ரொம்ப உயரத்தில் இருந்த திரை நட்சத்திரங்களை, சேட்டிலைட் சானல்கள் தான் மக்களுக்கு அருகில் கொண்டு வருகிறார்கள். திரை நட்சத்திரங்களுடன் மக்கள் நேரடியாக, தொலைபேசி மூலமாக கலந்துரையாடும் நிகழ்ச்சிகள் அதிகம் வர தொடங்கி இருக்கின்றன.
சென்ற வாரம், விஜய் டிவியில் கமல் பொது மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்று ஒளிப்பரப்பானது. அதேப்போல், கலைஞர் டிவியில் கமலுடன் முன்னணி இயக்குனர்கள் சேரன், அமீர், மிஷ்கின், லிங்குசாமி ஆகியோர் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றும் ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியில் உன்னைப்போல் ஒருவன் பற்றியும், உலக சினிமா பற்றியும் உரையாட போவதாக சொன்னார்கள். மேடைகளில் தீப்பொறி பறக்க பேசும் சேரன், அமீர் இருக்கிறார்களே என்று நானும் ஆர்வத்துடன் உட்கார்ந்தேன். ஆனால், அவர்கள் கமலை புகழ்ந்த புகழ்ச்சி இருக்கிறதே, விஜய் டிவியில் ஒரு பெண், கமலை கடவுள் என்று போற்றியதற்கு கொஞ்சமும் குறைவில்லை.
சேரன் உங்களை போல் நடிக்க ஆளில்லை என்கிறார். மிஷ்கின் வெட்னஸ்டே வேற, இது வேற என்கிறார். கமல் நிலைமையும் கஷ்டமாகத்தான் இருந்தது. தன்னடக்கமாக பேசுவதற்கும், இயல்பாக பேசுவதற்கும் ரொம்பவே சிரமப்பட்டார். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவரை ரணகளப்படுத்துகிறார்கள்.
---
விஜய் டிவியின் பலம், டாக் ஷோஸ். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் கலந்துகொள்பவர்களை பேச வைத்து, முடிந்தால் அழ வைத்து, அதை பரபரப்பாக்கி ஹிட் செய்வது. முடிந்தால் அழ வைப்பது என்று சொல்ல கூடாது. யாரை வேண்டுமானாலும் அழ வைத்து விடுவார்கள்.
இதையே விஜய் ஆதிராஜ் ஒரு பேட்டியில் சொன்னார். ஜோடி நம்பர் ஒன் இறுதி போட்டி நடக்கும் அன்று, அவர்களுக்கே தெரியாமல், அவர்கள் குழந்தையிடம், அப்பா, அம்மா ஏதோ போட்டிக்கு போகிறார்கள், விஷ் பண்ணுங்க என்று சொல்லி, குட்டி குழந்தையை செண்டிமெண்டாக பேச வைத்து, அதை ஒளிப்பரப்பி, இருவரையும் தங்களை அறியாமலேயே அழ வைத்தார்களாம். இந்த விஷயத்தில், விஜய் டிவி பெரிய ஆட்கள் என்று அவரே கூறினார்.
அதேப்போல், விஜய் டிவியின் பலமாக இருக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர் - கோபி நாத்.
கோபிக்கு மனோதத்துவ ரீதியில் என்ன பேசி அழ வைக்கலாம் என்று ட்ரெயினிங் கொடுத்திருப்பார்கள் போல. கமல் வந்திருந்த நிகழ்ச்சியில், ஒரு பெண்ணை அழ வைத்து, விட்டால் கமலும் அழுது விடுவார் என்று நிலைமையை உருவாக்கி, கடைசியில் கமலே மூடை மாத்துங்க என்றார். பிறகு, மும்பை தாக்குலை நேரில் கண்ட இன்னொருவர் கண்ணீருடன் பேசி, கமலை கதி கலங்க வைத்தார்.
ஆனால், விஜய் டிவி விடவில்லை. கமலுக்கு ரஜினி, மம்மூட்டி, மோகன்லால், வெங்கடேஷ் ஆகிய தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களை வைத்து நடத்திய பாராட்டு விழாவில் கமலை அழ வைத்து விட்டார்கள். இன்னும் அதை டிவியில் போடவில்லை. போடும்போது அதை ஒரு வருஷத்துக்கு இழுத்து போடுவார்கள்.
---
கொஞ்சம் நாள் முன்பு, நீயா நானா நிகழ்ச்சியில் ‘மனதால் முடிவெடுப்பவர்கள்-அறிவால் முடிவெடுப்பவர்கள்' என்பது போல ஒரு தலைப்பில் பேசினார்கள். அதில் ஒருவர் தான் தன் தந்தை இறந்தபோதும் அழவில்லை என்றார். அப்போது, கோபி எப்படியாவது அவரை அழ வைத்து விடலாம் என்று தொடர்ச்சியாக சில கேள்விகள் கேட்டார். ஆனால், அவர் அசரவில்லை. புன்னகையுடனே பதிலளித்து கொண்டிருந்தார்.
முடிவில் கோபி இப்படி சொன்னார். “இன்னும் நாலு கேள்வி கேட்டா, நீங்க அழுதுடுவீங்க. வேண்டாம்'ன்னு விடுறேன்.” வெளிப்படையாகவே தன் நோக்கத்தை, கோபி இப்படி கூறியது, எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
கமலிடம் திருமணம் பற்றிய சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்கும் தனித்தன்மைக்கூடிய தமிழ் தொகுப்பாளர் என்றாலும், அவ்வப்போது கோபியும் இப்படி கடுப்பை கிளப்புகிறார். இன்னொரு சம்பவம். விஜய் அவார்ட்ஸ் மேடையில் கௌதம் - ஹாரிஸை வைத்து 'பிரிந்தவர்கள் சேர்கிறார்கள்' என்று குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து சொல்வது போல் சொன்னது.
---
நமது உணர்ச்சிகளின் உச்சம், அழுகை. அதை வைத்து வியாபாரம் நடத்துகிறார்கள் விஜய் டிவி. எவ்வளவு நாளுக்கு, இப்படி அழுகையை பரபரப்பாக்கி நிகழ்ச்சிகள் பண்ணுவார்களோ?
மற்ற சேனல்களில், சீரியல்களில் நடிகர்களை அழ வைக்கிறார்கள் என்றால், விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில், ரியல் மனிதர்களையே அழ வைக்கிறார்கள். முன்னதை விட மோசமானது இது.
.
8 comments:
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் மற்ற டி.வி. கன்றாவிக்களுக்கு விஜய் மேல் என நினைக்கிறேன்.
பிரபாகர்.
title-la Vijay TV-nu potta nalla irrukum....
பிரபாகர், இந்த விஷயம் மட்டும் தான். மற்றபடி, நீங்கள் சொல்வது போல், நிகழ்ச்சிகளில் விஜய் டிவி தான் பெட்டர்.
வெங்கட், அது வந்து... விஜய் அழ வைக்கும் விஷயம் பற்றியும் எழுதலாம் என்று இருந்தேன். பிறகு, நீளம் கருதி விட்டு விட்டேன். இருந்தாலும், நீங்கள் சொன்னதற்காக மாற்றிவிட்டேன்.
லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.
http://ulalmannargal.blogspot.com/
விஜய் டிவியின் பெரும்பான்மையான ரியாலிட்டி ஷோக்களில் இது நடப்பது மிகக் கொடுமை....ஆரம்பத்தில் மற்ற சானல்களுடன் வித்தியாசப்பட்டு, திறமைகளைக் கண்டுபிடித்து அதை வெளிக் கொணரும் நிகழ்ச்சிகள், மற்றும் மிக அற்புதமான போட்டிகள் என்று இருந்த நிலை மாறி வெறும் ஊனர்சிக்குவியலாக மாறியது வேதனையான விஷயம்....இந்தக் காரணத்தாலேயே ஜோடி நம்ப்ர் 1 முதல் நீயா நானா வரை பல நிகழ்ச்சிகளை பல நிகழ்ச்சிகளை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்...
அந்த கமல் நிகழ்ச்சி நான் பார்க்கவில்லை...ஆனால் அதைப் பற்றி மாதவராஜ் ஒரு விமர்சனக் கட்டுரையை வைத்திருந்தார் பார்த்தீர்களா???
மகேந்திரன் ஆளையேக் காணோம்???
மாதவராஜ் கட்டுரை படித்தேன், நரேஷ். நன்றாக இருந்தது.
கமல் அலட்டாம எல்லா ப்ரோக்ரமுக்கும் போறதே, நல்லா எண்டர்டெயின்மெண்டாகத்தான் இருக்குது.
//மகேந்திரன் ஆளையேக் காணோம்???//
மகேந்திரன் பிஸியா வேலைப்பார்த்திட்டு இருக்காரு... :-)
ரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் மற்ற டி.வி. கன்றாவிக்களுக்கு விஜய் மேல் என நினைக்கிறேன்.
Post a Comment