Sunday, August 9, 2009

அச்சமுண்டு அச்சமுண்டு

இது வழக்கமான தமிழ் சினிமா இல்லை. கதாநாயக வழிபாடு கிடையாது. பஞ்ச் வசனங்கள் கிடையாது. குத்து பாட்டு கிடையாது. இரட்டை அர்த்த வசனம் கிடையாது. ஆபாச பாடல்கள் கிடையாது. வெட்டுக்குத்து கிடையாது. அட போப்பா! ஒண்ணும் கிடையாது. ஒரு திருப்பமும் இல்லாமல், ப்ளேனாக இருக்குது.

ரெட் ஒன் கேமராவில் எடுத்த முதல் இந்திய சினிமா என்று சொல்லிவிட்டு டாக்குமெண்டரி போடுகிறார்கள். முடிவில் டாக்குமெண்டரியே தான் என்று முடிவு செய்து அனுப்புகிறார்கள். என்ன, பிரசன்னா, சினேகாவை வைத்து கொஞ்சம் காஸ்ட்லியாக எடுத்திருக்கிறார்கள். இதில் டிவி சீரியலை வேறு நக்கல் செய்து டயலாக்.

சொல்லி இருப்பது சொல்ல வேண்டிய விஷயம் தான். உலகமெங்கும் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியது. ஆனால், ஒரு சினிமாவாக ரொம்ப ஸ்லோ. முடியும் வரை, ’படத்தை’ போட சொல்லி தியேட்டரில் ஒரே கூச்சல். எனக்கு தியேட்டரில் இருந்தவர்கள் கொடுத்த கமெண்ட்ஸ்தான் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. (’தக்காளி ரசம் வைச்சுடு. வந்துடுறேன்’ - ரசத்துக்கே இப்படியா?)

அமெரிக்காவை படம் முழுக்க காட்டி, அங்கே ஒரு வெள்ளைக்கார வில்லனைக் காட்டி, முடிவில் இந்தியாவில் தான் பாலியல் குற்றங்கள் அதிகம் என்கிறார்கள். அப்புறம் எதற்கு அமெரிக்கா?

படத்தில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத ஒரே ஹீரோ - இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. பிண்ணனி இசை சூப்பர். படத்திற்கு வெயிட் கொடுப்பது இசைதான். சௌம்யா பாடிய ”கண்ணில் தாகம்” நன்றாக இருந்தது. படம் பார்க்க போனதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. ஹிந்திக்காரன், தமிழை மென்னு துப்புனா, போட்டு பந்தாடுறாங்க. அம்மணி, ‘சொல்லி’யை ‘ஷொல்லி’ன்னு சொல்லுவது தப்பில்லையா?

ஒளிப்பதிவும் நன்றாக இருந்தது. ஏதோ ஒரு அமெரிக்கர். செம துல்லியம். இதுதான் ரெட் ஒன் கேமராவின் ஸ்பெஷலா? சில இடங்களில் ஷார்ப்னெஸ் குறைந்து குறைந்து மாறியது போல் இருந்தது.

படத்தில் நான்கே... இல்லை மூன்றரை பேர்கள். அதில் வில்லனாக வந்த அமெரிக்கர் நல்லா நடித்திருந்தார். இந்தியர்களின் அமெரிக்க வாழ்வை காட்டியது, கொஞ்சம் பார்க்க வைத்தது. அதையும் எவ்வளவு நேரம்தான் பார்க்க முடியும்? ஒன்றிரண்டு சீனில் காட்ட வேண்டியதை, படமாக எடுத்து சிரமப்பட்டது போல் உள்ளது. இதற்கும் படம் இரண்டு மணி நேரம் தான் இருக்கும். அதிலும், ஒரே மாதிரியான காட்சிகள், இரண்டு முறை வந்தது போன்ற காட்சியமைப்புகள்.

விழிப்புணர்வு தேவைப்படும் விஷயத்தை சொல்ல வந்ததற்கு பாராட்டலாம். ஆனால், அதற்கான காரணமும் சொல்லாமல், தீர்வும் சொல்லாமல் விட்டகுறை தொட்டகுறையாக வந்திருக்கிறது.

அச்சமுண்டு அச்சமுண்டு - இந்த மாதிரி படத்திற்கு என்னை யாராவது கூப்பிட்டால்...

.

7 comments:

கார்த்திக் said...

இப்படத்தை கஷ்டப்பட்டு தரவிறக்கம் செய்து பார்த்தேன்.. மொத்தத்தில் மொக்கயுண்டு .. மொக்கயுண்டு ...

சரவணகுமரன் said...

கார்த்திக், ’கஷ்டப்பட்டு’ தரவிறக்கம் செய்து பார்த்தீங்களா? கஷ்டம்தான்...

நரேஷ் said...

அந்தப்படம் நல்லாயிருந்துது என்று காது வழிச் செய்திகள் வந்தன. பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்...

நீங்களே நல்லாயில்லை என்று சொல்வதுதான் என்னை மிக யோசிக்க வைக்கிறது. நான் பாடம் பாக்காம எஸ்கேப் ஆயிட்டேன்னு நினைக்கிறேன்...

சரவணகுமரன் said...

//நீங்களே நல்லாயில்லை என்று சொல்வதுதான் என்னை மிக யோசிக்க வைக்கிறது.//

நரேஷ்ம் இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே? :-)

நரேஷ் said...

உள்குத்துலாம் இல்லீங்க....

ஒரு மசாலா படத்துல கூட அதுல இருக்குற இருக்குற பாஸிடிவான மேட்டருகளைச் சொல்லுவீங்க...

அப்படிப்பட்ட உங்களுக்கே புடிக்கலைன்னா, கண்டிப்பா எனக்கு புடிக்காது அதைத்தான் நான் அப்படிச் சொன்னேன்....

சரவணகுமரன் said...

//ஒரு மசாலா படத்துல கூட அதுல இருக்குற இருக்குற பாஸிடிவான மேட்டருகளைச் சொல்லுவீங்க...
//

நரேஷ், அப்ப சரி...

எதுக்கும் நீங்க பார்த்திருங்களேன்... :-)

சிவம் அமுதசிவம் said...

நண்பர்களே! படத்தில் விறுவிறுப்பு இல்லையென்பது உண்மைதான்.
அது சரியாக வரவில்லையென்றால்,மனவருத்தப்பட்டால் நியாயம்; அதற்காக “ மொக்கையுண்டு..” என்பதெல்லம் கொஞ்சம் அதிகம் என்றுதான் படுகிறது.
அந்தக்கருத்தைப்படமாக்கத்துணிந்தமைக்காகவே பாராட்டவேண்டாமா?