Tuesday, August 25, 2009

நாட்டு சரக்கு - சல்மானின் மத நல்லிணக்கம்



ஸ்வைன் ப்ளூ இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள, ரூபாய் 700 இல் இருந்து ரூபாய் 2500 வரை ஆகுமாம். இந்திய மாநில அரசுகளில் முதல்முறையாக, கர்நாடகாவில் இச்சோதனைகளை அரசின் செலவில், இலவசமாக செய்து கொள்ளலாமாம்.

தமிழ்நாட்டில் ஏதேதோ இலவசமாக கொடுக்கிறார்கள். இதையும் கொடுக்கலாமே?

---

எனக்கு பயணங்கள் பிடிக்கும். ஜன்னல் இருக்கை என்றால் ரொம்ப, ரொம்ப. இதற்காக ரயிலில் முன்பதிவு செய்யும்போது, சைட் லோயரை விருப்பமாக தேர்வு செய்வேன். கிடைத்தால் கொஞ்ச நேரம் ஜாலியாக இருப்பேன். இருட்டும் போது, யாராவது வருவார்கள். லேடிஸ் சார், (இல்லையென்றால், வயதானவர்கள்) மேலே ஏறி படுக்க முடியாது, நீங்க கொஞ்சம் மேலே போங்களேன் என்பார்கள். நானும் மறுபேச்சில்லாமல், இடத்தை காலி செய்வேன். இதற்காகவா, நான் கஷ்டப்பட்டு முன்பதிவு செய்தேன்? என முன்பெல்லாம் தோணும்.

இப்ப பழக்கமாயிடுச்சு. கடந்த இரு வாரங்களாக, ரயிலில்தான் பயணம் செய்து கொண்டிருந்தேன். இரவு உணவை முடித்து விட்டு, காத்து கொண்டிருந்தேன். என்னடா, இன்னும் யாரும் வரலை என்று. நினைத்து கொண்டிருந்த போதே, டிடிஆர் வந்தார். எதிர்பார்த்ததை கேட்டார். இந்த முறை இரு குழந்தைகளுடன் ஒரு பெண்ணாம். சரியென்று மேலே ஏறினேன். இன்னொருமுறையும் அதேப்போல்.

சுயநலம் தான். நாளை என் அப்பாவோ, அம்மாவோ வருவாங்க, இல்லை?

---

அதிமுகவுக்கு என்னவாயிற்று என்றே தெரியவில்லை. கட்சியின் நிதிநிலை சரியில்லை என்கிறார்கள். இரண்டாம் வரிசை பெரிய தலைகள், அதிமுகவாலேயோ அல்லது திமுகவாலேயோ தூக்கப்படுகிறார்கள். அதிமுக பற்றி இன்னொரு ஆச்சரியமூட்டும் செய்தி கேட்டேன். கருணாநிதி பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறந்ததற்கு ஆதரவு தெரிவித்துள்ளார், ஜெயலலிதா.

’திருவள்ளுவரும் சர்வக்ஞரும் சமமானவர்களா?’ அப்படின்னு ஏதாச்சும் கேள்வி கேட்டு குற்றம் சாட்டியிருக்கலாமே? நான் சமீபத்தில் இப்படியொரு கேள்வி கேட்டு ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் கண்டேன். ஏதோ திருவள்ளுவர் சொல்லி, எல்லாம் கேட்டுட்ட மாதிரி.

---

அதிமுக இடைதேர்தலை புறக்கணிப்பதாக சொல்லியும், ஓட்டு சதவிகிதம் அதிகமாகத்தான் இருந்திருக்கிறது. இதையெல்லாம் யார் கேட்க போகிறார்கள்? ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில், ஓட்டுப்போட்ட மை கையில் இருந்தால், விரல் வெட்டப்படும் என்று சொல்லியும் மக்கள் ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.

சும்மா சொல்லி வதந்தி கிளப்பவில்லை. நிஜமாகவே, இருவரின் ஓட்டு போட்ட விரலை வெட்டி எறிந்திருக்கிறார்கள். நாமெல்லாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்? கையில நோட்டு. குத்துறேன் ஓட்டு.

---

ஷாருக்கானுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் இழைக்கப்பட்ட ’அநீதி’, இன்று இந்தியா முழுமைக்கும் தெரிந்திருக்கிறது. வேறு எந்த நாட்டிலும், மீடியா இது போன்ற செய்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லையாம். ஜப்பானில், இது எல்லாம் ஒரு செய்தி, என்று பேப்பரில் வரவே வராதாம்.

ரூல்ஸ் இஸ் ரூல்ஸ். அவ்வளவுதான். இது பரவாயில்லை. போன ஞாயிறு, நம்ம தினத்தந்தியின் தலைப்பு செய்திகளில் ஒன்று.

ரம்பா வீட்டின் முன் ரசிகர் ரகளை.

---

விநாயகர் சதுர்த்தி அன்று ஈச்சனாரி பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருந்தேன். அவருடைய பிறந்தநாள் என்பதால் (பிறந்தநாள் தானே?), அவருக்கு வாழ்த்து சொல்ல வழக்கத்திற்கு மாறான கூட்டம். ஆனால், நம்மூர் அரசியல் தலைவர்கள் பிறந்தநாளுக்கு, லைன் கட்டி நிற்பார்களே? அந்த அளவுக்கு இல்லை. சின்ன வரிசைதான் என்று எப்போதும் தோன்றும் வகையில் அனுப்பிகொண்டிருந்தார்கள்.

வெளியே ஒருவர், வந்திருந்தவர்கள் அனைவருக்கும் பிள்ளையார் பாடல்கள் கொண்ட வீடியோ டிவிடியை இலவசமாக வழங்கி கொண்டிருந்தார். தமிழக இல்லங்கள், டிவிடி ப்ளேயரில் தன்னிறைவு அடைந்துவிட்டது போலும்.

---

சல்மான்கான், விநாயகர் சதுர்த்திக்கு ஆடிபாடுவது போல் ஒரு பாடலை, ஹிந்தி போக்கிரிக்கு பிரபுதேவா எடுத்திருக்கிறார். சல்மான்கான், விநாயகர் சதுர்த்திக்கா? என்று ஆச்சரியப்பட வேண்டாம். சல்மான் உண்மையிலேயே பிள்ளையார் பக்தராம். அவருடைய குடும்பம் மத நல்லிணக்கத்தை பேணும் குடும்பம்.

சல்மான்கான் தந்தையின் முதல் மனைவி இந்து. இரண்டாம் மனைவி கிரிஸ்டியன். மத நல்லிணக்கம் தானே?

6 comments:

பீர் | Peer said...

நல்ல கலவை சரக்கு, சரவணகுமரன்.

நரேஷ் said...

செம மிக்ஸு....

உண்மையிலேயே சல்மான்கான் மத நல்லிணக்கத்தைப் பேணுபவர்தான்...

பத்திரிக்கைக் காரர்களைப் பத்தி சொன்னீங்களே செம நச்...(இப்புடி சொல்லிபுட்டீங்கங்கிறதுக்காக திருந்திடுவோமா என்ன????)

ஜன்னலோர இருக்கை ஒரு மெல்லிய கதை படித்த உணர்வு....

சரவணகுமரன் said...

நன்றி பீர்

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்

Unknown said...

<<
போன ஞாயிறு, நம்ம தினத்தந்தியின் தலைப்பு செய்திகளில் ஒன்று.

ரம்பா வீட்டின் முன் ரசிகர் ரகளை.
>>

சூப்பரு, தந்தில மட்டும் இல்லை, நம்ம ஊர்ல வார அத்துன பேப்பர்லயும் இதான் தலைப்பு செய்தி.

சரவணகுமரன் said...

ஆமாங்க Mastan