சென்ற வார ‘நீயா நானா’வில் நட்பை பற்றி கலந்துரையாடினார்கள். நட்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று குரூப்பும் நட்பென்றாலும் அதில் ஒரு லிமிட் வேண்டும் என்று மற்றொரு குரூப்பும் பேசினார்கள். ஆனால் அவர்கள் பேசியதை விட சிறப்பு விருந்தினர்களாக வந்த ’நாடோடிகள்’ இயக்குனர் சமுத்திரக்கனியும் ’குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ நாயகன் ராமகிருஷ்ணனும் அதிகம் பேசினார்கள். காரசாரமாக விவாதம் செய்து கொண்டார்கள். நட்பில் லிமிட் பார்க்கக்கூடாது என்று சமுத்திரக்கனியும் லிமிட் தேவை என்று ராமகிருஷ்ணனும்.
சமுத்திரக்கனியும் ராமகிருஷ்ணனும் பல வருட நண்பர்கள். அவர்களின் அதீத ஆர்வ பங்கேற்பிற்கு இதுவும் ஒரு காரணம். இருவரும் வாடா போடா என்று பேசிகொண்டது எனக்கு ஆச்சரியமளித்தது. ஏனெனில், ராமகிருஷ்ணன் படத்தில் பள்ளி மாணவனாக நடித்திருந்தார்.
சமுத்திரக்கனி சொன்னது “நண்பர்களிடம் பிரதிபலன் பார்த்து பழக கூடாது (சரி). நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போ. நான் உனக்காக எதையும் செய்யும்படிதான் இருப்பேன். (இதுதான் உதைக்குது)”
அதாவது அவருடன் ஒன்றாக படுத்துறங்கிய நண்பன், காலையில் அவர் பார்க்க இருந்த தயாரிப்பாளரிடம் அவருக்கு முன்னால் சென்று கதை சொன்னாராம். பின்னால், அந்த நண்பன் உதவி கேட்டு வந்த போது, இவர் அவருக்கு உதவினாராம்.
தனக்கு தீங்கிழைத்த நண்பனை பழிவாங்க நினைக்காமல் உதவி செய்தது நல்ல விஷயம். நண்பன் என்றில்லை. எந்த மனிதனாக இருந்தாலும் கஷ்டத்தில் உதவலாம். ஆனால், திரும்ப திரும்ப எப்படிப்பட்டவனாக இருந்தாலும், எவ்வளவு துரோகம் இழைத்தாலும், நண்பனுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று சொன்னது தான் எனக்கு சரியாகப்படவில்லை. திரும்ப திரும்ப உதவி செய்வதற்கு மனிதாபிமானம் காரணமாக இருக்கலாம். அதற்கு நட்பென்ற மூலாம் எதற்கு?
நாடோடிகள் படத்தில் இருந்து என்ன கற்று கொண்டீர்கள்? நான் படத்தின் கருத்தாக எடுத்துக்கொண்டது - நண்பனுக்காகவும் நண்பனின் நண்பனுக்காகவும் உயிரை பணயம் வைத்து உதவி செய்கிறார்கள். அவரவர் வாழ்க்கையில் பெரிய இழப்புகளை சந்திக்கிறார்கள். ஆனால், செய்த உதவி பலனற்று போகிறது. அதனால் செய்யும் உதவியின் முக்கியத்துவம் கருதி உதவி செய்யவேண்டும்.
அதன் பிறகு படத்தில் காட்டியது - உதவி செய்து உதாசீனப்படுத்திய நண்பனைக் கூட்டி பாடம் நடத்தி அனுப்பி விட்டு, இன்னொரு உதவிக்கு கிளம்புகிறார்கள். வேற வழியில்லை. படத்தை அப்படித்தான் முடிக்க முடியும். வெளியே வரும்போது ரசிகன், நன்றாக பீல் பண்ண வேண்டும் அல்லவா? ஆனால், இதுவா வாழ்க்கைக்கான பாடம்? தவறில் இருந்து எது சரி என்று கற்றுக்கொள்ள வேண்டாமா?
சரி, விடுங்க. படம் பார்த்தோமா, என்ஜாய் பண்ணோமா என்றில்லை இதென்ன? ஒ.கே.
ஆனால், இதையே தான் அந்த நிகழ்ச்சியிலும் வந்து பேசி கொண்டிருந்தார். ராமகிருஷ்ணனும் மற்றவர்களும் என் நண்பன் என்னை ஏமாற்றி விட்டான். நான் எதற்கு உதவ வேண்டும்? என்றால் ‘அப்படியென்றால் அவன் நண்பனே இல்லை’ என்று விளக்கம் கொடுப்பதும், ஆனால் அதையே அவர் நண்பன் செய்தால் ’அவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன். ஏனெனில் அவன் என் நண்பன். நட்பு.’ என்று ஓவராக பொங்கிக்கொண்டிருந்தார். லாஜிக்கே இல்லாமல் பேசி கைத்தட்டல் வாங்கி கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் தான் தங்கள் அணி சார்பில் எதை சொன்னாலும் கைத்தட்டுவார்களே!
நண்பனுக்கு உதவ போய் நீ கஷ்டப்படலாம். ஏன்னா, அவன் உன் நண்பன். உன் குடும்பத்தார்களும் உன்னை சுற்றியிருப்பவர்களும் ஏன் கஷ்டப்படவேண்டும்? நான் நினைப்பது - எந்த உறவா இருந்தாலும் தாமரை இலை மேல் நீர் போல் இருக்க வேண்டும். (இது தவறாக இருக்கலாம். என் அனுபவ அறிவு கம்மி. போகப் போக கற்றுக்கொள்ளலாம்.)
எத்தனை முறை என்னை ஏமாற்றினாலும், நான் அப்படியே தான் இருப்பேன் என்று கூறுவது சரியானதா? அனுபவங்களில் இருந்து நம்மை மேம்படுத்தி கொள்ள வேண்டாமா? ஏமாளி, தியாகி என்று ராமகிருஷ்ணன் கூறினாலும், சமுத்திரக்கனி இது உணர்வுபூர்வமானது என்றார். அறிவுப்பூர்வமாக பார்த்தால், உதவி தேவைப்படும் யாருக்கும் நம்மால் முடிந்த, மற்றவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுத்தாத உதவிகளை செய்யலாம். நமது உதவியின் முக்கியத்துவத்தை பலனடைந்தவர்கள் புரிந்து நடக்க வேண்டும். இது ஒன்றும் பிரதிபலன் இல்லை. அடிப்படை மனுஷத்தன்மை. இதை சமுத்திரக்கனியிடம் சொன்னால், “இப்படியெல்லாம் யோசிச்சா, அது நட்பே இல்லை” என்பார்.
பாஸ், ஓவர் சென்டிமெண்ட் உடம்புக்கு ஆகாது.
பி.கு.: சும்மா சொல்லக்கூடாது. ப்ரோக்ராம் செம ஜாலியா இருந்தது. குறிப்பா, சமுத்திரக்கனி ராமகிருஷ்ணனை தாக்கி பேசிய பேச்சு. நிகழ்ச்சியைக் காண படத்தை க்ளிக் செய்யவும்.
ரசிச்சு பார்த்தா ஜாலி
யோசிச்சு பார்க்கலைன்னா முடிஞ்சுது ஜோலி!
12 comments:
நல்ல அலசல். இருவருக்கும் ஒரு நாப்பது
வயசு இருக்குமோ.?
ஆமா.. உண்மை நட்பிற்கு கட்டுபாடுகள் இல்லை. பொய் நட்பென்றால் உடனே கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்..இது தான் என் பாலிஸி.
/ரசிச்சு பார்த்தா ஜாலி
யோசிச்சு பார்க்கலைன்னா முடிஞ்சுது ஜோலி!/
நூத்துக்கு நூறு சரியான வார்த்தை! யாரு யோசிக்க வேணாம்னு கையைப் பிடிச்சுத் தடுக்கறாங்க? நம்மோட சோம்பேறித் தனம் தானே? யோசிச்சா, கொஞ்சம் மாற வேண்டியிருக்கும், மாறுவதற்குப் பயம் தானே!
அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
//ஓவர் சென்டிமெண்ட் உடம்புக்கு ஆகாது. //
உண்மை
அந்த தாமரை இல்லை நீர் மேட்டரை தான் நானும் பாலலோ பண்ணுறேன்...
அதனால பிரச்சினை கம்மியா தான் வருது...
நன்றி ஜெட்லி.
//இருவருக்கும் ஒரு நாப்பது வயசு இருக்குமோ.?//
அவ்ளோ இருக்காதுங்க...
சரியான பாலிஸி ரங்கன்
நன்றி கிருஷ்ணமூர்த்தி
பஞ்ச் பயங்கரமா இருக்கு, ஆப்பு :-)
வாங்க கிரி
நன்றி இங்கிலீஷ்காரன்
Post a Comment