இது எதற்கு இப்போது? ஏனென்றால் இப்பொழுது தான் நான் தெலுங்கில் பார்த்தேன். ஜீ தெலுங்கில்.
தெலுங்கில் வெங்கடேஷ். சீனியர் அல்லவா? அதனால், அவர் கதைப்படி வேலையை ரொம்ப ரொம்ப ரொம்ப நாள் தேடுகிறார். இங்கே, தனுஷ் வழக்கம்போல் வேலை தேடுகிறார். வெங்கடேஷ்-தனுஷ் இருவருமே பல இடங்களில் ஒரே மாதிரி எக்ஸ்பிரஷன்ஸ் காட்டுகிறார்கள். வெங்கடேஷ் பல இடங்களில் நன்றாக செய்திருந்தாலும், தனுஷ் சில இடங்களில் கலக்கி இருந்தார்.
வெங்கடேஷ் அப்பா கோட்டா சீனிவாச ராவ். கலகலப்பாகவே நடித்திருக்கிறார். இங்கு ரகுவரனும் படம் வந்த டைமிங்கும். ச்சே. :-(
அப்புறம் நயன் தாரா. த்ரிஷா. என்ன இருந்தாலும் நயன் போல வருமா? நண்பனாக ஸ்ரீகாந்த். எனக்கென்னமோ, கார்த்திக் தான் இயல்பாக இருந்தது போல் இருந்தது. த்ரிஷா தங்கையாக சுப்பிரமணியபுரம் ஸ்வாதி. இதற்கு போனஸ் மார்க்ஸ். :-)
நான் படம் முழுக்க முழுக்க ஒரே மேக்கிங் என்று நினைத்திருந்தேன். ஆனால், கிளைமாக்ஸ் வேறு.
தமிழில், நயன்தாரா கல்யாணத்திற்கு முதல் இரவில் தனுஷைப் பார்த்து காதலை சொல்லி, கட்டி பிடித்திருப்பதை கார்த்திக் பார்ப்பார். இருவரையும் திட்டுவார். மறுநாள். தாலி கட்டும் போது, அடம் பிடிப்பார்கள். நீ கட்டு, நீ கட்டு என்று. விஷயம் தாத்தாவிற்கு தெரிய வர, பிரச்சினையாகி, தனுஷ் டயலாக் பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியே வருவார். வருபவர் பாட்டியையும் கூட்டி கொண்டு சென்னை வந்து விடுவார். பிறகு, சென்னைக்கு மொத்த குடும்பமும் வந்து, தனுஷை உருட்டி எடுப்பார்கள். தாத்தா மட்டும் எனக்கு செட் ஆகலை. கொஞ்சம் நாள் ஆகலாம். அதுவரை மயிலாப்பூரில் உள்ள என் நண்பன் வீட்டில் இருக்கிறேன் என்று சொல்லி சென்று விடுவார். அவ்வளவே படம். இது முதலில் வெளியான கிளைமாக்ஸ். பிறகு, இதன் கூட கிச்சனில் நயன்தாராவை தனுஷ் பின்னால் இருந்து கட்டிப்பிடிப்பதாக சேர்த்து முடித்தார்கள். ஒரு மாதிரி வித்தியாசமாக, இருந்தாலும் இது ஒன்றும் சூப்பர் முடிவு கிடையாது.
தெலுங்கிலோ, த்ரிஷா வெங்கடேஷுடன் பேசுவதை தாத்தா பார்க்கிறார். வீட்டுக்கு வந்த த்ரிஷாவுக்கு டோஸ் விழுகிறது. தலை முழுகச் செய்து, பூஜை செய்து வெங்கடேஷை மறக்க சொல்லி சத்தியம் வாங்குகிறார் தாத்தா. பிறகு, வெங்கடேஷையும் திட்டி அனுப்புகிறார்கள். இங்கு பாட்டியை அவர் கூட்டி செல்லவில்லை. போகும் வழியில், ஒரு திருவிழா கூட்டத்தில், முன்னால் ஒரு சீனில் அடி வாங்கிய வில்லன், வெங்கடேஷை கத்தியால் குத்துகிறார். மறுநாள், கல்யாணத்தின் போது, வெங்கடேஷ் குத்துப்பட்ட விஷயத்தை ஒருவர் வந்து சொல்கிறார். தாத்தா அசைந்து கொடுக்கவில்லை. மற்றவர்களும். பாட்டி மட்டும் தாத்தா சொல்லை மீறி செல்கிறார். பிறகு, குழந்தைகள். கடைசியில், ஸ்ரீகாந்தும் பிற மக்களும். த்ரிஷாவும், தாத்தாவும் மட்டும் இருக்கிறார்கள். ஏன் என்று தாத்தா கேட்க, உங்களுக்கு செய்த சத்தியத்திற்காக மறந்து விட்டேன் என்று பீலிங்கை கூட்டுகிறார்.
இரவு ஆஸ்பிட்டலில், படுத்து கிடந்த வெங்கடேஷ் பெட்டில் இருந்து எழுந்து வெளியே வருகிறார். மொத்த உறவினர் கூட்டமும் வெளியே தூங்கி கொண்டிருக்கிறது. அவர்களை கடந்து அடுத்த அறைக்கு வர, அங்கே தாத்தா. தாத்தா எழுந்து செல்ல, பின்னால் த்ரிஷா. யுவன் பேக்ரவுண்ட் ம்யூசிக்.
அப்புறம், சிட்டியில் வெங்கடேஷ் வீடு. தமிழ் கிளைமாக்ஸ் போல், பாத்ரூமிலிருந்து வெளியே வந்து பாட்டி திட்டுகிறாள். குழந்தைகள் விளையாடுகிறார்கள். வீட்டுப்பெண்கள் பெரிய லிஸ்ட் கொடுக்கிறார்கள். ஸ்ரீகாந்தும், நண்பர்களும் தண்டால் எடுக்கிறார்கள். ப்ராஜக்ட் மேனேஜர் (!) த்ரிஷா குக்கரில் ஏதோ வைத்து சமையல் செய்கிறார். முன்னாள் வெட்டி, இந்நாள் சாப்ட்வேர் இன்ஜினியர் கணவர் வெங்கடேஷ் பின்னால் வந்து கிஸ் கொடுத்து விட்டு, டை கட்டியவாறு ஐ.டி. கம்பெனிக்கு செல்கிறார். வெளியே கோயிலில் தாத்தா உட்கார்ந்து அதே டயலாக் அடிக்க படம் முடிகிறது.
கொஞ்சம் இழுத்ததுப்போல் இருந்தாலும், இதுவும் நல்லாதான் இருந்தது. பொதுவா, ஹிட்டான படங்களின் கிளைமாக்ஸை மாற்ற மாட்டார்கள். (கஜினியில் மாற்றினார்கள்). இதில் ஏன் மாற்றினார்கள்? தமிழ் மக்கள் வித்தியாசமான கிளைமாக்ஸை தான் எதிர்ப்பார்ப்பார்கள் என்றா? எனக்கு படம் முழுக்க தமிழில் பிடித்திருந்தாலும், குழப்பமில்லாத தெலுங்கு கிளைமாக்ஸ் பிடித்திருந்தது.
20 comments:
உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்
என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது
இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html
ஆந்திரக் காரர்களின் ரசனை என்றும் நன்றாக இருக்கும்
தகவலுக்கு நன்றி தமிழினி...
வாங்க சுரேஷ்
SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஆந்திரக் காரர்களின் ரசனை என்றும் நன்றாக இருக்கும்
///
நெசமாத்தான் சொல்றியளா?
தெலுங்குல இப்பத்தான் பாத்தீங்களா?
தமிழ்ல எனக்கு பிடிக்கலை. வெங்கியும், கோட்டாவும் அப்பா மகனா கலக்கற காட்சிகள் சூப்பர். வெங்கி, த்ரிஷா ஜோடி ஈர்த்த அளவு ஒல்லிகுச்சி தனுஷும் நயனும் ஜோடி நல்லாவேயில்லை. அந்த எக்ஷ்பிரஷன் எல்லாம் தமிழ்ல ரொம்பவே மிஸ்ஸிங்
உங்க பெருந்தன்மையை என்னான்னு சொல்றது???
அந்தப் படத்தை தமிழ்லியே பாதி கூட என்னால பாக்க முடியலை,ஆனா நீங்க, ரெண்டு மொழியில பாத்து கம்பேரிஷனே கொடுத்திருக்கீங்க!!!
என்னமோ போங்க, சினிமா விஷயத்துல மட்டும் நீங்க ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கா இருக்கீங்க...
/SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஆந்திரக் காரர்களின் ரசனை என்றும் நன்றாக இருக்கும்
///
நெசமாத்தான் சொல்றியளா?//
குடுகுடுப்பை,
சொன்னா நம்பணும் :-)
//தெலுங்குல இப்பத்தான் பாத்தீங்களா?//
ஆமாங்க புதுகைத்தென்றல், இப்பத்தான் பார்த்தேன்... தெலுங்கு பார்க்குற வழக்கமெல்லாம் இல்லங்க...
//உங்க பெருந்தன்மையை என்னான்னு சொல்றது???
//
ஹி ஹி...
//அந்தப் படத்தை தமிழ்லியே பாதி கூட என்னால பாக்க முடியலை//
நரேஷ், அவ்ளோ மோசமாவா இருந்துச்சு? எனக்கு பிடிச்சிருந்துச்சே!
//என்னமோ போங்க, சினிமா விஷயத்துல மட்டும் நீங்க ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கா இருக்கீங்க...//
ஹா ஹா ஹா :-)
தமிழ் படத்துல வேற என்னங்க எதிர்பார்க்குறது, நரேஷ்?
அருமை! லேட் விமர்சனம் என்றாலும்..
லேட்டஸ்ட் விமர்சனம்... சூப்பருங்கண்ணா!!
இதுபோல இடுகை இட்டுள்ளேன், வந்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...
http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_14.html
//நரேஷ், அவ்ளோ மோசமாவா இருந்துச்சு? எனக்கு பிடிச்சிருந்துச்சே!//
சரவணகுமரன் யாரடி நீ மோகினி பற்றிய எனது பார்வைகீழே கொடுத்திருக்கிறேன், இது எனது விமர்சனமல்ல (எனக்கு தெரிந்தவருடையது, ஆனால் இதிலுல்ள கருத்துக்கள் அனைத்திலும் எனக்கு ஒப்புதலே...)
யாரடி நீ மோகினி
இந்தப் படத்தைப் பற்றி என்ன சொல்வது?? ஆரம்பிக்கும் முன்னே ஒன்றே ஒன்று சொல்லி விடுகிறேன். நீங்கள் இந்தப் படத்தை ரசித்துப் பார்த்தீர்களா?? நான் இந்தப் படத்தின் மீது வைக்கும் விமர்சனம் உங்களுக்கு ஒருவேளை கோபத்தைக் கூட வரவைக்கலாம். எனவே தொடர்ந்து படிப்பது உங்கள் இஷ்டம்.
என்னைக் கேட்டால் இது போன்ற படங்கள் ஒரு சாபக் கேடு என்றுதான் சொல்வேன். தெலுங்கில் இந்த படத்தை செல்வராகவன் இயக்கி இருக்கிறாராமாம். இது போன்ற கதையில், செல்வராகவன் மட்டும் எப்படி வித்தியாசமாய் எடுத்து விட முடியும் என்று இதன் தெலுங்குப் பதிப்பையும் பார்க்க விருப்பம்தான். ஆனால் இந்த படம் தந்த கோபத்திலிருந்தே நான் இன்னும் மீள வில்லை. இன்னொரு ரிஸ்க் எடுக்க பயமாய் இருக்கிறது. ரொம்பவும் சந்தோஷமாய் இருக்கும் ஒரு தருணத்தில் அதை பார்க்கலாம்.
ஒரு துறையைப் சார்ந்து படம் எடுப்பதற்கு முன்பு, அந்த துறையப் பற்றி கொஞ்சமெனும் அறிவைப் பெற்றுக் கொண்டு படம் எடுத்துத் தொலையலாம். எனக்குத் தெரிந்து எந்த மென்பொருள் துறை அலுவலகத்திலும் ப்ராஜக்டை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுப்பதில்லை. நான் கடைசியாய் பிரிண்ட் அவுட் எடுத்தது கல்லூரியில் எதோ ஒரு சாதாரண ப்ரோக்ராமுக்காக. இங்கே சர்வதேச துறையில் அதைச் செய்து கொண்டிருக்கிறார்களாம்.
தனுஷின் இண்டர்வியூ காட்சிகள், முதன் முறை அலுவலகம் செல்லும் போது தனுஷிடம் மனோபாலா, நயன்தாரா நடந்து கொள்ளும் முறை, ”காஞ்ச மாடு வக்கப்புல்லை பார்ப்பது போன்று” தனுஷ் நயன்தாராவிடம் நட்ந்து கொள்ளும் முறை, என்று எந்த காட்சிகளிலும் யதார்த்தம் என்ற ஒன்றை எவ்வளவு தேடினாலும் கிடைக்கவில்லை. ஒரு கம்பெனியின் ப்ராஜக்ட் லீடரை, அவரது சீனியர் எல்லார் முன்னிலையிலும் திட்டுவது, “system.out.println” கூடத் தெரியாத ஒருவர், ஓவர் நைட்டில் ஒட்டு மொத்த ப்ராஜக்டையே 2 டீ குடித்தவாறே முடிப்பது, கீபோடர்டை பட பட வென்று தட்டியவுடன், ஒட்டு மொத்த ப்ராஜக்டே க்ராஷ் ஆகி விட்டது எனும் காட்சி ஆகியவற்றையெல்லாம் பார்க்க, பார்க்க உள்ளுக்குள்ளே ரௌத்ரம் பொங்குகிறது. எப்படி எடுத்தாலும் பார்வையாளர்கள் படம் பார்ப்பார்கள் எனும் ரசிகனை அடிமட்ட மடையனாகவே பார்க்கும் ஒரு எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் இதில் ஒளிந்திருப்பதாய் நினைக்க முடியவில்லை.
மனோபாலா சாஃப்ட்வேர் இஞ்சினியரின் கதாபாத்திரமாம். அடக் கொடுமையே. செல்வராகவன் தொடர்ச்சியாய் விடலைப்பையன்களின் மன நிலையை படம் பிடித்துக் காட்டுகிறேனென்று சொல்லிக் கொண்டு இதிலும் அதைச் சற்றே பிரதிபலித்திருக்கிறார். “நமக்கெல்லாம் இப்படி ஒருத்தி படு பயங்கர அழகா, வெள்ளையா, மாடர்னா ஒருத்தி கிடைப்பாளா” எனும் ஏக்கத்தை இன்னொரு முறை உபயோகப் படுத்திக் கொண்டிருக்கிறார். லிஃப்டில் நயன்தாராவுடன், தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தனுஷ் பொறாமைப்படும் காட்சி அதைச் சொல்கிறது. தனுஷைப் பார்த்தால் பக்கத்து வீட்டுப் பையனைப் போன்ற ஓர் உணர்வு ஏற்படுவது உண்மைதான். ஆனால் இன்னும் எத்தனை முறை தனுஷை இதே போன்ற கேரக்டர்களில் நடிக்க வைப்பார்களோ????
படத்தின் கதை என்று பார்த்தால், தனுஷ் நயந்தாராவை எதேச்சையாய் பார்க்கிறார். அவரை கவர் செய்வதற்காகவே (தனுஷின் நடவடிக்கைகள் இந்த வார்த்தையைத்தான் என்னை உபயோகப் படுத்த வைக்கின்றன.) நயன் வேலை செய்யும் அலுவலகத்தில் 2 நாள் கடினமாய் உழைத்து சேர்ந்து விடுகிறார். 5 வருஷமா தனுஷ்க்கு வேலை கிடைக்க வில்லை என்பதை இங்கே மறந்து விட வேண்டும். அப்புறம் நயனிடம் காதலை சொல்ல, அவ்ர் மறுக்க, தனுஷ் அப்பா ரகுவரன் சிபாரிசிற்கு வந்து நயனிடம் பேச, நயன் ரகுவரனை திட்டி அனுப்பி விட, அடுத்த நாள் காலையில் ரகுவரன் இறந்து கிடக்கிறார். சோகத்திலிருந்து தனுஷை மீட்க அவரது நண்பர் கார்த்திக் தனது கிராமத்தில், கூட்டுக் குடும்ப வீட்டிற்கு கூட்டிப் போக அங்கேதான் தெரிய வருகிறது நயந்தான் கார்த்திக்கை கட்டிக் கொள்ளப் போகும் முறைப் பெண் என்று. அப்புறம் என்ன, தனுஷின் தொடர்ச்சியான ஹீரோயிச நடவடிக்கைகள் நயனிற்கு தனுஷின் மீது காதலை வரவைத்து விடுகிறது. வழக்கம் போல் கார்த்திக் விட்டுக் கொடுக்கிறார். அவர்களது குடும்பமும் இதெல்லாம் அடிக்கடி எங்க வீட்ல நடப்பதுதான் என்பது போல கேசுவலாக இதை எல்லாம் ஏற்றுக் கொள்கிறது. அவ்வளவுதான். சுபம். நாயகனும் நாயகியும் ஒன்று சேர்ந்து விட்ட சந்தோசத்தில் ரசிகர்கள் வீடு திரும்புகின்றார்க்ள்.
இந்த கதையை வைத்து இந்தியாவில் படமெடுக்க வேண்டுமென்றால், 2 1/2 மணி நேரம் இதை இழுக்க வேண்டும். ஆனால் இந்த கதை அவ்வளவு நேரம் வராதே. என்ன செய்யலாம். ரசிகர்கள் இதைதான் எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லி 5 பாடல்கள் அதில் இரண்டு அல்லது மூன்று பாடல்களில் நடிகை தொடை, தொப்புள், க்ளிவேஜ் தெரிய ஆட வேண்டும். 2 சண்டைக் காட்சிகள், 5 க்ளிஷே காட்சிகள், மொக்கையாய் 4 காமெடி காட்சிகளை வைத்தால் ஒருமணி நேரம் சேர்ந்துவிடும். அப்புறம் என்ன தமிழ் சினிமா ஃபார்மூலா ரெடி. 2 1/2 என்ன 3 மணி நேரம் கூட எடுக்கலாம்.
முதல் பாதி முழுக்க, முழுக்க கலாட்டாவாகவும், காமெடியாகவும் போக, இரண்டாவது பாதி முழுதும் செண்டிமெண்ட், ஹீரோவின் தியாகம், பீறிட்டு அடிக்கும் காதல் உணர்ச்சி என்று எல்லா கலவையையும் இரண்டாவது பாதியில் கொட்ட இதோ கதை ரெடி. ஒரு காலத்தில் ஆர்.பி.சௌத்ரி த்யாரிப்பு இயக்குநர்களும், விக்ரமன் அவர்களும் ஆரம்பித்து வைத்ததை இன்றும் தமிழ் சினிமா தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இங்கே காமெடி என்று செய்யும் லூட்டிகள் எரிச்சலைத்தான் வர வைக்கின்றது.
ஆஸ்திரேலியா டூர் காட்சிகளும் குறிப்பாக நயன் குடித்து விட்டு செய்யும் லூட்டிகளும் பார்வையாளனின் அடிமட்ட ரசனைக்கு தீனி போடும் நோக்கத்தைத் தவிர வேறு எதற்காகவும் எடுக்கப் பட்டதாய் தெரிய வில்லை. முக்கியமாய் குடித்து விட்டு நைட்டியை இழுத்து விட்டு தான் உட்காருவேன் எனும் காட்சி, நயனைச் சீண்டி தனுஷ் பாடும் பாடல், திடீரென்று நயன் தாராவை தனுஷ் ஒருமையில் கூப்பிட ஆரம்பிப்பது, என பல விஷயங்கள் என்னைப் பொறுத்த வரை ஆண் பார்வையாளனின் விகார உணர்வை குறிவைத்துத்தான் எடுக்க பட்டிருக்கிறது. ஒரு பெண்ணை ஒரு தலை பட்சமாய் காதலிக்க ஆரம்பித்து விட்டாலே போதும் அவள் மீது என்ன உரிமை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் எனும் ஓர் ஆதிக்க எண்ணத்தின் வெளிப்பாடாய்த்தான் தனுஷ் தனது சீனியாரான நயனை திடீரென்று ஒருமையில் கூப்பிட ஆரம்பிக்குகம் காட்சிகள் உணர்த்துகிறது.
மற்றவர்களுக்கு எப்படியோ, நயன் ரகுவரனை திட்டும் காட்சிகளில் எல்லாம் ரகுவரன் மீது எனக்கு சற்றும் பரிதாபம் ஏற்பட வில்லை. நயன்தாரா செய்தது சரிதானே என்றுதான் எண்ணத் தோன்றியது. ஆனால் அனுதாபம் ஏற்பட வேண்டுமே.விளைவு ரகுவரன் சாகிறார். தனுஷ் அநாதை ஆகிறார்.இன்னும் எத்தனை வருடங்களுக்குதான் எனக்குன்னு யாருமில்லை நான் ஒரு அநாதை என்று எவரேனும் சொல்லும் போது, பிண்ணனினியில் நூறு வயலின்கள் சோக கீதம் பொழிய, எதிரில் கேட்டுக் கொண்டிருப்பவர் உடனே கண்களை கசக்க ஆரம்பித்து “நான் இருக்கேன்பா உனக்கு” என்று பரிதாப்த்தின் அடிப்படையில் காதல் எழுவதை காட்டிக் கொண்டிருப்பார்களோ தெரிய வில்லை. இப்படி பரிதாபப்பட்டும், அனுதாபம் காட்டி காட்டியேதான் இன்னமும் பலரது உணர்வுகளை நாம் காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
கார்த்திக், தனுஷ், நயன் ஆகியோர் ஊருக்குப் போகும் போது காட்டும் பாடலும், அதில் ஆடும் நடிகையின் நடன அசையுகளும் குறிப்பாய் பாடலின் இறுதிக் கட்டத்தில் வயல் வெளியில் ஒற்றைப் பாதை பிண்ணனியில் தெரிய, வலப்பக்க ஓரமாய் நின்றுக் கொண்டு நடிகை இடுப்பை அசைத்து செய்யும் நடன அசைவுகள்…… இதுக்குப் பேசாமல் மெகாசீரியல் எடுத்துப் பொழைக்கலாம்.
ஒரு காலத்தில் ரெக்கார்டு டான்ஸ் பார்ப்பது என்பதை தவறான, அறுவறுப்பான ஒன்றாகப் பார்த்த சமூகம் இப்போது குடும்பத்துடன் உட்கார்ந்து அதைக் கண்டு களிக்கிறது என்பதை நினைத்து தமிழ் சினிமா பெருமைப்பட்டுத் தொலையட்டும்.
பி.கு:
ப்ளாக்கர்ஸ் மட்டுமல்ல, எனது அலுவலக நண்ண்பர்களில் பலர் கூட படம் “செமை காமெடிங்க” என்று சொல்லும் போது என்னால் தாங்கவே முடிவட்தில்லை.. டேய் உங்களைத்தாண்டா மாக்கான்னு நினைச்சு பாடம் எடுத்திட்டிருக்கான். அதை வேற உக்காந்து ரசிக்கறீங்களாடா என்று தினமும் சன்டை போட்டுக் கொண்டிருக்கிறேன்
இதற்கு மேலேயும் இந்த படத்தில் நிரம்பியிருக்கும் அபத்தங்களை காட்சிக்குக் காட்சி காட்டி பட்டியலிடலாம்தான். இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே அதிகம் என்று தோன்றுகிறது
நரேஷ், விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி...
இது ஒரு சாதாரணமான பொழுதுபோக்கு படம். எல்லோரும் கண்டிப்பாக காண வேண்டிய காவியம் என்பதல்ல என் கருத்து. அந்த காரணத்தாலும், அவரது விமர்சனத்திற்கு கூற பதில்கள் இருந்தாலும், அவசியமில்லாததால் கூறாமல் விடுகிறேன். ஒவ்வொருவரின் ரசனையும், எதிர்ப்பார்ப்பும் ஒவ்வொரு மாதிரி.
நரேஷ், இந்த விமர்சனத்தை எழுதியது யாருங்க? அவர் பாராட்டும்படி இதுவரை எதாவது தமிழ்படம் வந்துள்ளதா, அவர் ரசித்த பத்து தமிழ் படங்கள் என்ன என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
சரவண குமரன்,
கண்டிப்பாக, இந்த விமர்சனங்களுக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும் என்ற காரணத்துக்காக இட்டவை அல்ல...
ஒவ்வொருவருடைய ரசனையும் மாறுதல் கொண்டதே, ஆனால், சில சமயங்களில் சினிமாத் துறையினருக்கென்று ஒரு சில கடமைகள் உள்ளன என்பதை அவை மறந்து விடுகின்றன்...
சினிமா ஒரு பொழுது போக்கு விஷயமாக இருந்தாலும் மறைமுகமாக மக்கள் மனதில் அது ஏற்படுத்துகின்ற கருத்தாக்கங்கள், பாதிப்புகள் போன்ற பல விஷயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவையே...
ஒவ்வொரு படமும் உலகப் படம் ரேஞ்சுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் மக்கள் மனதில் மறைந்திருக்கக் கூடிய சற்று விகாரமான விஷயங்களை கிளறி படம் எடுக்கும் போது சற்றே கோபம் வந்து விடுகிறது.. இதே ரேஞ்சில் வந்த இன்னொரு படம் தனுஷின் தேவதையைக் கண்டேன்....
இந்தப்படத்தைப் பற்றி நாம் இவ்ளோ அலசியதே இதன் தகுதிக்கு ஏற்புடிஅயது அல்ல, உங்கள் ரசனை உங்களுக்குன்னு உட்டிருக்கலாம்...நீங்க கேட்டீங்களேன்னுதான் இந்த விமர்சனத்தைப் பத்தி போட்டேன்..
சொல்ல மறந்துட்டேன்,
இந்த விமர்சனத்துக்கு சொந்தக்காரார், நந்தா...
www.blog.nandhaonline.com
http://blog.nandhaonline.com/?p=46
சமீபத்திய படங்களில் அவனுக்கு பிடித்த படங்கள் பசங்க, அபியும் நானும், வாரணம் ஆயிரம் போன்றவை...
வித்தியாசமான படங்கள் மட்டுமே வரப்பிரசாதம் எனப்தல்ல அவனது நிலைப்பாடு, ஆனால் கமர்ஷியல் என்ற பெயரில் சில சமயங்களில் ரொம்பவே டென்ஷன் பண்ணிர்ரானுங்க இந்தப் புன்ணியவானுங்க :))), இந்த சோதனை மாதிரி சாரி தோரணை மாதிரி
உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது
உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது
இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html
//இந்தப்படத்தைப் பற்றி நாம் இவ்ளோ அலசியதே இதன் தகுதிக்கு ஏற்புடிஅயது அல்ல//
ஆமாங்க, நரேஷ்... விட்டுடலாம். :-)
அப்புறம், நந்தா வலைப்பதிவைப் பார்த்தேன். நன்றாக இருந்தது.
Post a Comment