Tuesday, September 1, 2009

நாட்டு சரக்கு - சினிமா ரசனை



ஜெயா டிவியில் ‘சினிமா டாக்ஸ்’ அப்படின்னு ஒரு நிகழ்ச்சியில சேரன் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஒரு புள்ளிவிவரம் சொன்னாரு. சினிமா ஒரு பொழுதுபோக்கு மீடியா மட்டுமே என்பவர்கள் 70% என்றும், இல்லை, அது ஒரு சமூக கருவி என்பது மீதி 30 சதவிகித்தினரின் எண்ணம் என்றும் கூறினார். எப்படி, எங்கே, இந்த சர்வே நடத்தினார் என்று தெரியவில்லை.

இவர் அந்த 30%க்காக படம் எடுக்கிறாராம். ஆட்டோகிராப், அழகி போன்ற படங்களெல்லாம் இந்த 30% த்தால் தான் ஓடியதாம். மற்றவர்கள் மாற வேண்டுமாம். கிட்டத்தட்ட, திருந்துங்க, மேலே ஏறி வாங்க என்ற ரேஞ்சில் பேசிக் கொண்டிருந்தார். (பள்ளிக்கூடத்தில் படம் பார்ப்பது எப்படி என்று க்ளாஸ் வைக்கலாமா? என்றெல்லாம் கேள்வி வந்தது)

எந்த படம் எடுத்தாலும், பார்க்கிற மாதிரி எடுத்தால் தான் பார்ப்பார்கள். இன்னாருக்கு இதுதான் பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ரசனை மாறுபடும். ஒவ்வொரு நேரத்திற்கும் மாறுபடும். எந்த படம், பெரும்பாலோனருக்கு பிடித்திருக்கிறதோ, அது வெற்றி பெறுகிறது.

ஒரு டவுட். எனக்கு அழகியும் பிடிக்கிறது. கில்லியும் பிடிக்கிறது. நான் எந்த கேட்டகிரி?

---

சக்கரக்கட்டி, கந்தசாமிக்கு முன் வந்த தாணுவின் படங்களைப் பற்றி சன் டிவியில் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். காட்சிகளையும் போடமாட்டார்கள். டாப் டென் லிஸ்ட்டிலும் இருக்காது.

அப்ப, ஏன்னு எனக்கு புரியலை.

இப்ப, கந்தசாமிக்கு சன் டிவியில் பலத்த ஆதரவு. படத்தின் டைட்டிலிலே, கலாநிதிமாறனுக்கு நன்றி சொல்கிறார்கள்.

இப்பவும், ஏன்னு எனக்கு புரியலை.

---

அடுத்தது ஜெயா டிவி.

ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில், சுஹாசினி ’கந்தசாமி’ படத்தை விமர்சனம் செய்தார். கொஞ்சம் நேரம் பார்த்தேன். பார்த்தவரைக்கும் படத்தை பற்றி நல்லதாகவே சொன்னார். நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம் என்றார். விக்ரம், ஸ்ரேயா, பிரபு, சுசி. கணேசன் என்று எல்லோரையும் புகழ்ந்தார். சிவாஜியில் ஸ்ரேயாவை கொஞ்சம் காரமாக விமர்சித்து இருப்பார் போல. இதில் அதை குறிப்பிட்டே, அவரை புகழ்ந்தார்.

சுசி கணேசன், ஷங்கரை மாதிரி இல்லாமல் அவருக்கு மேல் என்று சொல்லும்படி படத்தை எடுத்து இருக்கிறாராம். ஆனால், ரசிகர்களை சஸ்பென்ஸில் வைக்கும் ஷங்கரின் திரைக்கதை போல் இல்லையாம். பின் எந்த விஷயத்தில், ஷங்கரை மிஞ்சினாரோ?

அவரிடம் பேசும்போது, கணேஷ் என்றே அவரை அழைத்தார். கவனிக்க, சுசி கணேசன் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

---

சுசி கணேசன் ரொம்ப சந்தோஷமாக இருந்தார். ஒரு தினசரி பத்திரிக்கையை கொண்டு வந்திருந்தார். அதில், ஸ்விஸ் பேங்க்கில் இருந்து இந்திய பணத்தை பற்றிய தகவலை தர முடியாது என்று சொல்லி விட்டார்கள் என்று செய்தி வந்திருந்தது.

தான் இந்த ஸ்கிரிப்டை மூன்று வருடம் முன்பே எழுதிவிட்டதாகவும், தற்போது இது பற்றிய விழிப்புணர்வு வந்திருப்பதாகவும், ஒரு படைப்பாளியாக தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

கடந்த தேர்தலில், அத்வானி வெளிநாட்டில் இருக்கும் இந்திய பணத்தை கொண்டு வருவதை பற்றி வாக்குறுதி கொடுத்திருந்தார். ஒருவேளை, அவர் படத்தோட ஷுட்டிங் பார்த்திருப்பாரோ?

---

சிலர், தங்களுக்கு பிடித்தவாறு படம் எடுப்பார்கள். சிலர், ரசிகர்களுக்கு பிடித்தவாறு படம் எடுப்பார்கள்.

இப்ப, ட்ரெண்ட் - சன் டிவிக்கு பிடித்தவாறு படம் எடுப்பது. விஜயின் வேட்டைக்காரனும் சன் டிவியின் வெளியீடு.

சுதந்திர தினத்தன்று, சன் டிவியில் வந்த நகுலின் பேட்டியில், யாரெல்லாம் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று கேள்விக்கு, அவர் ரசிகர்களுடன் சேர்த்து சன் பிக்சர்ஸ் என்று சொன்னது பரிதாபமாக இருந்தது.

---

இந்த வாரம் ’நினைத்தாலே இனிக்கும்’ வெளிவருகிறது. பட பாடல்களை பற்றி சொன்னபோது, ஒரு குற்றம் செய்துவிட்டேன். அழகாய் பூக்குதே பாடலை பற்றி சொல்லிவிட்டு, பாடிய பிரசன்னா, ஜானகி ஐயர் (பெயர் குழப்பம் வரும் என்பதால், முழுதாய் சொல்ல வேண்டி இருக்கிறது) பற்றி சொல்லாமல் விட்டு விட்டேன். குறிப்பாய், ஜானகி உணர்வுகளை கொட்டி பாடியிருக்கிறார்.

”சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன்
உன்னாலே.....”

இந்த இடத்தை அவர் குரலில் கேட்டு பாருங்கள்.

அம்மணி, பாதி ஜோலியை முடிச்சிட்டாங்க...

.

15 comments:

thamizhparavai said...

எந்த டி.வி. விமர்சனமும் சரியில்லை. ஒரு சார்பாத்தான் இருக்கு. சுஹாசினி ரொம்ப அறிவாளி மாதிரி காட்டிக்கிறது சகிக்கலை...
//பாடிய பிரசன்னா, ஜானகி ஐயர் (பெயர் குழப்பம் வரும் என்பதால், முழுதாய் சொல்ல வேண்டி இருக்கிறது)//
இதே பேரை நான் சொன்னவிதம் சரியான்னு இங்க போய்ப் பாருங்க..
http://thamizhparavai.blogspot.com/2009/08/blog-post.html

Cable சங்கர் said...

கந்தசாமிய பத்தி சொம்படிக்க எவ்வளவு செலவு செஞ்சிருக்காஙக தெரியுமா..?

Raju said...

\\சக்கரக்கட்டி, கந்தசாமிக்கு முன் வந்த தாணுவின் படங்களைப் பற்றி சன் டிவியில் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். காட்சிகளையும் போடமாட்டார்கள். டாப் டென் லிஸ்ட்டிலும் இருக்காது.\\

தாணு ஒரு ர.ர‌.
அப்போ, பெரிய குடும்பம் ஒன்னா இருந்தாதால அவங்க‌டிவியில் இடமில்லை.
அப்பறம் தாய்மாமனும் மருமகனும் மதுரை மேட்டர்ல அடிச்சுக்கிட்டு
புதுசா இன்னோர் சேனல்ல தொடங்குனதால,
தாணு அரவணைக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட இதே ரேஞ்சுல நானும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.
:-)

IKrishs said...

//ஒரு டவுட். எனக்கு அழகியும் பிடிக்கிறது. கில்லியும் பிடிக்கிறது. நான் எந்த கேட்டகிரி?

Romaba naalave yenakkum indha doubt..
Krish

ஆயில்யன் said...

//கடந்த தேர்தலில், அத்வானி வெளிநாட்டில் இருக்கும் இந்திய பணத்தை கொண்டு வருவதை பற்றி வாக்குறுதி கொடுத்திருந்தார். ஒருவேளை, அவர் படத்தோட ஷுட்டிங் பார்த்திருப்பாரோ?//

LOL :))))

நரேஷ் said...

சுகாசினி என்ன வேணால்லும் பேசிட்டு போகட்டும் அதைப் பத்தில்லாம் எனக்கு கவலை இல்லை...ஆனா தயவுசெஞ்சு அவங்க திரை விமர்சனம் பண்றேன்னு சொல்லிக்காம இருந்தா போதும்....

சன் டிவி மேட்டரு உங்களுக்கு மட்டுமா புரியலை???? யாருக்குமே புரியலை...என்னமோ போங்க....

Jawahar said...

//ஒரு டவுட். எனக்கு அழகியும் பிடிக்கிறது. கில்லியும் பிடிக்கிறது. நான் எந்த கேட்டகிரி?//

என்னோட கேட்டகிரி!! நீங்கள் ஒரு தேர்ந்த ரசிகர் என்பதில் சந்தேகமில்லை....

http://kgjawarlal.wordpress.com

சரவணகுமரன் said...

சரியாச் சொல்லியிருக்கீங்க, தமிழ்ப்பறவை...

பாடல்கள் பற்றிய விமர்சனம் அருமை...

சரவணகுமரன் said...

ஓ! ரொம்பவா கேபிள் சார்?

சரவணகுமரன் said...

ர.ர.வா? அவரு மதிமுகவாச்சே?

டக்ளஸ், நாம ரெண்டு பேரும் சண்டே பொழுதுபோகாம டிவி பார்த்துட்டு, ஒரே மாதிரி எழுதியிருக்கிறோம்... :-)

சரவணகுமரன் said...

ஓ! நீங்களுமா கிருஷ்?

சரவணகுமரன் said...

வாங்க ஆயில்யன்

சரவணகுமரன் said...

நரேஷ், உங்களுக்கும் புரியலையா?

சரவணகுமரன் said...

Jawarlal,

நன்றி... நீங்களும் இந்த கேட்டகிரிதானா?

சரவணகுமரன் said...

என்னது? படம் பார்த்தா கார் கொடுக்காங்களா?