இன்று காலை எட்டு மணிவாக்கில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
தினசரி காலண்டரில் என் ராசிக்கு அதிர்ஷ்டம் என்று இருந்தபோதே நினைத்தேன். இதுப்போல் ஏதாவது நடக்கும் என்று. சிறிது நேரத்தில் நடந்து விட்டது.
நான் எவ்வளவு லக்கி? கொடுத்து வைத்தவன்.
கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
இந்த இந்திய பெருந்தேசத்தில், கோடானு கோடி மக்கள் மத்தியில் ஒரு சில பேருக்கு மட்டும் கிடைக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு, எனக்கு கிடைத்ததென்றால் சும்மாவா?
போதும் நிறுத்து! அப்படி என்னத்தான் நடந்தது என்கிறீர்களா?
மூணு மாசம் கழிச்சி வருற தீபாவளிக்கு ஊருக்கு போக, ரயில்ல டிக்கெட் கிடைச்சிடுச்சு! :-)
25 comments:
enaku kedaikala. (stomach burning boss)
வாழ்த்துக்கள் சரவணா.. Advance diwali wishes..
:)))))))))
:(((
ஹாஹா... வாழ்த்துக்கள்... :) இன்னிக்கு நைட் எல்லாருக்கும் Pub-world'லே பார்ட்டி வைச்சிருங்க... :)
அவ்வ்வ்வ்... நீங்க சொல்லித்தான் ரிசர்வேஷன் ஓபன் ஆயிருக்கறது தெரியும். இண்டர்நெட்ல ட்ரை பண்ணுனேன் - பெங்களூரு டூ ஈரோடு... வெயிட்டிங் லிஸ்ட் 48..!
இனி ரிட்டர்ன் டிக்கெட்டு வேற புக் பண்ணனும்..!
திங்க கிழம அதகாலையிலேயே மவுச புடிச்சி ஒக்காந்திட வேண்டியதுதான்!
:-)
உங்கள் தயவால் நானும் முன்பதிவு செய்துவிட்டேன். நன்றி!
அன்புடன்,
கணேஷ்
உங்கள் தயவால் நானும் முன்பதிவு செய்துவிட்டேன். நன்றி!
அன்புடன்,
கணேஷ்
இதுக்கே இம்புட்டு சந்தோசமா!
நமக்கு ஆர்ஏசிதான் கிடைச்சது. பார்ப்போம் ரிட்டர்னாவது கிடைக்குதான்னு. ஆமா நீங்க எங்க இருந்து எங்க போறீங்க?
உண்மையிலேயே மாபெரும் வெற்றி தான் :-)
hmmmmm........periya vishayam than... :)
-Arthi
பத்மநாபன்,
விடுங்க... விடுங்க... பாத்துக்கலாம்...
மகேந்திரன், அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்களும் 90 நாட்களுக்கு முன்பா?
ஆமாங்க... அது ஒண்ணுத்தான் குறைச்சல், இராம். :-)
இன்னும் ரிட்டர்ன் டிக்கெட் எடுக்கவேண்டி இருக்கே?
ஜெகநாதன், 48 தானே? கிடைச்சிடும்.
வாங்க இங்கிலீஷ்காரன்
சூப்பர்ங்க, கணேஷ்
வால்பையன், பின்ன சும்மாவா?
வாங்க கிரி... நாட்டுல எதுலாம் சாதனையாயிடுச்சு பாருங்க :-)
சிரிக்கவா அழவான்னு தெரியலையா நாஞ்சில் நாதம்
முகில், ஆர்ஏசி கன்பர்ம் ஆகிடும். முத்துநகர் தான்.
ஆமா ஆர்த்தி
:-)))))))))))
கடைசி நேர வேலைகள் எதுவும் வராம இருக்க வாழ்த்துக்கள் :)
//கடைசி நேர வேலைகள் எதுவும் வராம இருக்க வாழ்த்துக்கள் //
ஆமாங்க CVR, அதான் முக்கியம்
Post a Comment