டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயத்திற்கு எதிர்த்தாற் போல் ஒரு பார் திறக்க முடிவெடுக்கிறார் ஒரு தொழிலதிபர். சரி, கூட்டம் அதிகம் வரும் இடம். திறந்தால் லாபம் அதிகம் பார்க்கலாம் என்று ஒரு வியாபார தந்திரம்.
இது தெரிந்து போய் தேவாலயத் தலைமை அந்த தொழிலதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. தேவாலயத்திற்கு வரும் பக்தக்கோடிகளும் ஆட்சேபங்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், எதற்கும் பிடி கொடுக்கவில்லை அந்த தொழிலதிபர். மதுபான கடையை திறந்தே தீருவேன் என்று ஒற்றை காலில் நிற்கிறார்.
தேவாலய தலைமை கூடி பேசுகிறது. சொல்லி பார்த்தாச்சு, திருந்தலை. சட்டப்பூர்வமாகவும் அந்த நாட்டில் இவ்வாறு கடை அமைவதற்கு எந்த தடையும் இல்ல. மனு கொடுத்து பார்த்தார்கள். பலன் இல்லை. என்ன பண்ணலாம்? இதை எதிர்த்து தினசரி பிரார்த்தனை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. பிரார்த்தனையும் நடந்தது, பொதுமக்கள் ஆதரவுடன்.
இது எதற்கும் சாய்ந்து கொடுக்கவில்லை பார் ஓனர். கட்டிட வேலை மும்முரமாக நடந்தது. தொழிலதிபருக்கு எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்தது, கடை திறப்பதற்கு ஒரு வாரம் முன்பு வரை.
அது ஒரு மழைக்காலம். இடி, மின்னலுடன் தினமும் மழை பெய்து கொண்டிருந்தது. கடை திறப்பதற்கு ஒரு வாரம் முன்பு, ஒருநாள் பெய்த பலத்த மழையில், மின்னல் தாக்கி அந்த கட்டிடம் முழுவதும் சரிந்து விழுந்தது.
தொழிலதிபருக்கு பலத்த நஷ்டம். கவலையாகிவிட்டது. தேவாலயத்தைச் சேர்ந்தவர்களுக்கோ ஒரே குஷி. கொண்டாட்டம். தொழிலதிபர் முன்னால் சென்று “நாங்கத்தான் அப்பவே சொன்னோம்ல” என்று எகத்தாளம் வேறு.
வந்ததே கோபம், தொழிலதிபருக்கு. நேரே அந்த ஊர் கோர்ட்டுக்கு சென்றார். அந்த தேவாலயத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். தன் கட்டிடம் இடிந்து விழ காரணம் அந்த தேவாலயமும் அவர்களின் தொடர் பிரார்த்தனையும் தான் என்றும், அதனால் தனக்கு நஷ்ட ஈடாக பல மில்லியன் டாலர் பணம் தர வேண்டும் என்றும் தேவாலயத்தின் தலைமையை கோர்ட்டுக்கு இழுத்தார்.
அதுவரை சிரித்து கொண்டிருந்த தேவாலயத்தை சேர்ந்தவர்கள், இப்போது சிரிப்பை குறைத்து கொண்டார்கள். தங்கள் பிரார்த்தனையால் கட்டிடம் இடிப்படவில்லை என்றும், பிரார்த்தனையால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றும் அவர்களின் வாதத்தை முன்வைத்தார்கள். ஆதாரமாக, ஏதோவொரு பல்கலைக்கழகம் செய்திருந்த ஆய்வு முடிவுகளையும் முன் வைத்தார்கள்.
தன் முன்னால் இருந்த வாதங்களை கவனித்த நீதிபதி கூறினார். “நான் என்ன தீர்ப்பு வழங்க போகிறேன். எப்படி வழங்க போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் முன்னால் இருப்பவற்றை காணும்போது ஒன்று புரிகிறது. இங்கே பிரார்த்தனையின் சக்தியை கூற நம்மிடம் ஒரு பார் ஓனர் இருக்கிறார். அதை முற்றிலும் நிராகரித்து எதிர்ப்பு தெரிவித்தப்படி முழு தேவாலயமும் இருக்கிறது.”
அதான் பக்தி.
---
இது எனக்கு ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் வந்தது. தமிழாக்கம் செய்திருக்கிறேன். உண்மை நிகழ்வு என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கென்னமோ, உண்மை போல் தெரியவில்லை. ஆனால், இது உண்மையில் நடப்பதற்கும் சாத்தியம் இல்லாமல் இல்லை.
21 comments:
ரொம்ப நல்லா இருக்கு. அதிலும் அந்த கடைசி வரி.. சூப்பர்.
உண்மையோ, பொய்யோ உலக நடப்பு இதுதான்.
சிறந்த பக்தி/நீதிக் கதை.
கடைசி வரி.. சூப்பர்.
:)
ரசிக்கும்படியான வாதம்..
கடைசி வரி ஜூப்பரு!!!
நல்லாயிருக்கு!
ஹே ஹே ஹே
நல்லாயிருக்கே!
நல்ல நீதி(பக்தி)
அருமை. டிவிட்டரில் பார்த்து இங்கே வந்தேன். Worth coming.
//பிரார்த்தனையால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றும் அவர்களின் வாதத்தை முன்வைத்தார்கள். ஆதாரமாக, ஏதோவொரு பல்கலைக்கழகம் செய்திருந்த ஆய்வு முடிவுகளையும் முன் வைத்தார்கள்.//
ஒருவேளை இந்தப் பதிவில் சொன்னதாக இருக்குமோ?
நன்றி ராஜா
நன்றி DHANS
நன்றி ஜுர்கேன் க்ருகேர்
நன்றி தமிழர்ஸ்
நன்றி வினோத் கௌதம்
நன்றி நரேஷ்
நன்றி வால்பையன்
நன்றி கவின்
நன்றி செல்வக்குமார்
நன்றி தருமி ஐயா. அப்படியும் இருக்கலாம். :-)
நல்லா இருக்கு நண்பா,
Post a Comment