சென்ற இரு வாரங்கள் எம்.பி.ஏ. தேர்வுகள் இருந்தன.
எவ்ளோ அக்கறையா எழுதினேன்’ன்னு சொல்றேன்...
---
தேர்வுக்கு முந்திய தினங்களில் தான் படிப்பதால், அந்த தேர்வுக்கு காலையிலேயே எழுந்துவிட்டேன். படித்து விட்டு கிளம்ப நிறைய நேரம் இருந்தது. பொறுமையாக பேனா, பென்சில எல்லாம் எடுத்துவிட்டு கிளம்பினேன். போறப்ப, பாட்டு கேட்க எம்பி3 உள்பட.
காலேஜ் கிட்ட நெருங்கும்போது தான் நினைவுக்கு வந்தது. ஹால் டிக்கெட்டும் எடுக்கலை. ஐடி கார்டும் எடுக்கலை. சுத்தம். நின்னு யோசிச்சேன். இருக்குற டைம்முக்கு வீட்டுக்கு போயி எடுக்க முடியாது.
பக்கத்துல இருந்த பிரவுசிங் செண்டர் போனேன். யூனிவர்சிட்டி சைட்ல இருந்து ஹால் டிக்கெட் டவுன்லோட் பண்ணி பிரிண்ட் அவுட் எடுத்தேன். (டெக்னாலஜி வாழ்க!) அதுல ஐடி கார்டு அவசியம்ன்னு போட்டு இருந்திச்சு. சரி, போய் பார்த்துக்கலாம்ன்னு போயிட்டேன்.
அப்புறம் அங்க இருக்குற பெரிய வாத்தியார பார்த்து, ’ஐயா, ஐடி கார்டு இல்ல’ன்னு சொல்லி, பர்ஸ்ல பால் கார்டு, விசிட்டிங் கார்டு மாதிரியான கார்டுகளை எல்லாம் எடுத்து காட்டி எக்ஸாம் எழுதினேன்.
என் அக்கறையை நினைச்சு, என்னை நானே திட்டிக்கிட்டேன்.
----
பதிவு எழுதுறதுல ஒரு நல்ல விஷயம். கை வலிக்க வலிக்க, பரீட்சையில கதை எழுத முடியுது. நாலு பரீட்சையில எழுதி, ஒரு பேனாவை காலி பண்ணிட்டேன்னா, பாருங்களேன். ஆனா, கால்குலேஷன் பண்ண வேண்டிய பரீட்சைன்னா, திணறல்தான்.
நம்ம பாடுதான் திண்டாட்டம்ன்னு நினைச்சு போனா, அங்க எல்லோரும் அப்படி தான் போல. நான் போட்ட கணக்குல அசந்து போயி, முன்னாடி இருந்த பொண்ணுங்க, கண்காணிப்பாளர் வெளியே போன நேரத்துல, என் பேப்பர பாத்து எழுதினாங்க. அந்த பதில்ல நானும் ரொம்ப நம்பிக்கையா இருந்ததால, சரின்னு விட்டுட்டேன்.
அந்த பரீட்சைக்கு கால்குலேட்டர் எடுத்துட்டு போகாதது, நானாத்தான் இருக்கும்.
----
நான் கோர்ஸ் சேர்ந்து கொஞ்சம் நாள்ல, செல்வராகவன் ’ஆயிரத்தில் ஒருவன்’ ஆரம்பிச்சாரு. அவரு முடிக்கறதுக்குள்ள, நான் முடிச்சிடலாம்ன்னு பார்த்தா, அவர் முடிச்சிடுவாரு போல. கடைசி பரீட்சைக்குள்ள, பாட்ட ரீலிஸ் பண்ணிட்டாரு. நான் பிராஜக்ட் முடிக்கறதுக்குள்ள, படத்த ரீலிஸ் பண்ணிடுவாரா?
----
ஒண்ணுமே தெரியாம போனாலும், எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுதிட்டு வந்திட்டேன். இதுவும் ப்ளாக் எழுதி, பார்த்து கத்துக்கிட்டது தான். :-)
----
எல்லா பரீட்சைக்களுக்கும் ஒரு நாள், ரெண்டு நாட்கள் முன்னாடிதான் படிக்க ஆரம்பிச்சேன். ஆனாலும், ஒரளவுக்கு திருப்தியாத்தான் முடிச்சிட்டு வந்திருக்கேன்.
நம்ம மெத்தட் என்னன்னா,
1) முழு புக்ஸையும் முழுசா வாசிக்கணும். ஒவ்வொரு புக்கு’கும் ஒரு டைம் டார்க்கெட். அதுக்குள்ள முடிக்க (படிக்க’ன்னு போடலை, பாருங்க) முடியாட்டி, அடுத்த புக். முடிவுல, விட்டது எல்லாம்.
2) கடைசியா வந்த நாலு பழைய கொஸ்டின் பேப்பர்கள எடுத்துக்கிட்டேன். அதுக்கான பதில்களை எல்லாம் பார்த்துக்கிட்டேன்.
3) பரீட்சைக்கு முன்னாடி, என்ன பாத்துட்டு போறோமோ, அதுதான் பிரஷ்சா நினைவுக்கு நிக்கும். ஸோ, காலையில எல்லா புக்கையும் புரட்டி, பெரிய தலைப்பு, சின்ன தலைப்பு, படங்கள் இதெல்லாம் பாத்துக்கிட்டேன்.
4) படம் போடுறதால சில நன்மைகள் உண்டு. புரிஞ்சத, புரிஞ்சதுன்னு பேப்பருல காட்டலாம். சில நேரங்களில், படம் வரையும் போது தான், நமக்கே புரியும்! படத்த பார்த்து பார்த்து, கருத்து சொன்னா, பதில் ரெடி. கொஞ்ச நேரத்துல, நிறைய பேப்பர் வாங்கி ஹால்ல இருக்குறவங்கள அசர வைக்கலாம். வெளியே வந்து, பரீட்சைல படம் போட்டேன்னு பந்தா பண்ணிக்கலாம்.
5)பரீட்சைல, புக்குல உள்ளது மட்டும் இல்லாம, பொதுவா யோசிச்சு எழுதுற மாதிரியும் கேட்பாங்க. செம ஜாலியா இருக்கும். அப்படியே கற்பனையை தட்டி விட்டோம்னா, நாலைஞ்சு பக்கம் காலியாயிரும்.
6) தெரியாதது கேட்டா, மிரள கூடாது. அது சம்பந்தப்பட்டத, படிச்சத எழுத ஆரம்பிச்சா, தேவையானது கூட வரும். வராட்டியும் பிரச்சினை இல்லை.
7) முடிஞ்ச அளவுக்கு எல்லா கேள்வியும் அட்டெண்ட் பண்ணவேன். தப்பா கேள்வி கேட்டு இருந்தா, அட்டெண்ட் பண்ணுறதுக்கு மார்க் போடுவாங்கலாமே? (இன்னுமா இந்த எண்ணம்?)
8) யோசிச்சு கணக்கு போடுற பதில்களை, முதல்ல போடுவேன். கடைசில நேரம் இல்லாட்டி, மண்டைக்குள்ள ஒண்ணும் ஒடாது. முடிவுல ரிசல்ட் வராட்டி, மார்க்கும் வராது.
9) பரீட்சை எழுதி வெளியே வந்தவுடனே, அந்த பரீட்சையை மறந்திருவேன். அடுத்த பரீட்சைக்கு ப்ளான் ஆரம்பிச்சிருவேன்.
10) மொத்ததுல, பரீட்சையை பரீட்சை மாதிரி எழுதலை. பரீட்சைக்கு படிக்குற புக் மாதிரி எழுதியிருக்குறேன். அவ்ளோ நம்பிக்கை. ரிசல்ட் வந்தாதான் தெரியும். இதுவரைக்கும் ஒழுங்காத்தான் வந்திருக்கு.
அட்வைஸ் இல்ல. அனுபவம் மட்டுமே.
----
சும்மாவே நமக்கு பிடிக்காத புத்தகத்தை எடுத்து வச்சா, தூக்கம் வரும். அதுலயும், பரீட்சை நேரத்துல, தூங்குறதுன்னா ரொம்ப ஆசையா இருக்கும். பத்து பதினொண்ணுக்கே சொக்கும். காலையில எழுந்திரிக்க மனசே வராது. எல்லாம் முடியட்டும். நல்லா தூங்கணும்ன்னு நினைச்சிருந்தேன்.
இப்ப பாருங்க, மணி ஒண்ணாச்சு... இன்னமும் தூங்கலை.
ஒரு விஷயம் முடியாத போது தான், அது மேல ஆசை வரும், இல்ல?
13 comments:
//மொத்ததுல, பரீட்சையை பரீட்சை மாதிரி எழுதலை. பரீட்சைக்கு படிக்குற புக் மாதிரி எழுதியிருக்குறேன். அவ்ளோ நம்பிக்கை. ரிசல்ட் வந்தாதான் தெரியும். இதுவரைக்கும் ஒழுங்காத்தான் வந்திருக்கு.///
ஹய்ய்ய்ய்யோஓஓஓஓ மொத்தமா பார்க்குறச்சா நானும் இதையே காப்பி அடிச்சிடலாம் போல - ஸேம் ப்ள்ட் :))))
//எல்லாம் முடியட்டும். நல்லா தூங்கணும்ன்னு நினைச்சிருந்தேன்.//
பரீட்சைக்கு ரெண்டு நாள் முன்னாடி படிக்கறச்ச ம்ம் ரெண்டு நாள் தான் முடிச்சதும் ஒரு 24 மணி நேரத்துக்கு கண்டினியூவா தூங்கணும்,எந்திரிச்சு சாப்பிட்டுட்டு ஊரை சுத்தணும்ன்னு ஏகப்பட்ட லட்சியங்கள் - பரீட்சை படிக்கிறப்பத்தான் மனசில வந்து விதைக்கும் :)))
ஆத்தா நான் பாசாயிட்டேன்னு தைரியமா சவுன்டு கொடுக்கவேன்டியதுதானே, எதுக்கும் ரிசல்ட் வரட்டும்னு சொல்லுதீகளா?
எனக்கும் வருகிற ஆகஸ்ட்ல பரிட்சையாம், உங்க மெத்தட ஃபால்லோ செஞ்சா தேரிருவோம்னு ஒரு தெம்பு வருது அப்பு!!
வாங்க ஆயில்யன்...
//எனக்கும் வருகிற ஆகஸ்ட்ல பரிட்சையாம், உங்க மெத்தட ஃபால்லோ செஞ்சா தேரிருவோம்னு ஒரு தெம்பு வருது அப்பு!!
//
ஷஃபி, தெம்பு வருறது சரி, ரிசல்டுக்கு அப்புறம் ஏதும் வம்பு வராதே? :-)
//ஷஃபி, தெம்பு வருறது சரி, ரிசல்டுக்கு அப்புறம் ஏதும் வம்பு வராதே? :-)//
வேண்டாம்...விட்டுருங்க..சேலஞ்ச்..என்கிட்டே..ஹீ..ஹீ!!
//வேண்டாம்...விட்டுருங்க..சேலஞ்ச்..என்கிட்டே//
:-))
நாங்க ஒருதடவ அப்டித்தான் தல. எக்ஸாம் போறதுக்கு முன்னாடி ரிலாக்ஸ் பண்ணனும்க்ரதுக்காக கிரௌண்ட்ல ஜாவ்லின் வீசிக்கிட்டு இருந்தோம். அவ்ளோதான் 2 மணி நேரம் போனதே தெரியல. அப்புறம் என்ன ஆப்சென்ட் தான் அரியர்ஸ் தான்.
நவாஸோடு விளையாடிய மற்றொருவன் நானேதான்
//அவ்ளோதான் 2 மணி நேரம் போனதே தெரியல. அப்புறம் என்ன ஆப்சென்ட் தான் அரியர்ஸ் தான்.//
அடப்பாவமே!
நவாஸுதீன், ஏன் இப்படி?
//நவாஸோடு விளையாடிய மற்றொருவன் நானேதான்//
ஆஹ்ஹா... :-)
நல்ல ஐடியாவை குடுத்திருக்கிங்க....
நானும் முயற்சி பண்றேன்...(அப்படியாவது பக்கத்துல இருக்குற பிகரு பார்க்கட்டும்)....
வாங்க குரு...
ரிசல்ட் போன மாசன் வந்துச்சி... எல்லாம் க்ளியர்...
Post a Comment