ஷங்கர் அவரது அலுவலகத்தில் உருண்டுக்கொண்டே உலக உருண்டையை உருட்டி கொண்டிருக்கிறார். “புதுசா யாரும் போகாத இடத்துக்கு போகலாம்ன்னு பார்த்தா, எல்லாம் பார்த்த இடமா இருக்கே?”
உதவியாளர், “தமிழ்நாட்டுல எங்காச்சும் பார்ப்போமா?”
“இங்க எவன்யா எடுப்பான்? நாம எடுக்குறது வேற, உலகத்தரத்துல. இங்க எப்படி? சே... சே...”
“சார். நீங்க கூட ஜென்டில்மேன், முதல்வன் எல்லாம் இங்கதானே எடுத்தீங்க.”
”ஒண்ணு முத படம். விவரம் பத்தலை. இன்னொண்ணு நம்ம ப்ரொடக்ஷன்.”
“வெவரமாயிட்டீங்களோ?” என்றபோது இன்னொரு உதவியாளர் ஓடிவந்து “சார், ப்ரொடக்ஷனில் இருந்து வந்திருக்காங்க”
“வந்துட்டாய்ங்களா?” என்று களோபரத்தில் சுனாமியை சந்திக்கும் திருவள்ளூவர் சிலை போல் எல்லோரும் விரைப்பாக, சக்சேனா சிரித்த முகத்தோடு நுழைகிறார்.
“ஹலோ ஷங்கர், நாங்க படத்தை வாங்கினப்ப ஒண்ணா நின்னு போட்டோ எடுத்துக்கிட்டதோட சரி. அதான் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தேன்.”
“வாங்க வாங்க. நானே வந்து பார்க்கலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். படத்துல ஹீரோயின் அப்பாவா நடிக்க ஒருத்தர் தேவைப்பட்டாரு. நம்ம பாஸு பொருத்தமா இருப்பாருன்னு தோணுச்சு”
”நம்மக்கிட்டேவா?” என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டே, “சரி. அதை அப்புறம் பேசலாம். படம் எப்படி போயிட்டு இருக்குன்னு பாஸ் பார்த்துட்டு வர சொன்னாரு.”
“படம் நல்லா ஃபாஸ்ட்டா போயிட்டு இருக்கு. கிட்டத்தட்ட 40% முடிஞ்சுது.”
“என்னது? 40% ஆ? இது தான் உங்களுக்கு ஃபாஸ்ட்டா? நாங்க மாசத்துக்கு ஒண்ணுன்னு வருஷத்துக்கு 12 படம் ரிலீஸ் பண்றவங்க. நீங்க என்னன்னா, ஒரு படம் எடுக்க ரெண்டு வருஷம் ஆக்குறீங்க.”
”பின்ன என்னங்க, நம்ம படம்ன்னா ஒரு பெர்ஃபெக்ஷன் வேணும்மில்லையா?”
“என்னதுக்குய்யா அது? நாங்க ரிலீஸ் பண்ணின படங்களை பார்த்தீங்களா? எதுலயாவது அது இருந்துச்சா? அதெல்லாம் பார்த்தா, நாங்க படத்த வாங்குறோம்? ஏதோ, முதமுறையா படம் தயாரிக்குறோமே, பெரிய ஸ்டார், பெரிய டைரக்டர்ன்னு நினைச்சது தப்பா போச்சே!”
”சார், நம்ம படம் கண்டிப்பா ஹிட் ஆகும். நீங்க நிறைய லாபம் பார்க்கலாம்.”
“அது எங்களுக்கு தெரியாதா? ரிலீஸ் ஆகாம பெட்டிக்குள்ள தூங்குற படத்தயே எழுப்பி ஓடவிட்டு ஹிட் ஆக்குறவுங்க நாங்க”
“இருந்தாலும் படம் வெயிட்டா இருக்கணும்மில்ல”
“என்னைய்யா! புரியாதா ஆளா இருக்க? இதுவரைக்கும் நாங்க வாங்கி வெளியிட்ட படத்தை ஒண்ணு கூட எங்களால முழுசா பார்க்க முடியலை. எங்களுக்கு தேவை படத்துல நாலைஞ்சு பாட்டு, ரெண்டு மூணு சண்டை. அப்புறம் கதைங்கற பேர்ல ஏதாச்சும் இருந்தாலும் சரி. காமெடிங்கற பேர்ல ஏதாச்சும் இருந்தாலும் சரி. ஏன், கதையே காமெடியா இருந்தாலும் சரி. அட்லிஸ்ட், விளம்பரமாவது பார்க்குற மாதிரி இருந்தா போதும். இல்லாட்டியும் பரவாயில்லை, திருப்பி திருப்பி போட்டு பார்க்க வைச்சிடுவோம். இப்ப கூட தேவைன்னா, ‘காதலில் விழுந்தேன்’ படத்தை திருப்பி ரிலீஸ் பண்ணி, விளம்பரம் போட்டு, ஓட விட்டுடுவோம். மக்களை பத்தி எங்களுக்கு தெரியும்மய்யா”
“இது சூப்பர்ஸ்டார் படம்ங்க”
“யோவ், கூர்க்கா மாதிரி இருக்குறவன் நடிச்சாலும், நாங்க ஷோக்க ஓட்டிடுவோம். யார் நடிச்சா என்ன? சரி, நாங்க சொல்றத கேளுங்க. அப்படியே ஷூட்டிங் எடுக்கறப்போ, ஸ்பாட்லயே படத்துல நடிக்கறவுங்க எல்லார்க்கிட்டயும் ‘கலாநிதிமாறன் சார் படத்துல நடிக்குறதுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கணும்”ன்னு சொல்ல சொல்லி வீடியோ எடுத்து கொடுங்க.”
“எதுக்குங்க, உங்க சானல்ல போடுறதுக்கா? எப்ப போட போறீங்க?”
“இப்படி ஒரு வீடியோ போட போறோம்ன்னு ஒரு மாசம் விளம்பரம் போடுவோம். அப்புறம் தான். அதுலாம் உங்களுக்கு எதுக்கு? படத்த பத்தி சொல்லுங்க. என்ன பணறதுன்னு நாங்க சொல்றோம்.”
“படத்துல ரஜினி ஒரு விஞ்ஞானி.”
”அப்ப படிக்க தெரிஞ்சவர். ரஜினி பேப்பர் படிக்குற மாதிரி ஒரு சீன் வச்சிடுங்க. ஆபிஸ்ல வந்து தினகரன் ஒரு கட்டு எடுத்துக்கோங்க. இது சூப்பர்ஸ்டார் படிக்குற சூப்பர் பேப்பர். அப்படின்னு ஒரு வசனம் சேர்த்துடுங்க.”
படபடப்புடன்,”அவரு பெரிய விஞ்ஞானிங்க. அவரு போயி எப்படி தமிழ் பேப்பர...”
“யோவ், என்ன பெரிய விஞ்ஞானி? சரி, சரி. நம்ம பேப்பருல வருற அறிவியல் மலரை படிக்குற மாதிரி சீன் வச்சிடுங்க”.
“சார். இது ஒரு உலகத்தரத்துல எடுக்குற பிரமாண்ட படம். இதுல எப்படி தமிழ் பேப்பரு, அறிவியல் மலரு?” என்று இழுக்க...
“உங்களுக்கு எங்க பேப்பரு அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா? அப்ப ஒண்ணு பண்ணுங்க. நம்ம தினகரன் ஈ-பேப்பர் சைட்ட படிக்குற மாதிரி வச்சிடுங்க”
’விட மாட்டாரு போல இருக்கே’ என்று நினைத்துக்கொண்டு ”சரிங்க. ரஜினியும் ஐஸ்வர்யாவும் லவ் பண்றாங்க. அதுக்கு ஒரு டூயட் எடுத்துருக்கோம். பார்க்கறீங்களா? ரஹ்மான் பிரமாதமா இசையமைச்சிருக்கார்”.
கண்டுகொள்ளாமல் யோசித்து கொண்டிருந்தவர், “அப்ப அவுங்க மூணு பேரையும் சன் மியூசிக் ஸ்டுடியோவுக்கு வர சொல்லுங்க. எங்க காம்பயர் கேட்குற கேள்விக்கு, பாட்டை பத்தி அவுங்க சொல்லட்டும்.”
அதிர்ச்சியாகி, “பெரிய ஆளுங்க எல்லோரும். டைம் கிடைக்குமோ என்னவோ?”
“அப்ப, சூரியன் எப்.எம்.?”
தலை சொறிந்துக்கொண்டே ”சார்...” என்று இழுக்க...
“விடுங்க” என்று போன் போடுகிறார். “தம்பி, 1996 எலக்ஷன் ரஜினி இண்டர்வியூ எடுத்துக்கோ. ’எந்திரனை பார்க்காட்டி தமிழ்நாட்டை ஆண்டவானாலும் காப்பாத்த முடியாது’ன்னு வருற மாதிரி ஒரு ஒட்டு போட்டு ரெடியா வச்சிரு. என்னது? மிமிக்ரியா? அசத்த போவது டீம கூப்பிடு. அப்புறம் ஆஸ்கார் மேடையில ரஹ்மான், ’எல்லா புகழும் சன் டிவிக்கே’ன்னு சொல்ற மாதிரி இன்னொரு பிட்டும் ரெடி பண்ணிரு.”
ஷங்கர் மேலும் அதிர்ச்சியில் உறைய,
“படம் ரெடியாக இன்னும் எவ்வளவு நாளாகும்? பட்ஜெட் ஸ்டேடஸ் என்ன?” என்று சக்சேனா கேட்க, ஷங்கர் சொல்லும் பதிலில், பதிலுக்கு இவர் ஷாக்காகிறார்.
“என்னது? ஒரு படம் எடுக்க இவ்வளவா? இந்தளவுக்கான படத்துக்கு பண்ண வேண்டிய விளம்பரத்தை நினைச்சா, எனக்கே சலிப்பா இருக்குது. இது ஆகுற கதையில்லை. ஒண்ணு பண்ணுங்க. படத்தை நாலைஞ்சு பாகமா பிரிச்சிடுங்க. மூணு மாசத்துக்கு ஒண்ணுன்னு ஒன்றரை வருஷத்துக்கு ஓட்டலாம். அப்பத்தான் கணக்கு சரியா வரும்.”
டெரர்ராகி, “இது என்ன சீரியலா? எபிசோட் எபிசோடா வெளியீட? விட்டா, அப்படியே சீரியல் பண்ண விட்டுடுவீங்களே?”
“பண்ணத்தான் என்ன? சரி. பயப்படாதீங்க. எங்க ஆபிஸ்க்கு வந்துட்டு போங்க. ரஜினி சாரையும் வர சொல்லியிருக்கோம். பாஸை மீட் பண்றப்புல ஒரு கிளிப்பிங் எடுத்துக்கிட்டோம்ன்னா, தலைப்பு செய்தில ஒரு வாரத்துக்கு பரபரப்பா சொல்ல ஒரு நியூஸ் கிடைச்சுடும். ” சொல்லும்போதே, போன் ரீங் டோன் “சிக்கு சிக்கு பூம் பூம்” என்று அலற, போனை எடுத்து சக்சேனா பேசுகிறார்.
“என்னது? கமல் ஆபிஸ் வந்துருக்காரா? மருதநாயகமா? இதோ வாரேன்.” என்று போனில் சொல்லிவிட்டு, ஷங்கரிடம் “ஒரு வேலை வந்திருக்கு. போயிட்டு வந்திருறேன். அந்த தலைப்பு செய்தி மேட்டர் மறந்திராதீங்க. ஆபிஸ்க்கு வந்திருங்க.”
வேகமாக சென்றவரை பார்த்துக்கொண்டிருந்த ஷங்கரிடம், உதவியாளர்,
“ஆபிஸ் ரூம்னா பயப்படுறத நாமத்தான் காட்டினோம். இவரு நமக்கே காட்டிட்டு போறாரே? என்ன சார், யோசிக்குறீங்க?”
“கமல் சார் அங்க போயிருக்காராமே? இப்ப, யார் பாவம்ன்னு தான்!”
***
நாளைய பதிவு : கொலை செய்தாரா கலைவாணர்?.
காணத் தவறாதீர்கள்ள்ள்ள்....
பாருங்க, எனக்கும் ஒட்டிக்கிச்சு! :-)
18 comments:
ஹா ஹா ஹா..
கலக்கல் குமரன்.. /
//“படத்துல ரஜினி ஒரு விஞ்ஞானி.”
”அப்ப படிக்க தெரிஞ்சவர். ரஜினி பேப்பர் படிக்குற மாதிரி ஒரு சீன் வச்சிடுங்க. ஆபிஸ்ல வந்து தினகரன் ஒரு கட்டு எடுத்துக்கோங்க. இது சூப்பர்ஸ்டார் படிக்குற சூப்பர் பேப்பர். அப்படின்னு ஒரு வசனம் சேர்த்துடுங்க.”
படபடப்புடன்,”அவரு பெரிய விஞ்ஞானிங்க. அவரு போயி எப்படி தமிழ் பேப்பர...”
“யோவ், என்ன பெரிய விஞ்ஞானி? சரி, சரி. நம்ம பேப்பருல வருற அறிவியல் மலரை படிக்குற மாதிரி சீன் வச்சிடுங்க”.//
சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சு :))
-சென்ஷி
Supernga Saravanan..!!
அய்யா சாமீ..!
முடியல.
எனக்கு இது காமெடியா தெரியவில்லை ! நிஜம் மாதிரி இருக்கு!!
எனக்கு இது காமெடியா தெரியவில்லை ! நிஜம் மாதிரி இருக்கு!!
கலக்கிடேடா குமரா ... !
அட்டகாசம் செமக்கலக்கல்
நன்றி சென்ஷி
நன்றி பிரபு
ஏம்ப்பா, டக்ளஸ்? :-)
andygarcia, பார்ப்போம், இதுல எத்தனை நிஜத்துல நடக்குதுன்னு...
நன்றி அனானி
நன்றி முரளிகண்ணன்
romba nalla irrukku Mr.saravanan
i need more articles from you
bye bye
வரும் திவ்யா
நல்ல பதிவு ....ரசித்து படித்தேன்....தொடர்ந்து எழுதவும்.....
நன்றி RAMASUBRAMANIA SHARMA
Appreciate this post. Will try it out.
Feel free to visit my site ; create wealth online
Post a Comment