற்றி சொல்கிறேன் என்றான் மற்றொருவன்..
யாரும் எதையும் நிரூபிக்க வேண்டாம்..
ஆயாசமாக இருக்கிறது..
சற்று நேரம் சும்மா இருங்கள்..!!"
என்னவோ போங்க.. என் வாரத்தின் முதல் நாளை இனிமையாக(!!) துவக்கி வைத்த உங்களுக்கு நன்றி.
நானும் இந்த மாதிரி தெரு நாய்களை கண்டால் வருத்தப்பட்டு உடனடியாக Blue cross க்கு தொலை பேசியில் அழைத்தால் உடனடியாக அவர்கள் அந்த நாயை கவனித்து கொள்ளுவார்கள்.
Blue Cross Telephone No: 22354959.
All you need to do is just call the above number.
மனசுக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சு...
மகேந்திரன், காலையிலேயே சூடாக்கிட்டேனா? மன்னிச்சிக்கோங்க.
தகவலுக்கு நன்றி, ஆனந்த்
ayal nadukalil pani puriyum nangalum
oru vagayel intha geevarasikal pola than
saravanakumar
Post a Comment