நம் படத்தை யார் பார்ப்பார்கள் என்று திரையுலகினர் யோசிக்கவே முடியாதபடி செயல்பட்டு வரும் ஜெட்லி, என்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார்.
ஆங்கில & தமிழ் எழுத்து வரிசைகளின்படி அமைந்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். என்ன நோக்கத்தில் ஆரம்பித்து இருப்பார்கள் என்று பின்னோக்கி பார்த்தால், ஆங்கில பதிவுகளில் நூறு ஆங்கில கேள்விகள் என்று ஆரம்பித்தது, பிறகு மருவி மருவி ஆங்கில எழுத்துக்களின் படி 26 ஆக குறைந்து, பிறகு தமிழும் இணைக்கப்பட்டு (தமிழ்படுத்தியது சுமஜ்லா?), தற்போதைய நிலைக்கு வந்துள்ளது. கொக்கி போடுவதற்காக ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இப்ப, தமிழில் மட்டும் தொடராமா? (சுலபமாக்கிக்குவோம்!)
1. அன்புக்குரியவர்கள் : கடன் கொடுத்தவர்கள்.
2. ஆசைக்குரியவர் : கடன் வாங்கியவர்.
3. இலவசமாய் கிடைப்பது : இப்போதைக்கு ஸ்வைன் ப்ளு.
4. ஈதலில் சிறந்தது : எதிர்பார்ப்பில்லாத எதுவும். தேவையானபோது.
5. உலகத்தில் பயப்படுவது : உயரம்.
6. ஊக்கமளிப்பவர்கள் : குறை சொல்பவர்கள்.
7. எப்போதும் உடனிருப்பது : ச்சீய்...
8. ஏன் இந்த பதிவு : சும்மா (இந்த பதிவுன்னு இல்ல...)
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : ஐஸ்தான் (ஸ்டே கூல்)
10.ஒரு ரகசியம் : காத கொண்டாங்க. ஒண்ணு போதுமா?
11.ஓசையில் பிடித்தது : மழலை சிரிப்பு.
12.ஔவை மொழி ஒன்று : ஓதுவது ஒழியேல்.
13.(அ)ஃறிணையில் பிடித்தது: க்ரெடிட் கார்ட்.
நான் அழைக்கும் நால்வர்.
கார்த்திக் பிரபு
Jawarlal
தமிழ்ப்பறவை
ரமேஷ்
எப்படி வேண்டுமானாலும் தொடரலாம். :-)
.
10 comments:
செம நக்கலு!
என்னை அழைத்ததற்கு நன்றி. நான் நாளை காலையில் பதில் அனுப்புகிறேன்.
நன்றி வால்பையன்...
சரி ரமேஷ்
//நம் படத்தை யார் பார்ப்பார்கள் என்று திரையுலகினர் யோசிக்கவே முடியாதபடி செயல்பட்டு வரும் ஜெட்லி,//
:))..
ஏன் உனக்கு இந்த கொலைவெறி....
நடத்து...
//ஏன் உனக்கு இந்த கொலைவெறி....
நடத்து...
//
ஹி ஹி... :-))
தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்ததற்கு நன்றி சரவணன்.
முடிந்தளவு விரைவில் பதிவிடுகிறேன்...
http://sirippupolice.blogspot.com/2009/09/blog-post_13.html
http://thamizhparavai.blogspot.com/2009/12/blog-post_03.html
தொடர் பதிவிட்டு விட்டேன்... தாமதத்தைப் பொறுத்தருளவும்...
நன்றி தமிழ்ப்பறவை :-)
Post a Comment