Sunday, October 18, 2009

திரு திரு... துறு துறு...

இந்த படம் வெளிவந்து ரொம்ப நாள் ஆனாலும், தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. பாருங்க, தியேட்டர்'ல தான் பார்ப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் எனக்கெல்லாம், இந்த சினிமாக்காரர்கள் விழா எடுக்கமாட்டார்களா?

மல்டிப்ளெக்ஸ் ரசிகர்களை குறிவைத்து எடுத்திருக்கும் படம். நிறைய காமெடி, கொஞ்சம் சென்டிமென்ட், லைட்ட ரொமான்ஸ், ஒரு திரில்லர் சீன், பாதிக்கு மேல் சேஸ் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.

பெண் இயக்குனர் என்றால் நம்பி பார்க்கலாம் போல? நீட்டாக எடுத்திருக்கிறார். ஒரே படுக்கையில், நாயகனும் நாயகியும் தூங்கும் காட்சி, டீசண்டாகவும் அதே சமயம் குறும்பாகவும் இருந்தது. இந்த காட்சியை மற்ற இயக்குனர்கள் எப்படி எடுத்திருப்பார்கள் என்று நினைத்து பார்த்தேன். கண்டிப்பாக, ஒரு கனவு பாட்டு வந்திருக்கும்.



ஒவ்வொரு கேரக்டருக்கும் இயக்குனர் கொடுத்திருக்கும் குணாதிசியத்தை கடைசி வரை காட்சிகளில் மெயின்டெயின் செய்திருக்கிறார். கொள்ளையான வீடு போல் எப்போதும் வீட்டை வைத்திருக்கும் ஹீரோ, வினாடி கணக்கில் நேரத்தை சொல்லும் ஹீரோயின், பெயரை மறக்கும் மௌலி, ப்ராஸஸில் குறியாக இருக்கும் வாடிக்கையாளர் என்று கன்சிஸ்டன்ட் கேரக்டர்ஸ். கிளைமாக்சில் வரும் அஹிம்சாவாத சித்திரவதை ஐடியாக்கள், கலக்கல்.

எல்லோருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள். அஜ்மல் - அஞ்சாதே'க்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம். பாடல்கள் எல்லாம் ரொம்ப போர். கை ரிமோட்டை தேடுகிறது. அதேபோல், தெரு தெருவாக ரொம்ப நேரம் அலைவதும் கொஞ்சம் சலிப்பை வரவழைத்தது.

அந்த குழந்தை செம க்யுட். பார்த்து கொண்டே இருக்கலாம். படத்தையும் பிரமாண்ட எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் பார்க்கலாம்.

என் நண்பனின் கமென்ட் - பொய் சொல்ல போறோம் அளவுக்கு இல்லையே!

---

கோவா ட்ரைலர் பார்த்தேன். செம கலர்புல். வெங்கட்டுக்கு இதுவும் பயணக்கதையா? ரஜினி'ங்கற பெயர் டைட்டிலில் வந்தாலே வெயிட்டாத்தான் இருக்குது. எப்ப பாஸ், சாங் ரீலிஸ்?

.

6 comments:

ரோஸ்விக் said...

படத்தை ஒருதடவை பாத்துடுவோம். பகிர்விற்கு நன்றி.

http://thisaikaati.blogspot.com

கிரி said...

//பாருங்க, தியேட்டர்'ல தான் பார்ப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் எனக்கெல்லாம், இந்த சினிமாக்காரர்கள் விழா எடுக்கமாட்டார்களா?//

ரிப்பீட்டு :-)

ஜெட்லி... said...

நானும் இந்த படத்தை பார்க்கணும் அப்படின்னு
நினைச்சேன் ஆன ஷோ டைம் கரெக்ட்ஆ செட்
ஆகவில்லை... நல்ல விமர்சனம்

சரவணகுமரன் said...

நன்றி ரோஸ்விக்

சரவணகுமரன் said...

நன்றி கிரி

சரவணகுமரன் said...

வாங்க ஜெட்லி