Thursday, October 22, 2009

கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 2

இந்த பதிவுல, நான் நடிகர்களை வரைஞ்ச படங்கள். வரையும்போது, இப்படியெல்லாம் திட்டம் போட்டு வரையல. மூடுக்கு ஏத்த மாதிரி, கைக்கு கிடைஞ்ச படங்களை பார்த்து வரைஞ்சிட்டு இருந்தேன்.

அப்ப, நிறைய கிரிட்டிங் கார்டுகள சேர்த்துக்கிட்டு இருந்தேன். என் வயதை ஒட்டிய உறவினர்கள், நண்பர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நடிகர்களை பிடிக்கும். தீபாவளி, பொங்கலின் போது, அவர்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பி வைப்பேன். எனக்கு பிடிக்கலைன்னா கூட, நான் யாருக்கும் அனுப்பலன்னா கூட, எனக்கு கார்டு பிடிச்சிருந்தா வாங்கியிருவேன். இப்ப, எங்க போச்சோ?

இங்கே நான் வரைஞ்ச படங்களில் இருப்பது யாரு’ன்னு கேட்டு போட்டி வைக்கலாம். எதுக்கு அசிங்கப்பட்டுக்கிட்டு? நானே சொல்லியிருதேன்.

சிவாஜி. படிக்காதவன் பட கெட்டப். இதில் ரொம்ப கம்பீரமா இருக்கறாப்பல தோணும். சென்னையில சிலை வைக்கும்போது, இந்த மாதிரி ஏதாவது ஒரு கம்பீர கெட்டப்ல வச்சிருக்கலாம்’ன்னு தோணிச்சி. அந்த சிலை, சிவாஜி மாதிரியே இல்லை.

எம்ஜியாரு எங்கேன்னு கேட்கறீங்களா? அவரு அரசியல்வாதி செக்‌ஷன்ல வருவாரு. (ஓ! அது வேறயா?)



தலீவரு! ரஜினியை நிறைய வரைஞ்சிருக்கேன். எதையும் பார்க்காமக்கூட வரைவேன். m ஷேப்ல தலை முடி, ஒரு கூலிங் கிளாஸ், வாயை ஒட்டிய மீசை - இவ்ளோ வரைஞ்ச போதும். ரஜினி மாதிரி வந்திரும். இது கொஞ்சம் பழைய ரஜினி.



கமல் வரைய கஷ்டம் தான். தேவர் மகன் மாதிரி ஏதாவது ஸ்பெஷல் கெட்டப் போட்டா, ஈஸியா வரைஞ்சிரலாம். இல்லாட்டி, கண்டுபிடிக்குறது கஷ்டம் தான். இது கமல் மாதிரி இருக்கா?



இது நானே எதிர்பாராமல் விஜயகாந்த் போல் வந்த படம். ஏதோ ஒரு புத்தகத்தில் வந்த ஓவியத்தை பார்த்து வரைந்தது.



இந்த படத்தை இப்ப பார்க்கும்போது, ரொம்ப ஆச்சரியப்பட்டுட்டேன், பிரபு கழுத்துக்கு கீழே கொடுத்திருக்கிற ஷேடு பார்த்து. அதேப்போல், அடுத்த படத்தில் கார்த்திக் நாடிக்கு.



கார்த்திக். கிளாமரா இல்ல?




நல்லவேளை, விஜய், அஜித், விக்ரம், சூர்யா இவர்களேல்லாம் வந்த பிறகு, நான் வரையவில்லை. தப்பித்து விட்டார்கள். எழுதும்போது, அவர்களையும் இப்ப வரைந்தால் என்ன என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.

இன்னும் சில நடிகர்கள் இருக்கிறார்கள். நடிகைகளும் கூட. அவர்கள், அடுத்த பதிவில்...

.

12 comments:

ஆயில்யன் said...

எல்லா நடிகர்களின் படமும் ரொம்ப யோசிக்கவைக்காம டக்குன்னு கண்டுபுடிக்கமுடியுது சூப்பரூ! பட் கார்த்திக் தான் நம்ப முடியல !:) (ஒரு வேளை முடி அதிகம் இருக்கிறமாதிரி காமிச்சதாலயா இருக்குமோ?)

Anonymous said...

நன்றி சரவணா, நிஜமாகவே நீண்ட நாட்களுக்கு பிறகு மனசு விட்டு சிரித்தேன்.
அட்டகாசம். பிரபு ஏ கிளாஸ் ரகம். அற்புதமா வரைஞ்சிருக்கீங்க. அடுத்த பதிவு (நடிகைகள்னு நினைக்கிறேன்) பார்க்க ஆவலா காத்திருக்கேன்.
நீங்க ஏன் வரையரத தொடரக்கூடாது?

மகேந்திரன் said...

நன்றி சரவணா, நிஜமாகவே நீண்ட நாட்களுக்கு பிறகு மனசு விட்டு சிரித்தேன்.
அட்டகாசம். பிரபு ஏ கிளாஸ் ரகம். அற்புதமா வரைஞ்சிருக்கீங்க. அடுத்த பதிவு (நடிகைகள்னு நினைக்கிறேன்) பார்க்க ஆவலா காத்திருக்கேன்.
நீங்க ஏன் வரையரத தொடரக்கூடாது?

பின்னோக்கி said...

அழகான படங்கள். மனித முகங்களை (அதுவும் மூக்கு) வரைவது எவ்வளவு கடினம் என்பது தெரியும்.

Jawahar said...

படங்கள் பிரமாதமா இருக்கு.

http://kgjawarlal.wordpress.com

நரேஷ் said...

எனக்கெல்லாம் ஸ்கேல் இல்லாம நேரா கோடு போடக் கூடத் தெரியாது!!! வட்டம் கூட வட்டமா போட வராது....

நீங்க நல்லாவே வரையறீங்க...

மகேந்திரன் சொன்ன மாதிரி நீங்க கண்டினியூ பண்ணலாம்.....

சரவணகுமரன் said...

நன்றி பின்னோக்கி

சரவணகுமரன் said...

நன்றி Jawarlal சார்

சரவணகுமரன் said...

நன்றி ஆயில்யன்... கார்த்திக் அப்ப யூத்...

சரவணகுமரன் said...

மகேந்திரன்,

வரையலாம். எப்படியும், எதையாவது பார்த்து தான் வரைவேன். அப்படி வரையுறதுக்கு பதிலா, போட்டோவை சாப்ட்வேர் மூலமா வரைஞ்ச படம் மாதிரி மாத்திரலாமே?’ன்னு குறுக்கு புத்தி யோசிக்குது.

இது தான் டெக்னாலஜியால பாழாப்போறதுங்கிறது. எப்படி கால்குலேட்டர் வந்தப்பிறகு கணக்கு போட கஷ்டப்படுறோம், அப்படி!

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்... திரும்பவும் வரைய சொன்னதுக்கு ரொம்ப நன்றி...

அப்பவாவது நல்லா இல்லாட்டி, சின்ன பையன்னு விட்டுடுவாங்க. இப்படி, அப்படி கிடையாதே? தவிர, நான் இப்ப வரைஞ்சாலும், அதே ஸ்டேஜ்ல தான் இருக்கும்’ன்னு நினைக்குறேன்.

Anonymous said...

கார்த்திக்கும் கமலும் கண்டுபிடிக்க கஷ்டமாயிருந்துது.(கனாவுக்க கனா :))