நமக்கு சின்ன வயசில படம் வரையிறதுதான் பொழுதுபோக்கு. கையில கிடைக்கிற பேப்பருல எல்லாம் வரைய ஆரம்பிச்சுடுவேன். நோட்டு நோட்டா வரைஞ்சு தள்ளியிருக்கேன். சூப்பரா வரைவேன்னு சொல்ல முடியாது. சொந்தமா வரையுறத விட, பத்திரிக்கை, வாழ்த்து அட்டை போன்றவற்றை பார்த்து வரையுறது தான் அதிகம். சில சமயம், யாராவது கொஞ்சம் அசையாம அப்படியே இருந்தாலும், அவுங்களுக்கு தெரியாம வரையுறது உண்டு.
இப்ப, சமீபத்துல பரண்ல கிடந்த அந்த நோட்டுகள் கண்ல சிக்கிச்சு. சரி, டிஜிட்டைஸ் பண்ணிறலாம்’ன்னு இதோ பதிவுல,
முதல்ல சில சாமி படங்கள்... பர்ஸ்ட், பிள்ளையாரு. அப்புறம், அவரு பிரதர் முருகன். நம்ம பேவரைட் கடவுள்.
மயில் தோகையை நோட்டுக்குள்ள வச்சா வளரும்’ன்னு சொன்னாங்க. இன்னும் வளரல. ஒரு பத்து வருஷம் கழிச்சு பார்த்தா, வளர்ந்திருக்குமோ? :-)
கைலாய பிரதர்ஸ்.
முருகருக்கு கல்யாணம். ஏதாவது ஒரு கல்யாண பத்திரிக்கை பார்த்து வரைஞ்சிருப்பேன்’ன்னு நினைக்குறேன்.
நம்ம சிறுவயது ஒவியங்கள் எப்படி? ஸ்கூல் படிச்ச வரைக்கும் தான் வரைஞ்சேன். அப்புறம், ம்ஹும்.
தலைப்புல ஒண்ணு’ன்னு போட்டு இருக்குறதால, இன்னும் தொடரும். அடுத்தது, நம்ம கைவண்ணத்தில் திரை நட்சத்திரங்கள்.
.
6 comments:
நல்லா இருக்கு....
ஹை நல்லா இருக்கு.
முருகன் உங்களுக்கும் ஃப்ரெண்டா. நமக்கு அவரு ஜிகிரி தோஸ்து.
Wow!!!!!!!!!
-arthi
நன்றி ஸ்ரீதரன்.
நன்றி, புதுகைத் தென்றல்,
நமக்கும் அவரு பெஸ்ட் ப்ரெண்ட்.
தேங்க்ஸ் ஆர்த்தி...
Post a Comment