நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, நோக்கியா தனது செங்கல்கட்டி மாடல் செல்போனை வெளியிட்டுயிருந்தது. என்னுடன் படித்தவர்கள் சிலர் அதை வைத்திருந்தார்கள். எனக்கு அப்போது அதன் வடிவமைப்பு, கால் ரேட் போன்றவற்றாலேயே செல்போன் மேல் எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை.
பிறகு, வேலைக்கு சேர்ந்தபிறகும், சுமார் ஆறுமாதக்காலம் செல்போன் வாங்கவில்லை. என் நண்பர்கள் கேட்கும்போது, வீட்டில் இருக்கும்போது வீட்டு நம்பருக்கு கால் பண்ணு. ஆபிஸ்ல இருக்கும்போது ஆபிஸ் நம்பருக்கு கால் பண்ணு என்று சொல்லி சமாளித்துவிடுவேன். ஒருகட்டத்தில், மொபைல் வாங்கு என்ற வேண்டுகோள் மிரட்டலாக மாறியது. நீ வாங்கு, இல்லாவிட்டால் நாங்கள் வாங்கி கொடுத்துவிடுவோம் என்றார்கள். அவ்வளவு நல்ல நண்பர்களா? என்று நினைக்கவேண்டாம். என் காசு கொஞ்சம் அவர்களிடம் இருந்தது!
எது வாங்கினாலும் கொஞ்சம் ரிசர்ச் பண்ணி வாங்குவேன். அப்படி ஒரு மாடலை ரிசர்ச் பண்ணி, பிறகு கடைக்கு சென்றபிறகு கூட வந்தவர்களால் மனம் மாறி, ஒன்றும் தெரியாத ஒரு மாடலை வாங்கினேன். அது வெளிவந்த வேகத்தில், ப்ளாபானா மாடல். ஆனாலும், அதை மூன்று வருடங்களுக்கு ஓட்டினேன். ஒரு கட்டத்தில், ஏதோ ஒரு வியாதி வந்து, பேட்டரி வீங்கி, உயிரிழந்தது.
படம் பிடிக்க டிஜிட்டல் கேமரா இருக்கிறது. பாட்டு கேட்க எம்பி3 ப்ளேயர் இருக்கிறது என்பதால் பேசிக் மாடல் மீது தான் என் விருப்பம். அதனால் லுக்காக இருக்கும் பேசிக் மாடல் போதும் என்று ஒரு போல்டர் டைப் மாடல் வாங்கினேன். இன்னும் அது என்னிடம் போராடிக்கொண்டிருக்கிறது.
---
"லீவு வேணும்."
"எதுக்கு?"
"கல்யாணத்துக்கு."
"யாருக்கு?"
"எனக்குத்தான்."
"எடுத்துக்க. ஆனா, மொபைல எப்பவும் ஆன்ல வை."
"முகூர்த்தம் சமயமாவது கால் பண்ணாதீங்க. தாலி கட்டும்போது எடுக்க முடியாது."
இப்படியே இல்லனாலும், இம்மாதிரி சம்பாஷணைகளை அலுவலகத்தில் கேட்டு இருக்கிறேன். செல்போனால் என்னத்தான் ஏகப்பட்ட நன்மைகள் என்றாலும், நம்மை அறியாமலே அது சுழற்றும் சுழலில் சிக்குகிறோம். போனில் பேசி, பேசி, பேச ஆளில்லாத போது வெறுமையாக உணருகிறோம். கூட்டமாக மற்றவர்கள் பிஸியாக இருக்கும் இடங்களில், நாம் தனியாக இருக்கும்போது, நமக்கு செல்போனே துணை. எடுத்து காதில் வைத்து பேச தொடங்கிவிடலாம். யாரும் அழைக்கவில்லை என்றாலும்.
போனில்லாமல் இருப்பது என்பது பேண்டஸி கதைக்கரு போல் இருக்கும் இக்காலத்தில், லீவு எடுத்து ஊருக்கு செல்லும்போது, அதை அவ்வளவாக கவனிக்கவே மாட்டேன். எப்பவாவது எடுத்து யார் கால் பண்ணி இருக்கிறார்கள் என்று மட்டும் பார்ப்பேன். சமயங்களில், இரு நாட்கள் தொடர்ந்து பார்க்காமல் கூட இருந்திருக்கிறேன். ரொம்ப நிம்மதியாக இருக்கும்.
---
அப்பாவிடம் செல்போன் கிடையாது. அவரும் தேவையாக உணர்ந்ததில்லை. ஆர்வமும் இல்லை. வாங்கலாம் என்று நான் நினைக்கும் சில சமயங்களிலும், எதுக்கு சந்தோஷமா இருக்கட்டுமே என்று விட்டு விடுவேன்.
சமீபகாலங்களில் பயணங்களின்போது, அதிகாலைநேர டெலிபோன் பூத் இல்லாத சமயங்களில், காத்திருக்கும் நிலை அவருக்கு ஏற்படுகிறது. சரி, அவருக்கும் ஒன்று வாங்கிவிடலாம் என்று முடிவு செய்து என் நண்பனை இழுத்துக்கொண்டு கடை கடையாக ஏறி இறங்கினேன். நடப்பு நிலவரம் தெரியாதில்லை?
இன்கமிங். அவுட் கோயிங். மெசேஜ் கூட யூஸ் ஆகாது. ஆரம்பக்கட்ட மொபைல் வாங்கலாம் என்று தேடினோம். 600-700 ரூபாய்க்கு மோட்டரோலோ மொபைல் கிடைக்கிறது. பார்க்க சகிக்கவில்லை. கூடியவிரைவில், சிம் கார்டு போல் மொபைலும் தெருவுக்கு தெரு கொடுக்க போகிறார்கள்.
நோக்கியா வாங்கத்தான் ஆர்வமிருந்தாலும், ஒரு கம்பெனியையும் விடவில்லை. நோக்கியா, மோட்டரோலொ, சாம்சங், எல்ஜி, சோனி என்று ஒரு ரவுண்ட் விட்டு, எல்ஜி KP107b என்ற மாடலை தேர்ந்தெடுத்தோம். அந்நேரத்திற்கு நல்ல மொபைலாக கண்ணுக்கு தெரிந்தது. கலர் ஸ்கிரின், ஒல்லி உடம்பு, கருப்பு தேகம், 900mAh பேட்டரி. ஸ்பிக்கர் போன். ரூபாய் 1250. போதும்.
ஒவ்வொரு முறையும் நோக்கியா வாங்க நினைத்து, மற்றவைகளுடன் ஒப்பிட்டு பார்த்து, வேறு மொபைல் தான் எடுக்கிறேன். எனக்கும் நோக்கியாவிற்கும் ஏனோ ஒத்து போவதில்லை.
இந்த மொபைலா? இதுல அது ப்ராபளமாச்சே என்று ஏதாவது சொல்லி என்னை வெறுப்பேத்திவிடவேண்டாம்.
12 comments:
//பேசி, பேசி, பேச ஆளில்லாத போது வெறுமையாக உணருகிறோம்//
silla samayangalil thoorathil
irrukum
nanbanidam pesa ninaithu arukil
irrpavanai
illaga vandi irrukuthu
பேசி, பேசி, பேச ஆளில்லாத போது வெறுமையாக உணருகிறோம்
sila nerthil thoorathil irrupavaridam
pesa ninaithu namma pakkathil
irrupavarkalai illaga vendi irrukirathu
//பேசி, பேசி, பேச ஆளில்லாத போது வெறுமையாக உணருகிறோம்//
silla samayangalil thoorathil
irrukum
nanbanidam pesa ninaithu arukil
irrpavanai
illaga vandi irrukuthu
நானும் இதுவரையிலும் உபயோகித்தவைகளில் முதல் அப்புறம் பத்துக்கு அப்பால் N73, அவ்வளவுதான் நோக்கியா வில். இன்று வரை வேறுதான் உபயோக்கிறேன். எல்லோரும் Nokia என பின்பற்றுவதும் என் தேர்வு மனப்பான்மைக்கு காரணமாய் இருக்கலாம். (நோக்கியா வில் 6 மாதம் வேலையும் பார்த்திருக்கிறேன்௦)...
பிரபாகர்.
//அவ்வளவு நல்ல நண்பர்களா? என்று நினைக்கவேண்டாம். என் காசு கொஞ்சம் அவர்களிடம் இருந்தது!//
:-))))
நான்தான் first
cellphone பற்றிய உங்கள் கண்ணோட்ட கட்டுரை அருமை
ஆமாம் செழியன்... அப்படித்தான் நிகழ்கிறது. சிலர், அருகில் இருப்பவர்களிடமும் செல்போனில் தான் பேசுகிறார்கள்.
பிரபாகர், பத்து மொபைலா?
வாங்க ராஜன்
heelo saravanakumaran sir
rommba nall eruku neenga elutharathu
super
by
Latha
நன்றி லதா
Nice one..
Post a Comment