Wednesday, June 3, 2009

சூப்பர் சிங்கர் - 2008 டூ 2009

ஒரு வழியா 2008 இன் சூப்பர் சிங்கரை 2009 முடிவதற்குள் அறிவித்து விட்டார்கள்.



கிரிஷும் கார்த்திக்கும் வந்திருந்த கூட்டத்திடம் கெஞ்சி கேட்டு கொண்டார்கள். சவுண்டு கொடுக்க சொல்லி. கச்சேரி பார்க்க வந்த கூட்டம் போல் இல்லை. ரொம்ப அமைதி. அஞ்சலை பாட்டுக்கு கூட அதிகம் கத்தலை. சாத்வீகம்.

யுவன் கொஞ்சம் அலட்டலாக தான் இருந்தார். டிவி பேரையும், நிகழ்ச்சி பேரையும் பின்னால் திரையை பார்த்து பார்த்து சொன்னார். எப்படா கிளம்புவோம் என்பது போல் இருந்தார்.




இடம் மூணு - போனது ரேணு



இரண்டு - ரவி



சூப்பர் சிங்கர் - அஜிஸ்







தொகுப்பாளர் என்ற பேரில் யுகேந்திரன் பண்ணும் காமெடி இதிலும் தொடர்ந்தது.

அஜிஸ் அம்மா - இதுக்கெல்லாம் காரணம் விஜய் டிவிதான்
யுகேந்திரன் - அதெல்லாம் இல்லம்மா!

:-)

இனி ஒரு வாரமோ, ஒரு மாதமோ, இவர்கள் குடும்பத்தினர் அழுவதை காட்டுவார்கள்.

11 comments:

வந்தியத்தேவன் said...

யுகேந்திரனின் மனைவி பற்றி எழுதாததைக் கண்டிக்கின்றேன். ரவிதான் உண்மையான சூப்பர் சிங்கர். அஜீஸ் மக்களைக் கவர்ந்த சிங்கர் அதிலும் ஒருவர் எத்தனை ஓட்டும் போடலாம் என்பதால் அஜீஸ் தன் மொபைலில் இருந்தே லட்சம் ஓட்டூப்போட்டிருப்பார். அதுதான் 7 லட்சம் கொடுத்தார்கள். இந்தக் கொடுமையெல்லாம் பார்க்கவேண்டும் என்பது எம் தலை எழுத்து. மானாட மயிலாடவில் கலா அக்கா நல்லதொரு ஜோடியைத்தான் தெரிவுசெய்தார். விஜய் டிவி மக்களை நன்றாக ஏமாற்றக் கற்றுக்கொண்டுவிட்டது.

nila said...

//தொகுப்பாளர் என்ற பேரில் யுகேந்திரன் பண்ணும் காமெடி இதிலும் தொடர்ந்தது.//

தொகுப்பாளர் என்ற பெயரில் மாலினி செய்யும் கொடுமையில் இருந்து தப்பிவிட்டதாய் நினைத்து நிம்மதி கொண்டிருக்கையில், விட மாட்டேன் என்பது போல் வந்துசேர்ந்தார்....
மாலினியையே பேசவிடாமல் தடுத்த விஷயத்தில் டிடியைப் பாராட்டத்தான் வேண்டும் [:P]

மகி said...

நன்றி சரவணா.. நானும் 10.30 வரைக்கும் பாத்தேன்.. மொக்கை தாங்க முடியல..
ரவிக்கு தான் கிடைக்கும்னு எதிர்பார்த்தேன்..
ரேணு எல்லாம் இறுதி சுற்று வரைக்கும் வந்ததே பெருசு..
கேரளத்தொலைக்காட்சிகளில், தகுதிச்சுற்றுக்கு வருபவர்களே இவர்களை விட பிரமாதப்படுத்தும் போது, நாம் இன்னும் இவர்களை கொண்டாடிக்கொண்டு 4 மணி நேரம் தொலைக்காட்சி முன்பு தேவுடு காத்துக்கொண்டு இருக்கிறோம்.. என்ன செய்வது?
ஆளை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை..!!

மகி said...

நன்றி சரவணா.. நானும் 10.30 வரைக்கும் பாத்தேன்.. மொக்கை தாங்க முடியல..
ரவிக்கு தான் கிடைக்கும்னு எதிர்பார்த்தேன்..
ரேணு எல்லாம் இறுதி சுற்று வரைக்கும் வந்ததே பெருசு..
கேரளத்தொலைக்காட்சிகளில், தகுதிச்சுற்றுக்கு வருபவர்களே இவர்களை விட பிரமாதப்படுத்தும் போது, நாம் இன்னும் இவர்களை கொண்டாடிக்கொண்டு 4 மணி நேரம் தொலைக்காட்சி முன்பு தேவுடு காத்துக்கொண்டு இருக்கிறோம்.. என்ன செய்வது?
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை..!!

Suresh said...

நானும் பார்த்தேன்

Suresh said...

//யுகேந்திரனின் மனைவி பற்றி எழுதாததைக் கண்டிக்கின்றேன்.//

ஹா ஹா நானும் தான்

சரவணகுமரன் said...

//யுகேந்திரனின் மனைவி பற்றி எழுதாததைக் கண்டிக்கின்றேன்.//

:-) மன்னிச்சுக்கோங்க...

//மானாட மயிலாடவில் கலா அக்கா நல்லதொரு ஜோடியைத்தான் தெரிவுசெய்தார்.//

வந்தியதேவன், ரொம்ப வருத்தமா?

:-)

சரவணகுமரன் said...

//தப்பிவிட்டதாய் நினைத்து நிம்மதி கொண்டிருக்கையில், விட மாட்டேன் என்பது போல் வந்துசேர்ந்தார்//

நிலா, எல்லோரும் இதைதான் நினைச்சு வருந்திருப்பாங்க போல?

சரவணகுமரன் said...

மகேந்திரன், நீங்களும் போயிருக்கலாம். நான் கண்டிப்பா உங்களுக்கு ஓட்டு போட்டிருப்பேன்.

சரவணகுமரன் said...

வாங்க சுரேஷ்

Prasanna said...

namala vechu tv kaaranga comedy kemedy panleyae?