சத்யசீலன் நம் நாட்டு குடிமகன்களில் ஒருவன். தமிழ்நாட்டின் பெரும்பான்மை இனமான டாஸ்மாக் சமூகத்தை சார்ந்தவன். அதற்காக ஓவராக குடிப்பான் என்று எண்ண வேண்டாம். வாழ்க்கையில் மூன்றே தருணங்களில் தான் குடிப்பது என்று உறுதியுடன் வாழ்ந்து வருகிறான். அந்த மூன்று தருணங்கள் - சந்தோஷமாக இருக்கும்பொழுது, சோகமாக இருக்கும்பொழுது, போர் அடிக்கும்பொழுது. இவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருந்தும், அவனுக்கு தினமும் சரக்கடிக்க வேண்டிய நிலை வந்துவிடுகிறது.
அவன் தினமும், தனியாக தங்கியிருக்கும் தன் அறைக்கு பக்கத்தில் இருக்கும் பாரில் தான் தண்ணியடிப்பான். ஏனெனில், அந்த கடையில் தேவையான சமயம், ப்ரீ ஹோம் டெலிவரி செய்வார்கள். சரக்கை அல்ல. சரக்கடித்து மப்பில் இருக்கும் அவனை. ரெகுலர் கஸ்டமரல்லவா?
அவனுக்கு இரண்டு அண்ணன்கள். கம்யூனிச குடும்பம். ஊரில் இருக்கும்போது, எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல், ஒன்றாக உட்கார்ந்து சகோதரர்கள் சரக்கடிப்பார்கள். எவ்வளவு நாட்கள்தான் அப்பா காசில் தண்ணியடிப்பது என்று வேலை தேடி வெவ்வெறு ஊர்களுக்கு பயணமானார்கள். மூத்தவன் மும்பைக்கும், நடுவே இருந்தவன் நெல்லூருக்கும், சின்ன தம்பி சத்யசீலன் சென்னைக்கும் சென்றார்கள். வேலையும் கிடைத்தது. வேளாவேளைக்கு சரக்கும் கிடைத்தது.
முதல் நாள் அந்த பாரில் தண்ணி அடிக்க சென்றபோது, மூன்று க்ளாஸ் முழுக்க சரக்கு ஆர்டர் செய்தான். அவர்களும் கொடுத்தார்கள். அவனும் ஒன்றன்பின் ஒன்றாக மூன்றையும் அடித்து முடித்தான்.
கிளம்பும்போது, சப்ளையர் “சார்... எதுக்கு சார் மூணு டம்ளரையும் முத தடவையே ஆர்டர் பண்ணுனீங்க? ஊத்தி ரொம்ப நேரம் வச்சா, நல்லா இருக்காது சார். வேணும்போது, பாட்டில்ல இருந்து ஊத்தினாத்தான் நல்லா இருக்கும்.” என்று ஆலோசனை சொன்னான். வாடிக்கையாளர் சேவை முக்கியம் என்று காந்தி சொல்லியிருக்கிறார்.
”அப்படி இல்ல, தம்பி... எனக்கு ரெண்டு அண்ணனுங்க. எப்பவும் ஒண்ணாத்தான் சரக்கடிப்போம். பிரிஞ்சதுக்கப்புறம், இப்படித்தான் தண்ணி அடிக்கணும்ன்னு முடிவு பண்ணி, அப்படியே செஞ்சுச்சிட்டு வாரோம்.”
சகோதரர்களின் சபதம் கடை பையனை ஃபுல்லரிக்க, இல்ல, புல்லரிக்க செய்தது.
அதன் பிறகு அவன் சொல்லாமலே, அவனுக்கு மூணு கிளாஸ் நிறைய சரக்கு வைத்தார்கள்.
நாட்கள் கடந்தது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வருமான வரியை குறைக்கிறார்களோ இல்லையோ, சரக்கின் மேல் வரியை உயர்த்தினார்கள். இதை எதிர்த்து விஜய் மல்லையாவிலிருந்து மப்பில் குப்புற அடித்து மல்லாந்து கிடக்கும் செல்லையா வரை யாரும் கேள்வி கேட்காதது பொருளாதார நிபுணர்களுக்கே ஆச்சர்யம் தான்.
ஒரு நாள் வழக்கம்போல் கடைக்கு நுழைந்த அவனின் வழக்கத்திற்கு மாறான முகத்தை கடையில் இருந்த அனைவரும் காணத்தவறவில்லை.
கடைப்பையன் மூன்று டம்ளர் எடுத்து செல்ல,
“ஒண்ணு எடுத்திட்டு போயிடு. இனி ரெண்டு தான்.”
சொன்ன ஒரு நொடியில் பக்கத்து டேபிளில் ஏப்பம் விட்டவர் அப்படியே ப்ரிஸ் ஆனார். எதிர் டேபிளில் வாந்தி எடுக்க வாயை பிளந்தவர் அப்படியே ப்ரிஸ் ஆனார். பாட்டிலில் இருந்து க்ளாஸ்க்கு படையெடுத்த நெப்போலியன் அப்படியே ப்ரிஸ் ஆனார். பிரட்டி போட்ட ஆம்லெட் அப்படியே ப்ரிஸ் ஆனது. இப்படி அனைத்துமே அந்த நொடி அப்படி அப்படியே பாரதிராஜா படத்தில் வருவது போல் ப்ரிஸ் ஆனது.
கடைக்காரர் கல்லாவில் இருந்து எழுந்து, வேட்டியை இறக்கிவிட்டவாறே அவனருகே வந்தார்.
“தம்பி, கவலைப்படாதீங்க. நாங்க இருக்குறோம். வாழ்க்கையில இது எல்லாத்தையும் கடந்து போகத்தான் வேணும். எந்த அண்ணன்? என்னாச்சு? சொல்லுங்க”
”ஐயய்யோ! அப்படியெல்லாம் இல்ல அண்ணாச்சி... ரெண்டு அண்ணன்களும் நல்லா இருக்காங்க.”
“அப்புறம்?”
தன்னம்பிக்கையுடன், ”நான் இன்னையில இருந்து தண்ணி அடிக்கறது இல்லன்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றான் சீரியஸாக.
---
மேற்கத்திய பாணியில் மின்னஞ்சலில் வந்ததை அடிப்படையாக கொண்டு எழுதியது.
ஒரு காக்டெயில் நாட்டுசரக்காக மாறியதே!
----
அடுத்த பதிவு : நெஞ்சை பிழிந்த வாணி ஜெயராம் குரல்
18 comments:
can i copy it? very nice. am also copy it. tnx
சாவடிசிட்டிங்க சரவணா.. (ச னாக்கு, ச ன.. நல்லாருக்கில்ல??)
எப்பவோ படிச்சா கதைன்னாலும், இதைவிட சுவாரஸ்யமா
எழுத முடியாது... அட்டகாசம் பண்றீங்க..!!
ஆனா உங்களுக்கு 3 அண்ணன்கள்னு சொன்னிங்க??!!!!
Super Comedy..
Very nice..:))
நீங்க மாத்தியிருக்கற விதம் ரொம்பவே சூப்பர்!!!
அப்புறம் பள்ளிக்கூடம் போகலாமா நாளைக்கு போட்டுடறேன்....
சூப்பர்..
ஹிஹிஹிஹி
மண் வாசனையோட மொழி பெயர்க்கிறதுன்னா இதானா.....
ரொம்ப ரொம்ப ரொம்ப ரசிச்சேன் பாஸூ .......
கலக்கல் பாஸு...என் தினசரி நடவடிக்கையை எங்கிருந்தோ நோட் பண்ணிருக்கீங்கன்னு எனக்கு உங்க மேல ஒரே சந்தேகமாக இருக்கு
நவநீதகிருஷ்ணன், தாராளமா...
தமிழாக்கம் செய்ததற்காக தளத்தின் முகவரியை போட்டால் நல்லா இருக்கும்.
நன்றி மகேந்திரன்
நன்றி வினோத் கௌதம்
டபுள் நன்றி நரேஷ்...
நன்றி சண்முகசுந்தரம்
நன்றி கார்க்கி
ரொம்ப நன்றி சுகுமார் சுவாமிநாதன்
இங்கிலிஷ்காரன்,
ஓ! நீங்கதானா இது?
super Mr.saravanan
enga irrunthu title(SARAKADITHA SATHYASEELAN) PIDIKARINGA.UNGA ARTICLE MATHIRIYE TITLE UM SUPER
நன்றி திவ்யா
Post a Comment