இனி வருங்காலத்தில் உலகத்தை இந்த கூகிளின் மாயக்கண்ணாடி மூலம் தான் பார்ப்போம் என்று இணையத்தில் ஒரு செய்தி வந்திருந்தது. ரொம்ப பழைய செய்திதான்.
இந்த கண்ணாடி போன்ற சாதனத்தால், எந்த ஒரு விஷயத்தையும் பார்க்கும் போது, அது சம்பந்தமான தகவல்கள் இதில் ஒளிரும்.
ஒரு கட்டிடத்தை பார்த்தால், அது பற்றிய தகவல்கள் இப்படி வரும்.
வீடுகளைப் பார்த்தால் எந்த பேங்கில் கடன் வாங்கி கட்டியது? இதுவரை எவ்வளவு கட்டப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் வருமோ?
கரகாட்டக்காரனில் செந்தில் கேட்ட கேள்விக்கு, இது பதில் சொல்லுமா? இந்த காரை இதுக்கு முன்னாடி...
ஏதாவது ஒரு மாடி மீது தொட்டால், அதில் யார் இருந்தார்கள். எப்ப வரை இருந்தார்கள் போன்ற தகவல்கள் வரும். இதை நீங்கள் குடும்பத்துடன் டாஸ்மாக்கை கடந்து செல்லும்போது பார்த்துவிடாதீர்கள். நீங்கள் அங்கே சென்ற வரலாறு முழுவதும் வந்துவிட போகிறது.
மீட்டிங் நடக்கும் அறையை சுலபமாக கண்டுப்பிடிக்கலாம். கவனம். ரெய்டுல மாட்டிக்க போறீங்க.
பத்திரிக்கை மீது வைத்து பார்த்தால், டிஜிட்டல் டிக்ஷனரியாக உருவெடுக்கும்.
புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லி கொடுக்கும். இதை வைத்து பார்த்தாவது, பின்நவீனத்துவ படைப்புகள் புரியுமா? இந்த சாதனம் ஹேங் ஆகிவிட கூடாது.
தெரியாத மொழியில் உள்ளதை, மொழிமாற்றம் செய்து படித்து கொள்ளலாம். சென்னை பாஷையை கண்டுக்கொள்ளுமா?
புத்தகத்திலும் தேடுதல் வசதி. இந்த வார ஆனந்த விகடனில் நம்ம படைப்பு வந்திருக்கிறதா? என்று பதிவர்கள் வாங்கியவுடன் தேடி கொள்ளலாம்.
ஒரு ஆப்பிளை பார்த்தால், அதில் என்னன்ன, எவ்வவ்ளவு உள்ளது என்று காட்டும். கூடவே ‘என் செல்ல பேரு ஆப்பிள்... நீ சைஸா கடிச்சிக்கோ”ன்னு பாட்டும் பாடும். நல்லா கவனிச்சிங்கன்னா, ஆப்பிள்க்குள்ள முமைத்கான் கூட தெரிவாங்க.
ஏதாவது உணவை பார்த்தால், அதில் உள்ள சத்துக்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். உங்க தெரு முனையில் உள்ள டீக்கடை மாஸ்டர் போட்ட உளுந்த வடையை பார்த்தீங்கன்னா, அது ரீபைண்ட் ஆயிலில் செய்ததா, இல்ல லாரி இன்ஜின் ஆயிலில் செய்ததா என்று தெரிந்து விடும்.
கூடவே கூகிளிடம் சில எதிர்பார்ப்புகள்.
1) அரசியல்வாதிகளை பார்த்தால் சொத்து மதிப்பு தெரியணும்.
2) நடிகர்களை பார்த்தால் வயசு தெரியணும்.
3) நடிகைகளை பார்க்கும்போது, மேக்கப் இல்லாத ஒரிஜினல் முகத்தை காட்டணும்.
4) டாக்டரை பார்க்கும்போது, அவரோட ஒரிஜினல் சர்டிபிகேட், மார்க் ஷீட் காட்டணும்.
5) ஜெட் ஏர்வேஸ் பைலட்டுக்கு உண்மையிலேயே வயித்த வலியா தெரிஞ்சுக்கணும்.
உங்க ஆசையை சொல்லுங்க...
.
10 comments:
கூகுளை விட, உங்க தேவைகள் சூப்பர்.. நாட்டுக்கு ரொம்ப தேவை.
நல்ல ஹை - டெக் தகவல் தல...
படிக்க (கேட்க) நல்லா தான் இருக்கு..பார்ப்போம்
யாரவது தலையில் வைத்தால் மண்டையில் மசால் இருக்கா ? இல்லையா ? ன்னு தெரிந்துவிடும்... ஹி... ஹி.. ஹி..
என் நண்பன் சரவணனுக்கு மூளை இருக்கா இல்லையான்னு சொல்லுமா?
ஹி ஹி... நன்றி ராமன்
நன்றி தல
வாங்க கிரி
ஆகாயமனிதன்,
பார்த்துங்க... மண்ணு எவ்வளவு இருக்குன்னு சொல்லிற போகுது...
ரமேஷ்,
சரவணன்’ங்கற பேரு இருக்குறதால, கண்டிப்பா மூளை நிறைய இருக்கும் :-)
நிறைய இருந்தா, அதுக்கு பேரு கொழுப்போ? !
Post a Comment