ஷங்கர் இயக்கும்போது இருப்பது போல் அல்லாமல், புதுப் புது களங்களுடன், கருவுடன் படங்களை தயாரிக்கிறார். இந்த முறை த்ரில்லர். ஆனால் எனக்கென்னமோ, இந்த முறை ஷங்கருக்கு முழு திருப்தி இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.
முதல் பாதியில் செம க்ரிப்புடன் சென்ற படம், இரண்டாம் பாதியில் கட்டு குலைகிறது. அமானுஷ்ய காட்சிகள் கிறு கிறு... விறு விறு... இந்த சங்கதியை கடைசி வரை கொண்டு வந்திருந்தால் பரபரவென இருந்திருக்கும். பிற்பாதியில், அமானுஷ்யம் தொலைந்து போய், பேசி பேசி அவர்களுடன் சேர்த்து நம்மையும் டயர்ட் ஆக்குகிறார்கள்.
மிருகமாக வந்த ஆதி, ஹீரோ. அப்பிராணியாக வரும் நந்தா, வில்லன். ரீ-எண்ட்ரியில் ஆன்ட்டியாக வருவார் என்று நான் நினைத்திருந்த சிந்து, கல்லூரி மாணவியாக அதிர்ச்சியை அழகாக கொடுத்தார். காமெடி கதாபாத்திரங்கள் பண்ணியவர், குணசித்திர கதாபாத்திரங்கள் பண்ணியவர் என எல்லாரும் வில்லத்தனம் செய்திருக்கிறார்கள். சரண்யா மேனன், இதே சைஸ்ல தான் இருப்பாங்களா?
படத்தின் எல்லா ப்ரேமில் ஏதோ ஒரு திரவம், ஈரம் இருக்கிறது. சென்னையில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் மப்பும் மந்தாரமுமாகவே இருக்கிறது. அவ்ளோ குளிர்ச்சியாகவா சென்னை இருக்கிறது? எங்கும் ஈரம், எதிலும் ஈரம்... நண்பன் கைத் தவறி, பெப்சியைக் கொட்டி என் மேலும் ஈரம்.
ஒளிப்பதிவு அழகாக, இதமாக இருந்தது. இசை - பாடல்களில் யுவன் போலவும், பின்னணியில் ஹாரிஸ் போலவும் இருந்தது. நல்லவேளை, மூணே பாடல்கள். அதையும், அரைகுறையாக முடித்துகொண்டார்கள்.
படத்தின் டைட்டிலில் போடும் டிஸ்கி - இந்த கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் ‘வழக்கம் போல’ கற்பனையே. என்னடா, சிம்புதேவன் பீவர் இன்னும் தொடருதோ என்று நினைத்தேன். அதேப்போல், ஆங்கில படங்களில் வருவது போல், ப்ரொடக்ஷன் பேனரின் டிசைன் படத்தின் தீமிற்கு ஏற்றாற்போல் வருகிறது.
வசனம் ஷார்ப். (வீரப்பனை சுட்டோம்ன்னு சொன்னீங்க. நம்பினோம்ல, வந்து பார்க்கவா செய்தோம்?) நாயகி படத்தில் ஆங்காங்கே சுஜாதா புத்தகங்கள் படிக்கிறார். தங்கை - சிட்னி ஷெல்டன். முதல் பாதியில் ஒவ்வொரு காட்சியையும் சுவாரஸ்யமாக இணைத்திருந்தார்கள். படம் முழுக்க டைரக்டர் டச் என்று சொல்லும் வண்ணம் காட்சிகள்.
ஸ்ரீநாத்தின் குழந்தை மாஸ்க் போட்டுக்கொண்டு வரும் காட்சியில், தியேட்டர் டெரர்ராகி பிறகு கலகலப்பானது. அதேப்போல், தியேட்டர் டாய்லெட்டில் சாகுபவனின் தலை அந்த வாஷ்பேசின் திண்டில் அடிக்கும் போதும், குடை அந்த ஓல்ட் மேனின் கழுத்தில் குத்தும் போதும், தியேட்டர் ஜெர்க் ஆனது.
கிளைமாக்ஸ் நெருங்கிறது. ஒரு மெசெஜ் ரெடி பண்ணிருவோம்ன்னு ஒண்ணு சொல்றாங்க. அதாவது, காலம் மாறி போச்சு. காதல் எப்பனாலும் யாருக்குனாலும் வரும். உங்க வாழ்க்கைத்துணை கல்யாணத்திற்கு முன்பு காதலித்திருக்கலாம். பிரச்சினையில்லை. கல்யாணத்திற்கு பிறகு ஒழுங்கா இருந்தா போதும்.
படத்தில் ஆவி ஏற்றிய கிலியை விட கூடுதலாக இது ஏற்றியது.
---
என்னடா இது? வார வாரம் படம் பார்க்க வேண்டி இருக்கிறதே என்று அடுத்த வாரம் பார்க்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டு தியேட்டரில் சென்றால்,
உன்னைப்போல் ஒருவன் - அடுத்த வாரம்.
.
8 comments:
:)
திருப்தியான விமர்சனம்!
//படத்தில் ஆவி ஏற்றிய கிலியை விட கூடுதலாக இது ஏற்றியது//
உண்மைன்னாலும் படிக்கிற நமக்கும்தான்....
பிரபாகர்.
// ரீ-எண்ட்ரியில் ஆன்ட்டியாக வருவார் என்று நான் நினைத்திருந்த சிந்து, //
// சரண்யா மேனன், இதே சைஸ்ல தான் இருப்பாங்களா? //
// படத்தில் ஆவி ஏற்றிய கிலியை விட கூடுதலாக இது ஏற்றியது. //
சூப்பர் தலைவா.... நல்ல அலசல்......
Siru kuraigal irunthaalum , Intha kuzhuvinar urakka parattapada vendiyavargal.
நன்றி சென்ஷி
நன்றி பிரபாகர்
நன்றி சுகுமார்
நன்றி ராஜேஷ்
Post a Comment