Wednesday, August 26, 2009

ஆதவன் - இருக்கும் கூட்டத்தில் இன்னுமொருவன்



ஆதவன் படத்துடன் இண்டஸ்ட்ரியில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பணியாற்றியுள்ள இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை ஒன்று கூடியுள்ளது. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா, சிரஞ்சீவி, நாகார்ஜுனா என்று முன்னணி நாயகர்களுடன் மட்டுமில்லாமல், தமிழின் முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவருடனும் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்து பணியாற்றியுள்ளார். எனக்கு தெரிந்து 14 இசையமைப்பாளர்கள்.

1) இளையராஜா
2) ஏ.ஆர். ரஹ்மான்
3) தேவா
4) யுவன் சங்கர் ராஜா
5) ஹாரிஸ் ஜெயராஜ்
6) வித்யாசாகர்
7) தேவி ஸ்ரீ பிரசாத்
8) எஸ். ஏ. ராஜ்குமார்
9) சிற்பி
10) சபேஷ் முரளி
11) ஸ்ரீகாந்த் தேவா
12) மரகதமணி
13) சௌந்தர்யன்
14) ஹிமேஷ் ரேஷ்மயா

இது ரேட்டிங் இல்ல. சும்மா, ஒரு ப்ளோவுல எழுதினேன். :-)

எத்தனை இசையமைப்பாளர்களுடன் இணைந்தாலும், பாடல்களில் இது ரவிக்குமார் டைப் பாடல் என்று எந்த தனித்தன்மையையும் காண முடியாது. பாடலால் இவர் படம் ஹிட்டானது என்றும், எந்த படத்தையும் சொல்ல முடியாது. படம் ஹிட்டாகும். சேர்ந்து பாடலும் ஹிட்டாகும். ஏதோ ஒருவகையில் பெருமைப்பட்டு கொள்ளலாம்.

இப்போது, புது புது பாடகர்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், ஒரு பாடகரால் நிறைய பாட முடியாமல் போகிறது. ரசிகர்களுக்கும் தொடர்ச்சியாக தங்களுக்கு பிடித்த பாடகர்கள் பாடும் பாடலைக் கேட்க முடியாமல் போகிறது. இப்படின்னா அப்படி... அப்படின்னா இப்படி...

இப்படி பாடல்கள் குறைந்து போன பாடகர்களில் ஒருவர், மனோ. பாடகர்களில் விசேஷமானது, அவர்களின் தனித்தன்மையான குரல். இவர் அதை மாற்றி மாற்றி பாடுபவர். செண்பகமே, செண்பகமே என்று மென்மையான குரலிலும் பாடுவார். முக்காலா, அழகிய லைலா என்று இன்னொரு அதிரடி குரலிலும் பாடுவார். இந்த படத்தில், மாசி மாசி என்றொரு பாடலை மனோ தனது மாற்று குரலில் பாடியிருக்கிறார்.

இதேப்போல் திரைப்பாடல்கள் குறைந்து போன, இன்னொரு பாடகரான உன்னிகிருஷ்ணனும் ஒரு பாடல் இந்த படத்தில் பாடியுள்ளார். வாராயோ வாராயோ என்று ஒரு நல்ல மெலடி பாடல்.



ஹாரிஸ் பாடல்களில் புது புது வார்த்தைகள் கிடைக்கும். இதிலும் லமோதிமோ திபுதிபுரமோ ரமோதிபோ, அப்படின்னு ஏதேதோ சொல்லி ஹசிலி பிசிலி’ன்னு ஒரு பாட்டு ஆரம்பிக்குது. இதையெல்லாம் பாடகர்களுக்கு எப்படி சொல்லி கொடுப்பாங்களோ? எப்படித்தான் மறுபடி மறுபடி ஒரே மாதிரி பாட முடியுமோ?

ஹாரிஸ்கிட்ட ஓபனிங் சாங்’ன்னு சொன்னா, பழைய பாட்டு மாதிரிதான் போடுவாரா? பளபளக்கும் பகலா நீ - மாதிரியே இருக்குது, இந்த படத்தின் ஓபனிங் சாங் என்று நான் நினைக்கும் - டமக்கு டமக்கு.

வேற என்ன சொல்ல? பொதுவாவே, ரவிக்குமார் அவர் படப்பாடல்களில் ரொம்ப மெனக்கெட மாட்டார். இதிலும் அப்படியே.

ஹாரிஸ், எப்ப இந்த பேட்டர்ன் விட்டு வெளியே வருவாரோ? கிட்டார், கீ-போர்டு இதையெல்லாம் புடுங்கிட்டுத்தான் இசையமைக்க சொல்லணும்.

.

11 comments:

DHANS said...

heard eeram songs its very good compared to aathavan.

give it a try

நரேஷ் said...

இப்ப வர்ற ட்ரெய்லர்ல வர்ற அந்த ஒரே பாட்டு அப்படி ஒண்ணும் நல்லாயில்லியேன்னு நினைச்சேன்...

பாட்டு எப்புடியோ இருந்துட்டு போவுட்டும்...நயந்தாராவை ஏன் வர வர இவ்ளோ கொடுமையா காமிக்கிறாங்களேன்னு தெரியலை...ஒரு மாதிரி ட்ரையா, அதுவும் அந்த மேக்கப் கொடுமை....

இன்னைக்கு இன்னொரு ட்ரெய்லர் பாத்தேன், பல காட்சிகள் அயன் படத்தை ஞாபகமூட்டியது....

ஆனா செம மசாலாவா இருக்கும்னு பாத்தவுடனே தோணுச்சு....

நினைத்தாலே இனிக்கும் நு ஒரு படம், செப்டம்பர் 3 ல ரிலீஸ்...

அந்த பாட்டு கேட்டீங்களா??? இசை விஜய் ஆண்டனி!!!!

சரவணகுமரன் said...

DHANS,

ஈரம், இன்னும் கேட்கலைங்க...

பரிந்துரைக்கு நன்றி. சீக்கிரம் கேட்குறேன். :-)

சரவணகுமரன் said...

நரேஷ்,

நான் இன்னும் எந்த ட்ரெயலரும் பார்க்கலைலீங்க...

நினைத்தாலே இனிக்கும் கேட்டேன். மூணு பாட்டு பிடிச்சிருந்துச்சு. அத பத்தியும் பதிவு போட்டுடுறேன்... :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தேவி ஸ்ரீ பிரசாத் எந்த படத்துக்கு மியூசிக் போட்டார்னு சொல்ல முடியுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிற்பி எந்த படத்துக்கு மியூசிக் போட்டார்னு சொல்ல முடியுமா?

சரவணகுமரன் said...

ரமேஷ்,

தசாவதாரத்தின் பின்னணி இசை - தேவி ஸ்ரீ பிரசாத். பாடல்கள் - ஹிமேஷ்.

நாட்டமை படத்தின் இசை - சிற்பி. இன்னும் சில ஆரம்ப கால படங்கள் இருக்கிறது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரவணகுமரன் ரொம்ப நன்றி. சிரஞ்சீவி, நாகார்ஜுனா படம் என்னனு சொல்ல முடியுமா? நான் K.S.ரவிகுமரோட தீவிர ரசிகன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரவணகுமரன் ரொம்ப நன்றி. சிரஞ்சீவி, நாகார்ஜுனா படம் என்னனு சொல்ல முடியுமா? நான் K.S.ரவிகுமரோட தீவிர ரசிகன்

சரவணகுமரன் said...

ரமேஷ்,

இரண்டும் தெலுங்கு படங்கள்:

சிரஞ்சிவி - சிநேக கோஷம்
நாகர்ஜுனா - பவ நச்சடு

//நான் K.S.ரவிகுமரோட தீவிர ரசிகன்//

அப்ப இதை கண்டிப்பா பாருங்க.

http://www.saravanakumaran.com/2009/03/blog-post_05.html

Anonymous said...

ஹாரிஸ் ஜெயராஜ் நீங்கள் சொன்னது போல் "டமக்கு டமக்கு" பாடலை "பள பளக்கும்"பட்டு போல போட்டாரோ இல்யோ எனக்கு தெரியாது ஆனா"டமக்கு"பாடலில் வரும் இசை போல் ஒரு ஆங்கிலப்படத்தில் கேட்ட நியாபகம் உள்ளது..நல்லா ரிசர்ச் செஞ்சுருக்கீங்க கே.எஸ்.ரவிகுமார் பத்தி.:-)

அன்புடன்,
அம்மு.