Saturday, October 31, 2009

கண்டேன் காதலை

எனக்கும் பரத்துக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. இருந்தாலும், அவரை பார்க்க கடுப்பாக இருக்கிறது. அதிலும், சின்ன தளபதி எனும் டைட்டிலை பார்க்கும் போது...

ஹிந்தி படத்தை மொழிமாற்றம் செய்வதால், நேட்டிவிட்டி முக்கியம் என்று கதைக்களத்தை பார்த்து அமைத்திருக்கிறார்கள். ஆனால், நடிகர்கள் தேர்வில் குறை தெரிகிறது. பரத் பிஸினஸ்மேனாம். தமன்னா தேனி பொண்ணாம். இவ்வளவு இருந்தும், ஒருவரை வைத்து நேட்டிவிட்டி சரி செய்திருக்கிறார்கள். அழகம் பெருமாள்.

ஜெயம் ரவி நடித்திருக்கலாமோ? என்ன, லூசு போல் பேசிக்கொண்டு இருக்கும் தமன்னாவுடன் பார்த்திருந்தால், சந்தோஷ் சுப்ரமணியம் நினைவுக்கு வந்திருக்கும். தமன்னா, ஆனந்த தாண்டவம், அயனை தொடர்ந்து இதிலும் லூசு போல் நடித்து ஹாட்ரிக் அடித்திருக்கிறார். வாழ்த்துக்கள்!



நான் சந்தானத்தை நம்பித்தான் இந்த படத்துக்கு சென்றேன். நிறைய காட்சிகள் வைத்திருப்பதாக, இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும், அவர் தான் படத்தை கொஞ்சம் கலகலப்பாக்குகிறார். முதல்பாதியில் கொஞ்சமும். கடைசியில் கொஞ்சமும்.

இயக்குனர் கண்ணன், ஜெயம்கொண்டானில் பாடல்களை கலர்புல்லாக எடுத்திருந்தார். இதில், அப்படி எதுவும் இல்லை. வித்யாசாகரும் கைக்கொடுக்கவில்லை. இயக்குனருக்கே பிடிக்கவில்லையோ, என்னமோ... எந்த பாடலுமே முழுமையாக முடிந்தது போல் இல்லை.

ஒரு காட்சியில் தமன்னா, ரெண்டு ரூபாய்’ன்னா சும்மாவா? அதுல சாக்லேட் வாங்கலாம். தினகரன் வாங்கலாம் என்று சொல்லும் வசனத்தில் சக்சேனா தெரிந்தார்.

பண்ணியது ரீ-மேக். இதுல, டைட்டிலில் படத்தின் உரிமை அனைத்தும் சன் நிறுவனத்திற்காம். சன் டிவி விளம்பர மயக்கம் இப்பொழுது மக்களிடம் எடுபடுவதில்லை போலும். போட்டு வச்ச சம்சா அப்படியே இருந்தது.

வெற்றிப்படங்களில் ஒரு விஷயம் கவனிக்கலாம். இடைவெளிக்கு முன்னால் வரும் காட்சியோ, வசனமோ, வேறு ஒரு மாதிரி இடைவேளைக்கு பிறகு ரசிக்கும்படி வரும். இந்த படத்திலும் வருகிறது. கூடவே, கொட்டாவியும் சேர்ந்து வருகிறது.

பிகு: படம் பார்க்கும் போது, ஒரு காட்சியை ரசித்து பார்த்தேன். எழுதும் போது, அது என்னவென்று யோசித்து பார்க்கிறேன். நினைவுக்கே வரமாட்டேன்கிறது. அந்த அளவிற்கு இருக்கிறது படம்.

.

10 comments:

Anonymous said...

Oh..but I liked 'Jab We Met'. Kareena was really good in that movie..actually they would have portrayed her as a chatterbox not as a loosu..may be they changed it in the remake
-arthi

சரவணகுமரன் said...

நானும் பார்க்கணும்’ன்னு நினைச்சிகிட்டே இருந்தேன். கடைசிவரை முடியலை.

//may be they changed it in the remake//

அவுங்க மாத்தலை. அதுவா மாறிடிச்சு...

Aravind said...

//பண்ணியது ரீ-மேக். இதுல, டைட்டிலில் படத்தின் உரிமை அனைத்தும் சன் நிறுவனத்திற்காம். சன் டிவி விளம்பர மயக்கம் இப்பொழுது மக்களிடம் எடுபடுவதில்லை போலும். போட்டு வச்ச சம்சா அப்படியே இருந்தது.

I like this statement

Karthick said...

Nice one...but i dont understand the Samosa matter pls explain...Aadhavan padam innum paakalaya

Karthick said...

Nice one...but i dont understand the Samosa matter pls explain...Aadhavan padam innum paakalaya

நரேஷ் said...

படம் பார்த்த என் நண்பன் சொன்னது, மொக்கை படத்தையே மெகா ஹிட் படம்னு படம் போடுவாங்க சன் டிவிக் காரங்க.. இந்த படம் பி, சி செண்டருக்கு ஏத்த காஎடில இருந்து எல்லாமே இருக்குது...கண்டிப்பா வெற்றிய்டைஞ்சிரும்னு....

சின்ன தளபதி டைட்டில், உங்களுக்கும் கொலை வெறி ஏத்தியிருக்கா...தமன்னா ஓரளவு நல்லா செஞ்சிருக்கறதா சொன்னாங்க....ஆனா படத்தோட ஹீரோ சந்தானந்தானாம்...

முன்னனாச்சும் படத்தோட கதையைத்தான் காப்பி பண்ணாங்க...அப்புறம் சீனையும் சேத்து காப்பி பண்ணாங்க...இப்ப காஸ்ட்யூமையும் சேத்து பன்ணிடறாங்க....

சித்தார்த்தை வெச்சு பண்ணியிருந்தா ஓரளவு நல்லாயிருந்திருக்கும்னு என் எண்ணம்...ஓரளவு தெலுங்குல அவர் ஹிட் ஆனதுனால, கொஞ்சம் சம்பளம் அதிகம் கேட்கலாம்னு விட்டுட்டாங்களோ என்னமோ...என் வருத்தம் என்னான்னா, இந்த படத்துலியும் நகுலை ஹீரோவா போடாம போனாங்களேன்னுதான் :)))

சரவணகுமரன் said...

நன்றி அரவிந்த்

சரவணகுமரன் said...

கார்த்திக்,

கூட்டம் கம்மின்னு சொன்னேன்.

ஆதவன் பார்த்தாச்சே...

http://www.saravanakumaran.com/2009/10/blog-post_20.html

படிச்சிட்டு நீங்களும் திட்டக் கூடாது :-)

சரவணகுமரன் said...

ஆமாம் நரேஷ், இப்பெல்லாம் காமெடி நடிகர்கள் தான் படத்தை சுமக்கிறார்கள். ஆதவனில் வடிவேலு!

நீங்கள் சொன்னது போல், சித்தார்த் நல்ல சாய்ஸ்.

Anonymous said...

Very good Narration!!!
I felt the same as to the character of Tamanna!! Somebody else in the place of Bharath could have been better. I saw it the second day in Santham. You should here the Applause Santhanam receives when he makes his entry. UNBELIEVABLE!!!!!No were near "JAB WE MET"