"நமக்கு துன்பம் தருபவனுக்கும், நாம் நன்மையே செய்யவேண்டும்"
தேசபிதா காந்தியடிகளுக்கு, இதை கற்றுகொடுத்தது ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள். அவரது எழுத்துக்கள் மூலமாகத்தான், தனது காந்திய கொள்கைக்கு வடிவம் கொடுத்தார். அவரது எழுத்துக்களால் கவரப்பட்டு, காந்தி அவருடன் கடிதங்கள் மூலமாக தொடர்பு வைத்திருந்தார்.
ஒருமுறை காந்தி அவரிடம், தங்கள் எழுத்துக்களுக்கு எது முன்மாதிரி, மூலம் என்று கேட்டதற்கு, உங்கள் நாட்டை சேர்ந்த, தமிழ் மொழியில் எழுதப்பட்ட திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ என்ற பதில் காந்தியை ஆச்சர்யமடைய வைத்தது.
பிறகு, காந்தி திருக்குறள் படிப்பதற்காகவே, தமிழ் கற்றார். அடுத்த ஜென்மத்தில் தான் பிறந்தால், தமிழனாக, தமிழ்நாட்டில் பிறக்கவே ஆசைப்படுகிறேன் என்றார்.
---
ஒருவழியாக பல வேண்டுக்கோளுக்கு பிறகு, கெஞ்சல்களுக்கு பிறகு, பெங்களூரை காண திருவள்ளுவருக்கு வழி செய்துவிட்டார்கள். இனி, தினமும் வள்ளுவர் தன் முன்னால் இருக்கும் அல்சூர் ஏரிக்கரையை பார்த்துக்கொண்டிருக்கலாம். ட்ராபிக் ஜாம், பிழைப்புக்காக மாநிலம் தாண்டி வந்தவர்கள், தான் எழுதியது எதையும் கண்டுக்கொள்ளாமல் ஓடி கொண்டிருக்கும், ஓட்டிக் கொண்டிருக்கும் மக்கள் யாவரையும் காணலாம்.
வெண்கலச்சிலையில், நல்லா ஸ்ட்ராங்காகவே இருக்கிறார், வள்ளுவர்.
---
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து கடைக்கோடி கன்னியாக்குமரி வரை வள்ளுவருக்கான நினைவு சின்னங்களை பிரமாண்டமாக கவனம் பெறும்வகையில் அமைத்து, அவருக்கு புகழ் சேர்ப்பதில் முண்ணனியில் இருப்பவர் கலைஞர்.
சிலரின் மடத்தனமான எண்ணங்களால், பெங்களூரில் இழுபறியாகிக் கொண்டிருந்த திருவள்ளுவர் சிலை திறப்பிற்கும் முழு முயற்சி எடுத்தவர் கலைஞர். மருத்துவ பரிசோதனைக்காக சென்னை வந்த மாற்றுக்கூட்டணி, மாற்றுக்கட்சி கர்நாடக முதல்வரை விரோதம் பாராட்டாமல், தான் சந்திக்க விரும்புவதாக தகவல் அனுப்பி, தன் வீட்டிற்கு வரவழைத்து, சிலை திறக்க வேண்டுக்கோள் விடுத்து, சர்வக்ஞர் சிலை திறக்க தாங்கள் எப்போதும் தயார் என்று அறிவித்து, விழா ஏற்பாட்டிற்கு பணம் செலவழித்து, ஒருவாரம் முன்பே பெங்களூர் வந்து, சிலை திறந்து, விழாவை சிறப்பித்து சென்றிருக்கிறார் தமிழக முதல்வர் கலைஞர்.
இதற்கு எந்தவிதமான காரணங்கள் கூறினாலும், தமிழக மக்களின் நன்றிக்குரியவர் கலைஞர். தனது பேச்சால், ஒரு சுமூக சூழலுக்கு தொடக்கப்புள்ளி வைத்து சென்றிருக்கும் கலைஞருக்கு கோடானு கோடி நன்றிகள்.
ஜாக்கிசான் வந்த விழாவில்கூட அவரை பற்றிய புள்ளிவிவரங்களை அடுக்கிய முதல்வர், இங்கு சர்வக்ஞரை பற்றி சொல்லாமல் விடுவாரா? அவரை பற்றிய விவரங்களையும், அவருடைய படைப்புகள் பற்றியும், அதற்கு விளக்கங்களும் கொடுத்தார்.
விழாவில் எடியூரப்பாவை வழக்கம்போல் தம்பி என்றழைத்தார். நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். எடியூரப்பாவிற்கு புதிதல்லவா? கண் கலங்கிவிட்டார். கலக்குறீயே தலைவா!
---
இன்னொரு மாநில முதல்வர் கலந்துக்கொள்ளும் விழா என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்திருந்தார்கள். பிரச்சினை செய்பவர்கள் என்று கருதப்பட்டவர்களும், அவர்களது அடிப்பொடிகளையும் ஒருநாள் முன்பே தூக்கி உள்ளே வைத்துவிட்டார்கள். மீறி ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
பொதுவாக நகரமெங்குமே காக்கிச்சட்டைகளை காணமுடிந்தது. களத்தில் 3000 போலீசார்கள் இருந்தார்களாம்.
ஆட்டோ, தனியார் நிறுவன பஸ், கேப் உள்ளிட்ட வாகனங்களுக்கும், கண்ணாடி கட்டிடங்களுக்கும் பாதுக்காப்பாக, பெங்களூரில் வழக்கமாக கட்டப்படும், சிகப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டு இருந்தது.
விழா நடந்த நகரின் மையப்பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கும் கலைஞர் முகத்துடன் கூடிய ப்ளெக்ஸ் போர்டுகள். தமிழில் வாழ்த்துக்கள், நன்றிகளுடன் உள்ளூர் மார்க்கெட்டிங் அரசியல்வாதிகள். கூடவே தமிழர்களின் தனித்தன்மையுடன் கூடிய, கைக்கூப்பிய நிலையில் இருக்கும் நடிகர்களின் படங்கள். எம்.ஜி.ஆரில் இருந்து தனுஷ் வரை. ரெட் அஜித் ரசிகர் மன்றம், சுள்ளான் தனுஷ் ரசிகர் பேரவை என்று கட்-அவுட்கள் வைக்காததுதான் பாக்கி.
சிலை தான் என்றாலும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு திறந்தது என்பதால், சிலையை கணிசமான தூரத்தில் இருந்து மொய்த்து கொண்டிருந்த மக்கள் முகத்தில் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. தமிழ்நாட்டில் இருந்து சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு இன்னொரு ஸ்பாட். நடைப்பாதையில், திடீர் புத்தக்கடை, திருக்குறள் சிடிக்கடைகள் உருவாகியிருந்தது.
இனி வரும் நாட்கள் எப்படி என்று தெரியவில்லை. பூக்கள் அலங்காரம், வண்ண ஒளி விளக்குகள், போலீஸ் பந்தோபஸ்து, மகிழ்ச்சியுடன் உணர்வுவயப்பட்ட நிலையில் சுற்றி வலம் வந்த மக்கள் என்று வள்ளுவருக்கு முதல் நாள் இனிமையாகவே முடிந்தது.
படங்களை பெரிதாக்கி காண, படத்தின் மேல் க்ளிக்கவும்.
.
19 comments:
இந்த நிகழ்வுக்கு காரணமான எடியூரப்பாவுக்கு ஒரு பாராட்டு கூட சொல்லவிலையே நீங்கள் ?
Gud coverage.
கண்லே தண்ணி வர்றது சரி. காவேரிலே தண்ணி வர ஏதாவது பண்ணுவாரா எடியூர்ஜி?
http://kgjawarlal.wordpress.com
தமிழ் நாட்டில் எந்த தொலைக்காட்சிச் செய்தியிலும், எந்தப் பேப்பரிலும் கலைஞரின் அளப்பரிய சாதனையாக ஏகப்பட்ட ஆர்ப்பாட்டமாக, ஏறக்குறைய புது திரைப்பட வெளியீட்டின் போது ரசிகர்களின் கட் அவுட் வைத்து கொண்டாடும் விளம்பரங்களைப் போன்றே இருந்தது...
உங்களுடைய பதிவு அது போல் இல்லாமல் யதார்த்தமாக இருப்பதும், வேறுபட்ட செய்திகளைத் தருவதும் ஒரு பெரிய ஆறுதலாக இருக்கிறது...
தனிப்பட்ட முறையில் மீண்டும் மீண்டும் சிலை என்ற வடிவிலேயே உழன்று கொண்டிருக்கிறோமே, இதற்குப் பதில் திருவள்ளுவரது நூல் எல்லா தரப்பினரையும் சேர வழிவகையும் பல மொழிபெயர்ப்புகளும், வேறு சில ஆக்கபூர்வமாக செயல்கள் செய்யலாமே (ஏனென்றால் அந்தக் கன்னடக் கவிஞர் யார், அவரது சாதனைகள் என்ன என்பதெல்லாம் பலருக்கு இங்கு தெரியாது, அதே போல் திருவள்ளுவரது நிலையும் இருக்கக்கூடாது!!!)என்ற எண்ணம் இருந்தாலும், இந்த நிகழ்வு ஓரளவு இரு மாநில உறவுக்கு கை கொடுக்கும் என்ற அளவில் பராவாயில்லை என்றே தோன்றுகிறது.
இனி வரும் காலங்களில், இந்த சிலையின் காரணமாக பிரச்சனையோ அல்லது நம்மைச் சீண்ட வேண்டும் என்பதற்காக புல்லுருவிகள் அந்தச் சிலையில் விஷமம் செய்யாமலோ இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பமே...
ர.சு நல்ல பெருமாள், கல்லுக்குள் ஈரத்தில் அழகாகச் சொல்லியிருப்பார்,
”சிலைகளுக்கு மாலைகளை அணிவிக்கிறார்கள்,
சிந்தனைகளுக்கு மலர்வளையம் வைக்கிறார்கள்”....
அது போல் நடக்காமல் இருந்தால் சரியே!!!
Good Post.. By the way ask KM to open a statue in Hyderabad as well.. ;)
I need a HELP from you guys.. what is the English equal proverb for பெண் புத்தி பின் புத்தி ?? Please Post..
Thanks in Advance,
Ariv
"நமக்கு துன்பம்" தருபவனுக்கும், நாம் நன்மையே செய்யவேண்டும்.
ஒரு வழியா சிலை திறப்பு விழா கோலகலமா நடந்து முடிந்து விட்டது இப்படியே இருந்தால் சரி. இதை ஒரு காரணமாக வைத்து சிலையில் விஷமம் செய்யாமல் இருந்தால் சரி....
நமக்கு துன்பம் தருபவனுக்கும், நாம் நன்மையே செய்யவேண்டும்.
ஒரு வழியா சிலை திறப்பு விழா கோலகலமா நடந்து முடிந்து விட்டது இப்படியே இருந்தால் சரி. இதை ஒரு காரணமாக வைத்து சிலையில் விஷமம் செய்யாமல் இருந்தால் சரி....
அனானி, மன்னிக்கவும். எடியூரப்பாவுக்கும் பாராட்டுக்கள்...
நன்றி வினோத் கௌதம்
//காவேரிலே தண்ணி வர ஏதாவது பண்ணுவாரா எடியூர்ஜி?
//
பண்ணினா நல்லதுதான்...
//உங்களுடைய பதிவு அது போல் இல்லாமல் யதார்த்தமாக இருப்பதும், வேறுபட்ட செய்திகளைத் தருவதும் ஒரு பெரிய ஆறுதலாக இருக்கிறது//
நன்றி நரேஷ்
//இதற்குப் பதில் திருவள்ளுவரது நூல் எல்லா தரப்பினரையும் சேர வழிவகையும் பல மொழிபெயர்ப்புகளும், வேறு சில ஆக்கபூர்வமாக செயல்கள் செய்யலாமே //
திருக்குறளை கன்னடத்தில் மொழிபெயர்த்து இந்த விழாவில் வழங்கினார்கள். அதுப்போல், ஏற்கனவே சர்வக்ஞரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருப்பதாக மேடையில் கலைஞர் குறிப்பிட்டார்.
//”சிலைகளுக்கு மாலைகளை அணிவிக்கிறார்கள்,
சிந்தனைகளுக்கு மலர்வளையம் வைக்கிறார்கள்”//
நல்லா சொல்லி இருக்காரு...
Ariv,
//what is the English equal proverb for பெண் புத்தி பின் புத்தி ?? Please Post..//
இந்த சொற்றொடரை பெண்களுக்கு எதிராக பயன்படுத்த போவதால், நான் சொல்ல போவதில்லை. :-)
(நிஜமாவே எனக்கு தெரியாதுங்க...)
ஆமாங்க Gnanasekar Somasundaram
//இதற்குப் பதில் திருவள்ளுவரது நூல் எல்லா தரப்பினரையும் சேர வழிவகையும் பல மொழிபெயர்ப்புகளும், வேறு சில ஆக்கபூர்வமாக செயல்கள் செய்யலாமே (ஏனென்றால் அந்தக் கன்னடக் கவிஞர் யார், அவரது சாதனைகள் என்ன என்பதெல்லாம் பலருக்கு இங்கு தெரியாது, அதே போல் திருவள்ளுவரது நிலையும் இருக்கக்கூடாது!!!)என்ற எண்ணம் இருந்தாலும்//
அதே புளித்துப் போன வாதம் ..ஏதோ கருணாநிதி திருவள்ளுவர் சிலை திறப்பதை தவிர வள்ளுவர் ,திருக்குறளை பிறர் அறிய வேறு எதுவும் செய்யாதது போல .
என்னத்த செஞ்சாலும் குறை சொல்லுறதுக்கு கூட்டம் குறைவில்லை தமிழகத்தில் .
//திருக்குறளை கன்னடத்தில் மொழிபெயர்த்து இந்த விழாவில் வழங்கினார்கள். அதுப்போல், ஏற்கனவே சர்வக்ஞரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருப்பதாக மேடையில் கலைஞர் குறிப்பிட்டார்.//
இதுனால தமிழனுக்கு சோறு கிடைத்து விடுமா என ஒரு புத்திசாலி வந்து கேட்பார் ..பொறுத்திருங்கள்.
நன்றி ஜோ :-)
Nice coverage !
Thanks!
நன்றி CVR
Post a Comment