’எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா...’ என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி, வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க...
---
பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.
உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.
முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”
2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.
நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!
“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.
அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”
இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.
கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”
இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.
சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.
”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.
ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.
இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.
அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.
ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.
டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...
“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி.
”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”
கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!
கந்தசாமி ஆரம்பித்தார்.
மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.
“தூத்துக்குடி பக்கம். நீங்க?”
---
கூடிய விரைவில், இன்னொரு தத்துவத்தை பற்றி பார்க்கலாம்.
“நீ அடிச்சா பீஸு... நான் அடிச்சா மாஸு...”
.
29 comments:
nice story
yasavi
//கந்தசாமி ஆரம்பித்தார்.
மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.
“தூத்துக்குடி பக்கம். நீங்க?”//
படிச்சிட்டு சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் :)
கடைசி 6 வரிகளில் அடக்க முடியா சிரிப்பு :)))))
ஐயோ..ஐயோ..அய்யய்யோ...!!!
(எதுக்கு அலறுறேன்னு உங்களுக்கே தெரியும் சரவணா..)
ஹா ஹா ஹா ஹா
செம ரவுசு!!!
Mikavum arumai.
மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.
“தூத்துக்குடி பக்கம். நீங்க?”
அசத்திட்டேங்க போங்க
நாங்க தெற்காட்டு காரங்கலே...
சோ.ஞானசேகர்....
சாதாரணமாக படித்து கொண்டிருந்தேன். கடைசி சில வரிகளை படித்ததும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
Keep going.
நன்றி யாசவி...
நன்றி வெட்டிப்பயல்
நன்றி ஆயில்யன்
மகேந்திரன்,
தெரியுது, தெரியுது... :-)
நன்றி நரேஷ்
// Earn Staying Home said...
Mikavum arumai.
//
நன்றி
நன்றி Gnanasekar Somasundaram
இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.மிக நல்ல நகைச்சுவை சமீபத்தில் படித்ததில்
a very good laugh finally! Thx.
//கந்தசாமி ஆரம்பித்தார்.
மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.
“தூத்துக்குடி பக்கம். நீங்க?”//
அருமை. புதுமையான நகைச்சுவை.
என்ன கொடுமை சரவணன் இது :))))))))))))))))
:)))))))))))))))
நன்றி தங்கராசு நாகேந்திரன்
நன்றி யூர்கன் க்ருகியர்
நன்றி Sivakumar
நன்றி SUBBU
எதிர்பாராத குபீர் சிரிப்பை வரவழைத்த முடிவு....
வாழ்த்துக்கள்.....
Good.
இன்ஸ்பிரேஷன் இதுதானே?
....
மீரு மனவாடா?
அவுனண்டி!
நன்றி வலையேறி மூக்கன்...
Indian,
அப்படி ஒண்ணு இருக்குதா? இது ஒரு மின்னஞ்சலின் தமிழாக்கமே, சிறு மாற்றங்களுடன்.
ஆசான் தெரைகுரேங்க
கார்த்திக்,
வித்தியாசமான பாராட்டு. ரொம்ப நாள் கழிச்சு, இப்படி கேட்குறேன்.
Post a Comment