Tuesday, September 15, 2009

கடலை வித் கிழவி



நாகராஜுக்கு தெரிந்த ஒரே வேலை, வண்டி ஓட்டுவது. ரொம்ப ஸ்டைலாக ஓட்டுவான். கியரானாலும் சரி, ப்ரேக்கானாலும் சரி, வேகமாகத்தான் போடுவான். ஏனெனில், அவன் வயது அப்படி. வாடகை வேன் ஓட்ட வந்ததற்கு காரணம், அவன் முதலாளி சொன்ன ஒரு விஷயம் தான். அவர் சொன்னது உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை. நடப்பதைப் பார்த்தால், பொய்யாகத்தான் இருக்கும்.

திண்டுக்கல்லில் உள்ள ஒரு மில்லுக்கு வேலைக்கு செல்லும் பெண்களை காலையிலும் மாலையிலும் அழைத்து செல்ல வேண்டும் என்று ஆரம்பத்தில் கூறினார். யாரையாவது ஒருத்தியையோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களையோ பிக்கப் செய்து விடலாம் என்ற பேராசையுடன் சேர்ந்தான். ஆனால், இப்போது செய்துக்கொண்டிருக்கும் வேலையோ, வத்தலக்குண்டுவை சுற்றி இருக்கும் கிராமங்களில் இருந்து கிழவன், கிழவிகளை அழைத்துக்கொண்டு, வத்தலக்குண்டுவில் நடக்கும் முதியோர் கல்வி மையத்திற்கு அழைத்து செல்வதுதான்.

கலர்ல சினிமாஸ்கோப் படம் பார்க்க சென்றவனை, பழைய பிளாக் அண்ட் ஒயிட் படம் பார்க்க சொன்னால் என்ன செய்வான்? கோபத்துடனே வேலைக்கு சென்றான். படிக்க வந்த கிழவிகளை, “இந்த வயசில் இது தேவையா?” என்று எரிந்து கொட்டி கொண்டு இருப்பான். அன்றும் அப்படித்தான் திட்டிக்கொண்டு இருந்தான்.

அது மாலை ட்ரிப். டிரைவர் சீட்டுக்கு பின்னால் இருந்த ஒரு கிழவி, தோளைத் தொட்டு கூப்பிட்டாள்.

“என்னா?”

“இந்தா”

கடலை. நன்றாக உரித்த கடலைகளை கொடுத்தாள்.

’என் நேரம். நான் யாருக்கூட கடலைப் போட நினைத்தேன். இப்ப பாரு? இந்த கிழவிக எனக்கு கடலை கொடுக்குது’ என்று நினைத்துக்கொண்டே கடலையை வாங்கி வாயில் போட்டான்.

கொஞ்சம் தூரம் போனதும், அப்படியே கைமாறி மாறி இன்னும் கொஞ்சம் வந்து சேர்ந்தது.

’எதுக்கு இந்த கிழவிக எனக்கு கடலை கொடுக்குதுக? இதுகள திட்டாம இருக்குறதுக்கா? ஓ! கடலை கொடுத்து கரெக்ட் பண்ணுதோ?’ என்று நினைத்தவன், பின்னால் இருந்த கிழவியிடம் கேட்டான்.

”ஏன் கிழவி, எனக்கு கடலை கொடுக்குற?”

“பின்ன, இந்த பாழாப்போன வயசுல, பல்லு இல்லாத இந்த கிழவிக எப்படி இதை சாப்பிடும்?”

“அப்புறம் எதுக்கு நீ கடலை வாங்குற? உன்னாலத்தான் சாப்பிட முடியலையே?”

“ராசா, உனக்கு தெரியுது. அந்த எடுப்பட்ட பயலுகளுக்கு தெரியலையே!”

“யாரு?”

“அதான். அந்த பாடம் சொல்லு கொடுக்குற வாத்திமாருக. நாங்களெல்லாம் ஒழுங்கா பாடம் படிக்க வருறதால, எங்களுக்கு கடலை முட்டாய் கொடுத்தாக. அதை கடிச்சு சாப்பிட பல்லு எங்க? அதான் மென்னுட்டு, உனக்கு...”

“ஏய்! கிழவி...” கத்தியவாறு ப்ரேக்கை மிதித்தான்.

.

7 comments:

Anonymous said...

nalla kathai:)P

ammu.

பிரபாகர் said...

சரியான கடலை...

ஜெட்லி... said...

பாவம் நாகராஜு.....
நல்ல இருந்தது நண்பா..

வினோத் கெளதம் said...

Sema COmedy..

நரேஷ் said...

பாவம் நாகராஜூ!!!!

உங்கள் தோழி கிருத்திகா said...

அடுத்து பொறி வித் பாட்டியா????
நல்ல இருந்தது

சரவணகுமரன் said...

நன்றி அம்மு, பிரபாகர், ஜெட்லி, வினோத் கௌதம், நரேஷ், கிருத்திகா