Saturday, August 15, 2009

பன்றி காய்ச்சலும் இன்ன பிற சங்கதிகளும்

கலைஞரிடம் நிருபர்கள்,

”பன்றி காய்ச்சலை தடுக்க என்ன செய்ய போகிறீர்கள்?”
கலைஞர் - ”பொது குழு கூடி முடிவெடுக்கும்.”
”தலைவா, இது கட்சி பிரச்சினையில்லை.”
கலைஞர் - ”அப்ப, அரசு உயர்மட்டக்குழு கூடி முடிவெடுக்கும்.”

உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பிறகு,

நிருபர்கள் - ”என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்?”
கலைஞர் - ”இது குறித்து முடிவெடுக்க, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.”

----

ஜெயலலிதா

“பன்றி காய்ச்சலுக்கு காரணம் - கருணாநிதியே!”

ஜோக்குக்கு சொல்லலீங்க... நிஜமாவே அவுங்க சொன்னது.

---

கம்யூனிஸ்டுகள்,

“மன்மோகன் சிங் அரசின் உலகமயமாக்க கொள்கையின் பின்விளைவுதான் இந்த பன்றி காய்ச்சல். இதற்கு முழு பொறுப்பும் ஏற்று காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும்.”

---

போன வார செய்தி...

பசியால் எந்த ஒரு இந்தியனும் பலியாக விட மாட்டோம். அதற்கான திட்டங்கள் அரசிடம் உள்ளது. - மன்மோகன் சிங் அறிவிப்பு.

இந்த வார செய்தி...

பன்றி காய்ச்சலால் 28 பேர் பலி.

---

டிவியில் எப்பொழுதும் கிரிக்கெட் ஸ்கோர் போடும் இடத்தில், இப்பொழுது பன்றி காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கையை போடுகிறார்கள். டிக்கெரிங் எப்பொழுதும் ஓடி கொண்டிருக்கிறது. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியவர்கள், பயங்காட்டியே சாகடித்து விடுவார்கள் போல் உள்ளது. ரொம்ப லைட்டாகவும் இருக்க வேண்டாம். அதற்காக ஒரேடியாக ஆட்டம் காண வைக்கவும் வேண்டாம்.

சரி... பன்றி காய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யலாம்? போர்க்கால அடிப்படையில், உடம்ப எந்த நோயும் தாக்காம, கிண்ணுன்னு வச்சிருங்க. அதுக்கு, சில சுலபமான வழிகள் பிளஸ் டவுட்களும்...

1) முடிந்தவரை கை கழுவிக்கொண்டே இருங்க. சும்மா இருக்கும்போது, கையை கண்ணுல, மூக்குல, வாயில வச்சு தேய்க்காம, வேற வேலையை பாருங்க.
(டவுட்: கை கழுவி முடிஞ்ச பிறகு, அந்த டேப் மூடுற இடத்துல கிருமி இருந்திச்சினா?)

2) நல்லா தூங்குங்க. நைட் உக்கார்ந்து ப்ளாக் எழுதுறதோ, படிக்குறதோ கண்டிப்பா கூடாது.
(பன்றி காய்ச்சல் மட்டுமில்லாம, இன்னும் பல வியாதிகள் வராது)

3) நிறைய தண்ணி குடிங்க. இது எப்பவும் பண்ண வேண்டியது. அட்லீஸ்ட், இப்பவாவது பண்ணுங்க.
(தண்ணின்னா H2O!.)

4) இது எல்லாமே உடம்பு நல்லா எதிர்ப்பு சக்தியோடு இருக்குறதுக்காக. நல்லா சுகாதரமான, சத்தான சாப்பாடு சாப்பிடுங்க. சளி பிடிக்குற மாதிரியான ஐட்டங்களை தவிர்க்க பாருங்க.
(சுகாதாரமான உணவு என்றால் ஹோட்டல்'ல சாப்பிட கூடாதா? இது ரொம்ப கஷ்டம்)

5) இந்த சமயமாவது சரக்கடிக்காதீங்க.
(சரக்கடிக்கிறதால, உங்களுக்கு எல்லோரையும் எதிர்க்கிற சக்தி வரலாம். ஆனா, உடம்புல எதிர்ப்பு சக்தி குறையுமாம்.)

6) எக்ஸசைஸ் பண்ணுவீங்களா? இல்லாட்டி, வாரத்துக்கு மூணு-நாலு நாளு, அரை மணி நேரம் நடங்க.
(எங்க நடக்குறதா? ஆபிஸ் மாடிப்படில ஏறி இறங்குங்க. இல்லாட்டி, கேர்ள் ப்ரண்டோடு உக்கார்ந்து பேசிவீங்களே, அந்த பார்க்குல நடந்துக்கிட்டே பேசுங்க.)

7) யாராவது Hன்னா, S ஆயிடுங்க. ஒரே தட்டுல போட்டு சாப்பிடுற அளவுக்கு ப்ரண்டா இருந்தாலும், கொஞ்ச நாள் ரெண்டு தட்டுல சாப்பிடுங்க.

8) தியேட்டர், மால் எல்லாம் அவசியம் இருந்தா, குழந்தைகளை அழைச்சிட்டு போங்க. மொக்கையை வீட்டுல இருந்தே போடுங்க.
(நம்மூர் தியேட்டர் டாய்லட்டுக்குள்ள, சும்மாவே மாஸ்க் போட்டுட்டுதான் போக வேண்டி இருக்கும்.)

9) இதுவரை சொன்னது, டாக்டர்கள் பரிந்துரைத்தது. ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் என்ன சொல்றாருன்னா, கோளறு பதிகம் படிக்கணுமாம். அதிருத்ர யாகம் நடத்தணுமாம்.



---

இந்த சமயத்துல ஊருக்கு போனேன். நிறைய பேரு மாஸ்க் போட்டுட்டு போனாங்க. நானும் கர்ச்சிப் கட்டிட்டு பஸ்'ல ஏறினேன். கொஞ்சம் தயக்கமாதான் இருந்தது. வித்தியாசமா பார்ப்பாங்களே'ன்னு. பஸ்'ல ஏற்கனவே சில முகமூடிகள் இருந்தார்கள்.

நிஜமாவே முகமூடி கொள்ளையர்கள் வழியை மறிச்சா கூட, 'சும்மா காமெடி பண்ணாதீங்க'ன்னு சொல்லிட்டு போற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். மனிதர்களை விடுங்க, நாயே கண்டுக்காம போகுது. அது, தன் முன்னிரண்டு காலால் முகத்தை பொத்தாமல் போகும் வரை ஆச்சர்யமில்லை.

என் ப்ரெண்ட்,

"ரொம்ப பயமா இருக்குடா..."

"சாவு மேல அவ்ளோ பயமா?"

"சிங்க காய்ச்சல், புலி காய்ச்சல்'ன்ன பெருமையா செத்து போகலாம். பன்றி காய்ச்சல்'ங்கறதுதான் யோசிக்க வைக்குது."

கேலிக்காகவும், கேவலப்படுத்துவதற்காகவும் மனிதனால் பயன்படுத்த ஒரு விலங்கின் பெயர், இன்று எல்லோரையும் கதிகலங்க வைத்துவிட்டது என்பதென்னவோ உண்மைதான்.

.

8 comments:

பிரபாகர் said...

நண்பா,

கமெடியாகவும் தேவையான தகவல்களையும் அருமையாய் தந்திருக்கிறீர்கள். கலக்கல் நண்பா.. வாழ்த்துக்கள்.

எல்லோருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்....

பிரபாகர்.

sury siva said...

பரபரப்பான செய்திகளைத் தரவேண்டுமென்று நினைத்து,
நிரூபிக்கப்படாத பல வைத்திய முறைகளை இந்த வைரஸ் தாக்கும்பொழுது சாப்பிடச்சொல்லி
சிபாரிசு செய்யப்படும் நேரத்தில், அவ்வப்பொழுது கைகளை சோப் போட்டு கழுவுங்கள், கூட்டமான
இடங்களுக்குச் செல்லாதீர்கள் போன்ற விதிகளையும், குறிப்பாக,
சுத்தமாக இருங்கள், அதுவே உங்களைப் பாதுகாக்கும் என்று,
நடைமுறைக்கு ஒத்த எளிய விதிகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.

நன்றி.

சுப்பு ரத்தினம்.
http://Sury-healthiswealth.blogspot.com

தேவன் மாயம் said...

நல்ல கருத்துக்கள் நண்பரே!!

Anonymous said...

>> (டவுட்: கை கழுவி முடிஞ்ச பிறகு, அந்த டேப் மூடுற இடத்துல கிருமி இருந்திச்சினா?)

மொதல்ல டேப கழுவுங்க . அப்புறம் கையகளுவிட்டு டேப மூடுங்க.

சரவணகுமரன் said...

நன்றி பிரபாகர்

சரவணகுமரன் said...

நன்றி சுப்பு ரத்தினம்

சரவணகுமரன் said...

நன்றி தேவன் மாயம்

சரவணகுமரன் said...

அனானி, இப்படி எத்தனை பைப்புகள கழுவுறது?

அதுக்கு இன்னொரு உருப்படியான வழியை கேள்விபட்டேன்.

கையை தண்ணில கழுவிட்டு, டிஷ்யூ பேப்பரால கைய துடைச்சிட்டு, பேப்பரை தூக்கி எறியுறதுக்கு முன்னாடி, அது வச்சு பைப்ப மூடிட்டு, எறியணுமாம்.