ரஜினி மாதிரி ஏழைகளுக்கு பணத்தை வாரி வழங்கணும், கமல் மாதிரி பெண் வேடம், தாத்தா வேடமெல்லாம் போடணும், அஜித் மாதிரி கூலிங் கிளாஸ், கோட் போட்டு நடக்கணும், சூர்யா மாதிரி வெளிநாட்டுக்கு போயி ஸ்மக்லிங் பண்ணனும் - இப்படியெல்லாம் விக்ரம் ஆசைப்பட்டு இருப்பாரு போல. ஒரே படத்துல அத்தனை ஆசையையும் நிறைவேத்தி வச்சிருக்காரு, சுசி கணேசன்.
சூப்பர் ஹீரோ படம்’ன்னு சொன்னது மட்டுமில்லாமல், முதல் ரீலிலேயே தெரிந்து விடுகிறது, இது லாஜிக் பார்க்காமல் பே’ன்னு பார்க்க வேண்டிய பேண்டஸி படம்’ன்னு. சில காட்சிகளிலேயே அந்த சுவாரஸ்யம் காணாமல் போயி, சீக்கிரம் விடுங்கடா, வீட்டுக்கு போகணும்’ன்னு அழ வைத்துவிடுகிறார்கள்.
ஸ்ரேயா வரும் காட்சிகள், எரிச்சலாக இருந்தது. ஒரு சீன்ல மட்டும் முழுசா மூடிக்கிட்டு வந்தாங்க. அதுலயும் கடைசில, அவுங்களே கிழிச்சிக்கிட்டாங்க. அவுங்க உடைய குறைச்ச மாதிரி, அவுங்க வந்த சீன்களையும் குறைச்சிருக்கலாம். அதேப்போல், மெக்ஸிகோ காட்சிகள். பிரமாண்டமா எடுக்குறேன்னு, இவ்ளோ சீன்ஸா எடுக்குறது? ஹீரோதான் பறக்குறாருன்னு பார்த்தா, இவுங்களும் பறக்குறாங்க.
வடிவேலுவின் காமெடி ட்ராக், படத்திற்கு அவ்வளவு பொருத்தம் இல்லை. ஆனாலும், படத்தில் வடிவேலு சிரித்தாலும் சரி, அழுதாலும் சரி, தியேட்டரில் மக்கள் குலுங்குகிறார்கள். இப்போது வரும் படங்களில், பிரபுவுக்கு என்று மறக்காமல் ஒரு கேரக்டர் வைத்து விடுகிறார்கள். இதிலும் மறக்கவில்லை.
தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களில் குத்து குத்து குத்தி எடுத்திருக்கிறார். பின்னணியில் அடித்து வெளுத்து வாங்கியிருக்கிறார். சில படங்கள் சரி இல்லாவிட்டாலும், அடுத்த பாட்டு எப்ப’ன்னு உட்கார்ந்திருப்பேன். இதில் ஒரு கட்டத்தில் சலிப்பாகிவிட்டது. ஸ்ரேயா கொடுமை தான் தாங்க முடியவில்லை என்றால், அந்த முமைத்கான் பாடலில் நடன அசைவுகள் - கண்றாவி.
சுசி கணேசன், திருட்டு பயலே’வை தொடர்ந்து இதிலும் அதேப்போல் ரகசியமாய் பின்தொடர்ந்து நடித்திருக்கிறார். விரும்புகிறேன், பைவ் ஸ்டார் என்று ‘அட’ போட வைத்த இயக்குனர் (என்னையை இல்ல!), இப்போது ஷங்கர் பாணியில் இங்கு வந்து நிற்கிறார். இனி எங்க போயி நிற்பாரோ?
ஆமாம், சுசி கணேசன் சார், நீங்க மணிரத்னம் சீடராச்சே!
கடவுள் பெயரில் உதவி செய்வது, சிட்டு பேப்பரில் எழுதிய வேண்டுதல்களை நிறைவேற்றுவது, கோழி வேடத்தில் செய்யும் கோணாங்கி மேஜிக் செயல்களுக்கு பின்னணி டெக்னாலஜி லாஜிக் கொடுப்பது போன்றவை நிமிர்ந்து உட்கார வைத்தாலும், உரிச்ச கோழியாய் ஸ்ரேயா, சலிப்படைய வைக்கும் நீளம் என்று மற்றவை நெளிய வைக்கிறது.
கொஞ்சம் வெட்டி ஒட்டு போட்டிருந்தால், கந்தல் குறைந்திருக்கும். தாணு நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சிங்கன்னா, போயி படத்தை பாருங்க. நீங்க நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சா...
மற்றவர் கண்ணீர் துடைப்பவனே, கடவுள்.
17 comments:
ஹையா ஜாலி ஜாலி - கூட்டணிக்கு ஒரு ஆளு கிடைச்சுட்டீங்க! யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!
//ஸ்ரேயா வரும் காட்சிகள், எரிச்சலாக இருந்தது. ஒரு சீன்ல மட்டும் முழுசா மூடிக்கிட்டு வந்தாங்க. அதுலயும் கடைசில, அவுங்களே கிழிச்சிக்கிட்டாங்க. அவுங்க உடைய குறைச்ச மாதிரி, அவுங்க வந்த சீன்களையும் குறைச்சிருக்கலாம்.//
தலைவா நீ இன்னும் வயசுக்குவர்லேனு நெனைக்கிறேன்
தாணு நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சிங்கன்னா, போயி படத்தை பாருங்க. நீங்க நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சா...//
கந்த சாமி படம் பாக்கப்போறேன்னு சொன்ன என் தோழிக்கு ஆல் த பெஸ்ட்
நொந்த சாமி ஆக திரும்ப வான்னு
ரிதமா சொன்னேன். :)))
முகில்,
கூட்டணிக்கு எக்கச்சக்கமா ஆட்கள் இருக்காங்க... :-)
புலிகேசி,
ஓ! இதுக்கு பேர்தான் வயசுக்கு வருறதா...? :-)
//ரிதமா சொன்னேன். :)))//
சூப்பருங்க... புதுகைத்தென்றல்
கந்தசாமி பார்த்து வெந்தசாமி ஆனவர்களின் குழுமத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்...
கூட்டணிக்கு எக்கச்சக்கமா ஆட்கள்
"present "
//கந்தசாமி பார்த்து வெந்தசாமி ஆனவர்களின் குழுமத்திற்கு //
இப்படி ஒரு குரூப்பா?... :-)
நன்றி, பிரசன்னா இராசன்
வாங்க, வாங்க... vettipaiyan
கந்தசாமி அதிரடியான அழகான அதிவேகமான காதலுடைய கதையுடைய கருத்துடைய சூப்பர் ஹிட் திரைப்படம்
இதெல்லாம் டூபே கந்தசாமி பிலோபே
//இதெல்லாம் டூபே கந்தசாமி பிலோபே//
:-))
என்ன ஒரு ஆச்சர்யம்..!!
படம் உங்களுக்கே போரடிக்கிறதா சரவணா?
அப்போ தீபாவளிக்கு.. "இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..."
படம் வெளிவரும் முன்னரே, ஓவர் சீனு ஒடம்புக்கு ஆகாதேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... என்னுடைய உள்ளுணர்வை நினைச்சு சந்தோஷப் படுறதா இல்லை தாணுவை நினைச்சு வருத்தப் படுறதான்னு தெரியலை...
சென்னைல கமலா தியேட்டருல 75 ரூவா டிக்கட்டுன்னு நண்பன் கூப்பிட்டான்...போவுலியே, 35 ரூவாக்கு டிக்கட் வர்றப்ப பாத்துக்கலாம்னு உட்டுட்டேன்...
அப்புறம் மகேந்திரன் சொன்னதுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டேய்....
மகேந்திரன்,
என்ன நக்கலா? :-)
தீபாவளிக்கு எல்லாம் போட மாட்டாங்க... படத்தை எப்படியும் ஓட்டிடுவாங்க... நான் கேட்டதுல இதுவரைக்கும் மூணு பேரு நல்லா இருக்குன்னு சொல்லியிருக்காங்க... ஒருவேளை ரொம்ப எதிர்பார்த்ததால பிடிக்கலை போல!
நரேஷ்,
ஒண்ணும் அவசரம் இல்ல... மெதுவா பாருங்க...
ஆனா ஒண்ணு, ரொம்ப வெயிட் பண்ணி படம் போயிட போகுது :-)
நான் பாத்து விமர்சனம் எழுதமுடியாம போச்சேன்னு ஒரே கவலையா இருக்கு
Post a Comment