இந்த படத்தின் கதையையோ, விமர்சனத்தையோ படித்துவிட்டு படத்தை பார்க்க முடியாது. நன்றாக இருக்காது. (எல்லா படங்களும் அப்படித்தானோ?) முதல் பாதியில் அவ்வளவு ஈர்ப்பில்லை. மலையாள படங்களுக்கே உரிய ட்விஸ்டுகள், இடைவேளையில் இருந்து ஆரம்பிக்கிறது. முதல் பாதியில் விட்ட விறுவிறுப்பை, இரண்டாம் பாதியில் ஒரளவுக்கு பிடித்திருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்தில் ஒரிஜினல் படத்தின் பெயர் போடுவதை, இதில்தான் பார்ப்பதாக ஞாபகம்.
யோசித்து பார்த்தால், மலையாள கதாசிரியர்களின் கதைகளில் சில ஒற்றுமைகள் உள்ளது. இதேப் போல் நாட் உள்ள மலையாள திரைப்படங்கள், ஏற்கனவே தமிழிலும் ரீமேக் ஆகியுள்ளது. என்னன்னு சொல்ல மாட்டேனே!
ப்ரித்விராஜ், ப்ரியாமணி ஸ்டுடண்ட்ஸா? என்ன ஒரு தைரியம் இந்த இயக்குனருக்கு?
ப்ரித்வி படம் முழுக்க முடியை முன்னாடி இழுத்து விட்டு கொண்டு வருகிறார். நெற்றியை சுருக்குகிறாராம். ஒரு சண்டைக்காட்சியில் கூட, தண்ணீரில் விழுந்தும் ப்ரித்வியின் முடி நனையவில்லை. இயக்குனர் ரொம்ப கவனமாக இருந்திருக்கிறார். ப்ரியாமணி லெக்சராக நடிக்க வேண்டியவர்.ஸ்டுடண்டாக ‘நடித்திருக்கிறார்’. குரலும் மேனரிசமும் டப்பாக இருக்கிறது.
சக்தியின் குரல் நன்றாக உள்ளது. அவரது இயல்பிற்கு ஏற்ற கேரக்டர் என்பதால் பொருத்தமாக இருந்தது. ‘பீல் குட்’ உணர்வை கொடுக்கிறார். கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல், இம்மாதிரி கதையில் கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்க ஒத்துக்கொண்டதற்கு பாராட்டுக்கள்.
பண்பான தந்தையாக பாக்யராஜ். அவருடைய வழக்கமான நடிப்பு. அவர் கடைசியில் கையை மேலே எழுப்பி பேசுவதை பார்த்து, என் முன்னால் இருந்தவரும் அதேப்போல் கையை ஆட்டி மோனோ ஆக்டிங் செய்து கொண்டிருந்தார். பாக்யராஜ் அழுகிறாரா சிரிக்கிறாரா என்று இன்னொருவருக்கு குழப்பம் வந்தது.
சக்தியின் காதலியாக வருபவர், இறுதியில் காரில் தலையை வெளியே நீட்டி, கையசைத்து செல்வது சூப்பர்ப்.
காமெடிக்கு யாரும் பெரிதாய் கைக்கொடுக்கவில்லை. லொள்ளு சபா ஜீவாவும் கூட.
பாடல்களை பற்றி ஏற்கனவே சொல்லியாச்சு. பாடலுக்காகவே நிறைய பேர் வந்திருப்பதை தியேட்டரில் காண முடிந்தது. படம் முழுக்கவே அழகாக படம் பிடித்திருக்கிறார்கள். பாடல்கள் இன்னும் அழகாக.
'பியா பியா' பாடலின் இடையே கிராமத்து மக்கள் வரும் சிறு சிறு காட்சிகள் நன்றாக இருந்தது. 'அழகாய் பூக்குதே' பாடலில் ஒளிப்பதிவும், லொக்கேஷனும், கலர் டோனும் வேறு உலகிற்கு அழைத்து செல்கிறது. பாடலுக்கு விசில் பறந்தது. பாடல்களை அழகாய் படம் பிடிக்க, இன்னுமொரு இயக்குனர் கிடைத்திருக்கிறார்.
எந்த கல்லூரி அது? ஒளிப்பதிவோடு வேலையை முடிக்காமல், பிற சேர்க்கையாக வண்ணங்களால் படத்தை இன்னமும் மெருக்கேற்றியிருக்கிறார்கள்.
நினைத்தாலே இனிக்கும் - வண்ணமயமான நினைவுகள்.
படங்களில் இருப்பவர்கள் - பாராட்டிற்குரிய படத்தின் தொழில்நுட்ப ஹீரோக்கள் - இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியனும்.
.
25 comments:
rajan said
antha collge PSNA college,dindigul.
padam pakkalma ?
பாராட்டியே விமர்சித்திருக்கிறீர்கள்...
இதுவும் நல்ல அப்ரோச்தான்...
பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவா? நல்லாத்தானிருக்கும்...’பிதாமகன்’ பண்ணியவர்...
படம் பார்க்கிறமாதிரி இருக்குமென நினைக்கிறேன்.
ராஜன்,
ஓ! அந்த கல்லூரியா?
படம் பாக்கலாம்’ங்க...
படம் பார்க்குற மாதிரிதாங்க இருக்குது, தமிழ்ப்பறவை
வணக்கம் சரவணகுமரன்
வித்தியாசமான விமர்சனம்
rajan said
நன்றி சரவணா!
rajan said
யப்பா என் பதிவுகள யாராவது பாத்துட்டு உங்க கருத்த சொல்லுங்க! பிடிச்சா தொடர்ந்து படிங்க, பிடிக்கலனா பிரேண்ட்சா இருப்போம்.
நல்ல விமர்சனம் நண்பா...
நன்றி Mr.vettiபைய்யன்
ராஜன், உங்க பதிவுகள் எதுன்னு சொல்லல!
நன்றி ஜெட்லி
அலசிப்புழிஞ்சி காயப்போட்டு அயர்ன் பண்ணி மடிச்சி வெச்சிட்டிங்க...
anyway, சன் மியுசிக்ல அவங்க ஆட்டத்த ஆரம்பிச்சிட்டாங்க..
படம் நல்லாருந்தாலும் நமக்கு போரடிக்குற மாதிரி ஓவர் டோஸ்
குடுத்துடுவாங்க.. ஒரு உபரித்தகவல்.. சன் டிவியின் துவக்க காலத்தில் அதில்
நிகழ்ச்சித்தொகுப்பாளரா இருந்த E.மாலா அவர்களின் காதல் கணவர் தான்
ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன். (நன்றி-காதல் படிக்கட்டுகள், விகடன் பிரசுரம்)
rajan said
my blog is rajaninkaruthukal.blogspot.com
என் விமர்சனத்தை படிக்க இங்கே க்ளிக்கவும்.
என் விமர்சனத்தை படிக்க இங்கே க்ளிக்கவும்.
மகேந்திரன்,
ஏதோ தோணினத சொல்லியிருக்கேன்.
ஒரு புதுத் தகவல் சொல்லி வழக்கம் போல கலக்கிட்டீங்க...
ராஜன்,
உங்க விமர்சனம் படிச்சேன். பல விஷயங்கள் ஒத்து போகுது.
பாடல்களுக்காகவே படம் பார்க்கலாம்....லோ பட்ஜெட் படம் என்பதையும் தாண்டி மனதில் நிற்கச் செய்யும் ஒளிப்பதிவு....
சனிக்கிழமையே பாத்துட்டேன், இன்னிக்குதான் பதிவு போட்டிருக்கேன்....
அழகாய் பூக்குதே பாடல் கண்ணுக்குள்ளியே நிக்குது!!!!
மத்தபடி சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது....
ஆமாங்க, நரேஷ்... பாடலும் ஒளிப்பதிவும் தான் படத்தின் பலம்...
நானறிந்த செய்தி!!!
படம் எடுத்து முடிந்தபின்பு, சன்டிவி நிறுவனத்தால், படத்தில் காமெடி குறைவு என்று வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதுதான் (இயக்குநரையும் மீறி) இந்த திருநங்கைகளை அவமானப்படுத்தும் காட்சி....
தல ரொம்ப நன்றி!
விமர்சனம் சரியா இருந்ததா?
கவிதைகள் பற்றி ஒண்ணுமே சொல்லலை சரவணா!
தொடர்ந்து படித்தும்,கருதது சொல்லியும் என்னை ஊக்கபடுத்துக்ள்!
நரேஷ்!
இந்த ஹக்ஸேணாவுக்கு direction ஆசை இருக்குமோநு தோணுது,நீந்க சொல்றத பாத்தா!!
http://rajaninkaruthukal.blogspot.com/
சரவணா
sir வேண்டாம் , நான் சின்ன பையன்
நரேஷ்,
அது சரி. இத வேற அவுங்க பண்றாங்களா?
ராஜன்,
கவிதைகள் படிக்கவில்லை. படிச்சிட்டு சொல்றேன்.
Post a Comment