Tuesday, August 4, 2009

ஏதோ மோகம்... ஏதோ தாகம்...

மகேந்திரனிடமிருந்து...

இது இவ்வளவு கஷ்டமாகவா இருக்கும்? அனுபவிப்பவர்கள் எல்லாம் மிகுந்த சந்தோஷத்துடன் வளைய வருகிறார்களே.. எனக்கு மட்டும் ஏன் இத்தனை சிரமமாயிருக்கிறது? யாரிடம் சொல்வது? எப்படி சொல்வது? சொன்னால் என்ன சொல்வார்கள்? அவனுக்கும் இப்படிதான் இருக்குமா? எப்படி அறிவது? முன்பெல்லாம் நான் இப்படியில்லையே... எங்கிருந்து வந்தது இது?

இத்தனை கேள்விகளையும் இரண்டே வரிகளில் வெளிப்படுத்தமுடியுமா? முடிந்திருக்கிறதே...

"நேத்துவர நெனைக்கலியே... ஆசவித மொளைக்கலியே..." என்று அவள் பாடும்போது எனக்கும் கூட காதலித்தால் என்ன என்று தோன்றும்.

காமம் வந்தால் அது காதலில்லை என்பதெல்லாம் அப்பட்டமான பொய். அதை நிஜப்படுத்த வேண்டுமென்றால் காலம் முழுதும் என் வீட்டு பூனையையும், நாய்குட்டியையும் தான் நான் காதலிக்க வேண்டியதாயிருக்கும். முதல் காதல் தோன்றும் போதே அதன் பின்னால் காமம் ஒளிந்து நின்று என்னை கண்டுபிடி என்று கெக்கலிக்கும். இருவருமே கண்ணைக்கட்டி கொண்டு ஆடும்போது யார் யாரை கண்டுபிடிப்பது? தகுந்த நேரம் வரும்போது அதுவாகவே தன்னை வெளிக்காட்டிகொள்ளும்...

அப்படியான வெளிப்பாடு தான் இந்த பாடல்..

1982 ல் வெளியான "கோழி கூவுது" படத்திலிடம் பெற்ற ஒரு அற்புதமான ராஜாவின் பாடல். "ஏதோ மோகம்... ஏதோ தாகம்..."

பாடலின் துவக்கத்தில் வயலின், குழலோசைகளுக்கு பின் வரும் நீரின் ஓசை கேட்கும் போதெல்லாம் ததும்பி வழியும் மோகத்தின் ஓசை போலவே இருக்கும். ஜானகியின் அதி அற்புதக்குரலுக்கு ஈடு கொடுத்திருப்பவர் கிருஷ்ணசந்தர் என்றொரு மலையாள தேசத்தவர். ஒய்.ஜி.மகேந்திரனுடன் பல படங்களில் இணையாக நடித்த வனிதா (இப்போது தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்து வருகிறார்) என்பவரின் கணவர்.

மல்டி ட்ராக் என்றொரு முறை அறிமுகத்துக்கு வந்தபோது, ராஜாவின் புதுமுயற்சி ஒன்று எதிர்பார்க்கவியலாத முறையில் இப்பாடலில் கையாளப்பட்டது. பாடல் துவக்கம் முதல் ஜானகியின் குரலைத்தொடர்ந்து வரும் சேர்ந்திசைக்குரல்கள் அனைத்துமே ஜானகியே பாடியிருப்பார். அதாவது பாடலில் ஒலிக்கும் பெண்குரல்கள் எல்லாமே ஜானகியினுடையது. நம்ப முடியவில்லை அல்லவா? அடுத்தமுறை கவனித்துப்பாருங்கள்.

பாடலின் மிகப்பெரிய பலம் வைரமுத்து. பொங்கி பிரவாகமாக வெளிப்படும் மோகத்தை விளக்க இதைவிட தெளிவாய் இன்னொரு பாடல் எழுத முடியுமா? மோகத்தின் வண்ணம் சிகப்பென்றும், தகிக்கும் வெப்பமுடையதென்றும் சொல்பவர்கள் இந்தப்பாடலில் தோற்றுப்போவீர்கள். நடுங்கவைக்கும் குளிர்ச்சியான மோகத்தின் நீலநிற மறுபக்கம் இந்த பாடல்.

பெண்ணின் உணர்வுகள் எப்போதுமே ரகசியமானவை, மாறாக ஓங்கி ஒலிப்பது ஆணினுடையது. அதை அப்படியே பிரதிபலிக்கும் பாடலின் சரணம். "தாழம்பூவு ஈரமாச்சு.. தலையில் சூடும் நேரமாச்சு.." என்று அவள் தன் வீட்டின் இருள் சூழ்ந்த மூலையில் பதுங்கும் போது, "பார்வையால நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு.." என்று அவன் வயல்வெளிகளில் பறையறிவித்துக்கொண்டே ஓடுவான்... இறுதியாக "போதும் போதும் காமதேவனே" என்று பணிவான்.



சுரேஷ் மற்றும் மறைந்த நடிகை விஜி இருவருக்கும் இது அறிமுகப்படம். ஊருக்கு தபால் காரராக வரும் சுரேஷ், கடிதம் கொடுப்பதைத்தவிர எல்லாம் செய்திருப்பார். பாடலின் உணர்வு சற்றும் கெடாதவகையில், புரியாதவருக்கு சற்றே விரசமாய் படமாக்கப்பட்டிருக்கும்.

துவக்கத்தில் ஈரநிலத்தில் வரிசையாய் விதை ஊன்றும் ஒரு கையை காண்பிக்கும்போதே நம் மனசுக்குள் அது முளைத்துவிடும். காதலின் தவிப்பு அலைக்கழிக்க, இயல்பாய் இருக்க வெகு பிரயத்தனப்படும் சுரேஷ், திருநீறு எல்லாம் அணிந்து காய்ச்சல் வந்தது போல் இருப்பார். விஜியோ பாவாடை தாவணியில் அபரிமிதமான அழகோடு கட்டிலில் குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பார். இன்னும் பார்த்தால் மட்டுமே புலப்படும் அழகான விஷயங்கள் பாடல் முழுக்க இருக்கும்.

எல்லா இடத்திலும் ஜானகி, "ஆசவித" என்பதை "ஆஸவித" என்று பாடியிருப்பது கொள்ளை அழகு. இரண்டு சரணங்களிலும் இறுதியில் "விடியச்சொல்லி கோழிகூவுதே.. இன்பவேளையில் நெஞ்சு தாவுதே" என்று பல்லவியோடு இணைந்து கொள்வது அக்மார்க் ராஜாவின் முத்திரை. இறுதிப்பல்லவி முடியுமிடத்தில் "வனக்கிளியே" என்பதை இருவரும் மாறி மாறி பாடி முடித்திருப்பார்கள். ராஜாவின் ரசிகர்களின் பட்டியலில் இந்தப்பாடல் கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஒன்று... கேட்டுப்பாருங்கள்...

ஏதோ மோகம்... ஏதோ தாகம்...
நேத்துவர நினைக்கலியே ஆசவித மொளைக்கலியே
சேதி என்ன... வனக்கிளியே...

தாழம்பூவு ஈரமாச்சு... தலையில் சூடும் நேரமாச்சு...
சூடுகண்டு ஈரமூச்சு... தோளைசுட்டு காயமாச்சு...
பார்வையால நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே...

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து...
தொட்டபாகம் தொட்டுப்பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து...
அக்கம் பக்கம் சுத்திப்பாத்து தலைக்குமேல தண்ணி ஊத்து...
விடியச்சொல்லி கோழி கூவுதே,
இன்பவேளையில் நெஞ்சு தாவுதே...

ஏதோ மோகம்... ஏதோ தாகம்..
நேத்துவர நினைக்கலியே ஆசவித மொளைக்கலியே
சேதி என்ன... வனக்கிளியே...


-மகேந்திரன்

(பாடலைக் காண படத்தை க்ளிக்கவும்)

17 comments:

வந்தியத்தேவன் said...

கிருஷ்ணசந்தரா பாடினார் நான் இவ்வளவு நாளும் ராஜாவின் அந்த நாள் குரல் என நினைத்தேன். இசைஞானியின் முத்துக்களில் இந்தப்பாடலும் ஒன்று. சரணங்களில் ஜானகியின் ம்ம்ம் ஹம்மிங்கும் அந்த ரிதமும் அழகே அழகு. விரகதாபம் காட்சிகளில் மட்டுமல்ல ஜானகியின் குரலிலும் தெரியும்.

சென்ஷி said...

பாடலைப்பற்றிய பகிர்வுக்கருத்துக்கள் அருமை!

எழுத்துக்களை வாசிக்கையில் பின்னால் பாடலோசை ஒலித்துக்கூட வருவது போல பிரமையை ஏற்படுத்துகிறது வார்த்தை ஜாலங்கள். மிக்க நன்றி!

மகேந்திரன் said...

நன்றி வந்தியத்தேவன், நன்றி சென்ஷி..

pavan said...

மிகவும் அருமை.
நன்றி.
முடிந்தால் பின்வரும் பாடல்களை பற்றி எழுதவும்.

1. கோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)
2. அழகிய கண்ணே (உதிரிபூக்கள்)
3. அடி ஆடு பூங்கொடியே (காளீ)
4. உறவுகள் தொடர்கதை (அவள்அப்படித்தான்)
5. என் இனிய பொன் நிலவே (மூடு பனி)
மற்ற பாடல்களை பற்றி அப்புறம் தருகிறேன்.
தொந்தரவுக்கு மன்னிக்கவும்
நன்றி

Pavan said...

மிகவும் அருமை.
நன்றி.
முடிந்தால் பின்வரும் பாடல்களை பற்றி எழுதவும்.

1. கோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)
2. அழகிய கண்ணே (உதிரிபூக்கள்)
3. அடி ஆடு பூங்கொடியே (காளீ)
4. உறவுகள் தொடர்கதை (அவள்அப்படித்தான்)
5. என் இனிய பொன் நிலவே (மூடு பனி)
மற்ற பாடல்களை பற்றி அப்புறம் தருகிறேன்.
தொந்தரவுக்கு மன்னிக்கவும்
நன்றி

Anonymous said...

மிகவும் அருமை.
நன்றி.
முடிந்தால் பின்வரும் பாடல்களை பற்றி எழுதவும்.

1. கோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)
2. அழகிய கண்ணே (உதிரிபூக்கள்)
3. அடி ஆடு பூங்கொடியே (காளீ)
4. உறவுகள் தொடர்கதை (அவள்அப்படித்தான்)
5. என் இனிய பொன் நிலவே (மூடு பனி)
மற்ற பாடல்களை பற்றி அப்புறம் தருகிறேன்.
தொந்தரவுக்கு மன்னிக்கவும்
நன்றி

PAVAN said...

மிகவும் அருமை.
நன்றி.
முடிந்தால் பின்வரும் பாடல்களை பற்றி எழுதவும்.

1. கோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)
2. அழகிய கண்ணே (உதிரிபூக்கள்)
3. அடி ஆடு பூங்கொடியே (காளீ)
4. உறவுகள் தொடர்கதை (அவள்அப்படித்தான்)
5. என் இனிய பொன் நிலவே (மூடு பனி)
மற்ற பாடல்களை பற்றி அப்புறம் தருகிறேன்.
தொந்தரவுக்கு மன்னிக்கவும்
நன்றி

மகேந்திரன் said...

நல்ல ரசனை பவன்.
நன்றி. விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.

துபாய் ராஜா said...

எனக்கு(ம்) மிகவும் பிடித்த பாடல்.

நல்லதொரு பகிர்வு.

வரிவரியாக வர்ணித்திருப்பது அருமை.

பாடல்பகிர்வுகள் தொடரட்டும்.

நரேஷ் said...

இளையராஜாவின் கிளாசிக் பாடலைப் பற்றிய மகேந்திரனின் கிளாசிக்....

படித்தவுடன் பாலடைத் தேடிப்பிடித்து வர்ணித்த அனைத்தையும் ரசிக்க மற்றும் சிலிர்க்க வைக்கிறது...

மிக அருமை மகேந்திரன்....

M.Thevesh said...

மிக அருமையான விமர்சனம்
முன்பே மனங்கவர் பாடல்
உங்கள் விமர்சனத்தின்
பின்பு கேட்டு ரசிக்கையில்
ரசனை கூடுகிறது.

மகேந்திரன் said...

நன்றி ராஜா, நரேஷ் மற்றும் திவேஷ்.

முகில் said...

அட.. அட.. அட..

ஏதோ மோகம் பாடலில் வரும் வயலின் இசைபோல எழுத்துநடை...

இந்த மாதிரி பாடல் விமரிசன கட்டுரைகள் நிறைய எழுதுங்கள் நண்பரே.

மகேந்திரன் said...

நன்றி முகில்

Karthick said...

Really a nice one., I am regular reader of your blog. Can your friend write about for the song. Paneeril nanaintha pookal - Uyire unakkaga Janaki voice - Laxmikhanth pyarilal.

Hope he also like the song...

the link for the song...

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000565

GK from chennai said...

G.krish
good song and good review about the song. have u heard Oh nenjame in 'Enakkaga kathiru' and 'tagam edukkira neram vasal varuguthu megam' from the same movie .Like this shall i send some more song from Ilayaraja

jeevanantham said...

ஜீவனனதம், பாடலை உணர்ர்ந்து கருது சொல்லிருக்கிறீர்கள் மிக்க நன்றி நண்பரே
உங்கள் சேவை தொடரட்டும்