Monday, October 26, 2009

கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 3

இப்படி நோட்டுப்புக்குல வரைஞ்சதாலே, அதை இம்ப்ரூவ் பண்ணிக்கணும்’ன்னு நினைச்சிக்கிட்டு ‘கார்ட்டூன் வரைவது எப்படி?”, “கேரிக்கேச்சர் வரைவது எப்படி?” போன்ற புத்தகங்களை எல்லாம் வாங்கியிருக்கேன். (எனக்கு தெரிஞ்ச வாத்தியார் ஒருத்தர்க்கிட்ட கடனுக்கு!) ஆனா, சொந்தமா எதையும் விதவிதமா வரைஞ்சு பார்த்தில்லை. அப்ப, வீட்டுல குமுதம் தான் வாங்குவாங்க. அதுல வருற படங்களை வரையுறது தான் வேலை.

முக சாயலை விட, இந்த போஸ், கெட்டப் இது யாரு’ன்னு காட்டிக்கொடுத்திடும். சூர்ய வம்சம் சரத்குமார்.


நெப்போலியன். ஏதோ, செல்வமணி படம்’ன்னு நினைக்குறேன்.



யாரை பார்த்து வரைஞ்சேன்’ன்னு தெரியலை. ஆனா இப்ப பார்க்க கொஞ்சம் அர்ஜீன் போல் இருப்பதால் (எனக்கு), இது அர்ஜீன். உங்களுக்கு எப்படி தெரியுதோ, அப்படி வைச்சுக்கலாம்.



மனோரமா. ஒரு தேர்தல்ல அவுங்க அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்தாங்க இல்ல? அப்ப, வரைஞ்சது. அப்பத்தானே, ஆச்சி ரஜினியை போட்டுத் தாக்குனது?




ரேவதி. சைஸ் கன்னாபின்னான்னு நான் வரையலை. இது ஒரு கேரிக்கேச்சரை பார்த்து வரைஞ்சது.



எனக்கே பார்க்க கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்ண? இது மீனாக்‌ஷி சேஷாத்ரி. ப்ளீஸ், நம்புங்க.



அப்புறம், குமுதத்தில் வர்ற அரசியல்வாதி கார்ட்டூன்ஸ், கதைக்கு ஓவியர்கள் வரைந்திருக்கும் படங்கள் இதையும் வரையுறதுண்டு. அடுத்த பதிவில் அவை.

ஒவ்வொரு ஒவியருக்கும், கதாபாத்திரங்களை வரைவதில் ஒரு பாணியிருக்கும். மாருதி வரையும் அந்த கதாநாயகிகளுக்கான ஒவியங்கள்... அப்பப்பா... என்ன அழகு... பிரம்மன், மாருதியின் ஆலோசனையைக் கேட்டு வேலையை பார்த்தால், உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்?

.

No comments: