Wednesday, September 30, 2009
என்ன இது? சிறுபிள்ளைத்தனமா...
நான் முன்பு ஒரு கார்ட்டூன் கண்காட்சிக்கு போனதாக சொல்லியிருந்தேனே? அவர்கள் ஒரு கேலிச்சித்திரப்போட்டி நடத்துகிறார்கள்.
முதல் பரிசு - 1 லட்ச ரூபாய்.
போட்டி?
சோனியா, மன்மோகன் சிங்கை வைத்து கேலிச்சித்திரம் வரைய வேண்டுமாம்!
போட்டி நடத்துபவர்களுக்கு இவர்கள் மேல் என்ன கோபமோ?
---
நேற்று நடந்தது இது.
குஜராத் முதல்வர் மீட்டிங் ஹாலை விட்டு வெளியே வருகிறார். காத்திருந்த நிருபர் கூட்டம் ஓடி வருகிறது.
நிருபர்கள்: எங்களுக்காக இரு நிமிடங்கள் ஒதுக்க முடியுமா?
அங்கு வைத்திருந்த மைக்குகளுக்கு முன்னால் வந்து நிற்கிறார். ஒன்றும் பேசவில்லை.
நிருபர்கள்: எதுக்கு அமைதியா இருக்கீங்க?
மோடி: நீங்க தானே இரு நிமிடங்கள் கேட்டீங்க?
நிருபர்கள்: எங்க கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
அதற்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை. சிரித்தபடியே இரண்டு நிமிடங்கள் நிற்கிறார். இரண்டு நிமிடங்கள் கழித்து, ஒன்று கூறாமல் நகர்கிறார்.
---
டெய்லர் ப்ரான்ச் என்பவர் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனுடன் நடத்திய உரையாடல்களை வைத்து வெளியிட்டு இருக்கும் ’The Clinton Tapes: Wrestling History with the President' என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கார்கில் யுத்தத்தின் போது இந்திய - பாகிஸ்தான் தலைமைகள் இப்படி கேஷுவலாக பேசிக்கொண்டதாக கிளிண்டன் கூறினாராம்.
இந்தியா - ”பாகிஸ்தான் தோற்கும் நிலையில் இருக்கிறார்கள். அடுத்தக்கட்டமா, அவுங்கக்கிட்ட இருக்கிற அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், நம்ம ஆளுக 30-50 கோடி வரைக்கும் சாவாங்க. நாம பதிலுக்கு, நம்மக்கிட்ட இருக்கிற அணு ஆயுதத்தை பயன்படுத்தினா, மொத்த 12 கோடி பாகிஸ்தானியர்களையும் சாகடிச்சிடலாம். போர்லயும் ஜெயிச்சிடலாம்.”
பாகிஸ்தான் - “நமக்கு பிரச்சினையில்லைப்பா... மலைகள் தடுப்பா இருக்குது. இந்தியாவுக்கு தான் கஷ்டம். சமவெளியா இருக்குது”
இப்படித்தான் நானும் குழந்தையா இருக்கும் போது பேசிட்டு இருந்தேன்.
.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
// நாம பதிலுக்கு, நம்மக்கிட்ட இருக்கிற அணு ஆயுதத்தை பயன்படுத்தினா, மொத்த 12 கோடி பாகிஸ்தானியர்களையும் சாகடிச்சிடலாம். போர்லயும் ஜெயிச்சிடலாம்.” //
நம்ம அரசியல் வியாதிகளை அமெரிக்கா இன்னும் சரியா புரிஞ்சுக்கலை போல, அப்படியே பாகிஸ்தான் அனுகுண்டு போட்டாக்கூட நம்ம அரசியல்வாதிகள் இது பாபர் மசுதி இடிச்சதாலும்,இந்துத்துவா கொள்கையும், மோடி அரசியலும்தான் காரணம்முனு சிறுபான்மை ஓட்டுக்காக அறிக்கை விடுவாங்க, திருப்பி குண்டு போட மாட்டாங்க. இவனுங்க அம்மாவை தூக்கி போனா கூட இந்த அறிக்கைதான் வரும், ஏன்னா நம்ம ஆளுகளுக்கு கொள்கை(ஓட்டு) ரொம்ப முக்கியம்.
மோடி செம நாட்டி....
அறியாத தகவல்கள் நண்பா.....
Post a Comment