"ஏன் தான் பொண்ணு பார்க்க போறோம்ன்னு சொல்லிட்டு போனோமோ? இப்ப கேபின் கிட்ட போனவுடனே நம்மள சுத்தி வளைச்சிருவாங்களே..."
ஏன் வருத்தப்படுறேன்னு கேட்கறீங்களா? பொண்ணு வேண்டாம்ன்னு சொல்லியிருச்சு.
"ஹே! மேன்... வாட் ஹேப்பண்ட்?" பார்த்துட்டான்டா பழரசம் பார்த்திபன். அதென்ன பழரசம் பார்த்திபன்னு பார்க்கறீங்களா? ஜூஸ் ஜங்ஷன் போயி ஒரு நாளைக்கு ரெண்டு ஜூஸ் அடிப்பான்.
"பொண்ணு பிடிக்கலை. வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்."
"ஹைய்யா! பொண்ணு தப்பிச்சிருச்சி."
மானிட்டரை முறைத்து கொண்டிருந்தவன், முறைப்பை அவனிடம் காட்டினேன்.
"சரி, சரி சொல்லு. என்னாச்சு?"
"இல்ல, பொண்ணு கொஞ்சம் குண்டா இருக்கு."
ஹும் - எச்சில் தெறித்தப்படி வந்த சிரிப்பை விழுங்கிக்கொண்டு இடத்தை காலி செய்தான்.
நான் குனிந்து பார்த்தேன். என் தொப்பையை. அந்த பொண்ணும் அதைத்தான் அடிக்கடி பார்த்திச்சு.
*****
எங்க அப்பா "இந்த மாசம் முடிக்கலாம், அடுத்த மாசம் முடிக்கலாம்"ன்னு சொல்லத்தான் செய்யுறாரு. மாசம் மட்டும் தான் முடியுது. வேற எதுவும் முடிஞ்ச மாதிரி இல்ல. அவர் இத சொன்ன முத மாசத்துல கல்யாணம் பண்ணியிருந்தா, இந்நேரம் பொண்ணு மாசமாயிருக்கும்.
ஒரு வயசு பையன் மனசு புரியுதா? இன்னும் கொஞ்சம் நாள்ல வயசு பையன்னு கூட சொல்ல முடியாது. ஒரு ஆம்பிளை மனசு, இன்னொரு ஆம்பிளைக்கு புரிய மாட்டேங்குதே?
இந்த தரகரை சொல்லணும். பொண்ணு காட்டுறதுல ஒரு வேகம் காட்ட மாட்டேங்குறாரு. தேவையில்லாத விஷயத்தை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு வந்து கடுப்ப கிளப்புவாரு. இப்படித்தான் போன வாரம், என்ன விசேஷம்ன்னு கேட்டதுக்கு,
"உனக்கு முதல்ல ஒரு பொண்ணு பார்த்தோமே, அதுக்கு நேத்து டெலிவரி"ன்னாரு.
*****
இனி இவுங்கள எல்லாம் நம்புறதா இல்ல. நானே களத்துல இறங்கிறலாம்ன்னு இருக்கேன். தன் கையே தனக்கு உதவி. ஹலோ, சிரிக்காதீங்க.
இங்க ஆபிஸ்லயே யாரையாச்சும் பார்த்து, பேசி, லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிரலாம்ன்னு இருக்கேன். சாதி, மத, மொழி, இன பேதங்களை தகர்த்தெறிய எனக்கொரு வாய்ப்பு.
நானெல்லாம் இன்ஜினியருக்கு படிச்சதே, எனக்கு புடிச்ச பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணத்தான். இப்படித்தான் என் தலைவனும் சொன்னான். அவரு கல்யாணம் மட்டும் பண்ணாம, சூப்பர்ஸ்டாராகவும் ஆயிட்டாரு.
ஆனா, இங்க போட்டிக்கு பல பேரு இருக்கானுகளே. ப்ரஷ்ஷர் பொண்ணுகள, ட்ரெயினிங் முடிக்கறதுக்கு முன்னாலயே கரெக்ட் பண்ணிருறாங்க. அப்படி தப்பிச்சு வருற பொண்ணு, கொஞ்சம் சுமாரா இருந்தா போதும், முதல் ப்ராஜக்ட் முடிஞ்சு டெலிவரி பண்ணுறதுக்கு முன்னாடி, அந்த டீம்ல யாராச்சும் லவ்வ டெலிவரி பண்ணிருறாங்க. டெட்லைன் ப்ராஜக்ட்டுக்கு இருக்கோ, இல்லையோ, இவனுங்களுக்கு இருக்குது. விட மாட்டேன். மிச்சம் சொச்சம் இருக்கும்ல.
யார்ரா அந்த புள்ளை? நம்மளையே பார்த்துட்டு போகுது. புச்சா இருக்கே. எதுக்கு கீழே பார்க்குது?
அச்சச்சொ!!! ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தேன். இதே நினைப்புல பேண்ட் ஜிப் போட மறந்திருக்கேன். ச்சே.
*****
முடியலை. நானும் என்னென்னலாமோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன். எவளும் சீந்த மாட்டேங்குறாளே.
ஜிம் போயி தொப்பைய கொஞ்சம் குறைச்சிக்கிட்டு வந்து, டீம்ல கூட ஒர்க் பண்ற கேரள பொண்ணுக்கிட்ட "தொப்பை குறைஞ்சிருக்கா"ன்னு கேட்டா, அதுக்குள்ள சிக்ஸ் பேக்கோட ஒரு நார்த் இண்டியன் வந்து அவளை டீ சாப்பிட கூட்டிட்டு போயிடுறான்.
பேர் அண்ட் லவ்லி போட்டுக்கிட்டு, மங்களகரமா இருக்குற ஒரு குடும்ப பாங்குக்கிட்ட பேச்சு கொடுத்து, "சனிக்கிழமை கோவிலுக்கு போகலாமா"ன்னு கேட்டா, "இல்ல, நான் என் பாய் ப்ரண்ட் கூட பப்புக்கு போறேன்"னு சொல்லிட்டு போயிடுறா.
சரி, மேட்ரிமோனியல் சைட் போயாவது பார்க்கலாம் பார்த்தா, "அடேய் சாப்ட்வேர் இன்ஜினியர்களா! கொஞ்சம் தள்ளி நில்லுங்கடா"ங்கறாளுக.
எது எப்படியோ, நடக்குறது நடக்கட்டும்.
டீம்ல புதுசா ப்ரியான்னு ஒரு பொண்ணு ஜாயின் பண்ணியிருக்கா. நம்ம ஊருதான். கோயமுத்தூர். கேட்டி கொடுக்கணும். கடைசி முயற்சியை அவக்கிட்ட பண்ணுவோமா? எதுக்கு, வாங்குன பல்பு போதாதா?ன்னு உள்ளுக்குள்ள ஒரு சவுண்ட் கேட்குது.
கேட்டி கொடுத்து முடிக்கவும், அப்பாக்கிட்ட இருந்து போன்.
"ஆமாண்டா, தூரத்து சொந்தம். எல்லா பொருத்தமும் சரியா இருக்கு. எங்களுக்கு பிடிச்சிருக்கு. நீ வந்து பார்த்துட்டு சொல்லு".
*****
இன்னைக்கு காலையிலேயே எந்திரிச்சுட்டேன். சீக்கிரம் ஆபிஸ் போகணும். எல்லார்க்கிட்டயும் சொல்லணும். எனக்கு ரெண்டு மாசத்துல கல்யாணம்ன்னு. எத்தனை நாளா நினைச்சிருப்பேன்? இத சொல்லணும்ன்னு.
விஷயம் தெரியாதா? எனக்கு பொண்ணு புடிச்சு போச்சு. முக்கியமா, பொண்ணுக்கும் என்னை புடிச்சு போச்சு!
எல்லாரும் கூடி பேசி, அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் பதினாறாம் தேதி முகூர்த்தம் குறிச்சு இருக்காங்க. கல்யாணத்துக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு.
ஆபிஸ்ல இன்னும் யாரும் வரல. ப்ரியா மட்டும் இருந்தாள்.
"என்ன ப்ரியா, இவ்ளோ சிக்கீரம்?"
"பீஜி ரொம்ப போர். வீக் எண்ட் உங்களுக்கு கால் பண்ணினேன். ரீச் ஆகல. எங்காச்சும் உங்க கூட ஷாப்பிங் போகலாம்ன்னு நினைச்சேன்."
....
என்னை கண்டுக்கொள்ளாமலே கேட்டாள். "சரி, இப்ப டீ சாப்பிட போலாமா?"
**************************************************************************
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.
21 comments:
:)))))
//இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
மெய்யாலுமா உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கதையா....?? :)))
//பீஜி ரொம்ப போர். வீக் எண்ட் உங்களுக்கு கால் பண்ணினேன். ரீச் ஆகல. எங்காச்சும் உங்க கூட ஷாப்பிங் போகலாம்ன்னு நினைச்சேன்."
....
என்னை கண்டுக்கொள்ளாமலே கேட்டாள். "சரி, இப்ப டீ சாப்பிட போலாமா?"
//
:((
என்ன கொடுமை சார் இது?
ஐயோ பாவம்..:))
நல்ல புளோ. ஆங்காங்கே
நகைச்சுவை பிட்டு.
மிக ரசித்தேன்
//மெய்யாலுமா உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கதையா....?? //
ஆமாங்க... :-)
//என்ன கொடுமை சார் இது?//
பாருங்க கொடுமையை!
ஆமாங்க Vidhoosh, பாவம்தான்...
Me too agree with முரளிகண்ணன். Nice flow.
ச்சே... என்ன கொடுமை சார்.. இந்த கஷ்டம் எனக்கு நல்லா புரியுது.....
அருமையான நடை... கலக்குங்கள் நண்பா.
எதிர் காலத்த நெனச்சா பயமா இருக்கு
;))) கலக்கல்
கலக்கிட்டீங்க சரவண குமரன்.. :)
ஆனா உண்மையா நடந்த கதையா இது?!
நன்றி முருகானந்தம் துரைராஜ்
நன்றி சுகுமார் சுவாமிநாதன்
வருகைக்கு நன்றி DHANS...
//எதிர் காலத்த நெனச்சா பயமா இருக்கு//
ஏன்?
நன்றி கோபிநாத்
நன்றி சென்ஷி
//ஆனா உண்மையா நடந்த கதையா இது?!//
கொஞ்சுண்டு :-)
நீங்க mind reading தெரிந்தவரா ?
இருந்தாலும் உங்களுக்கு என்னை தெரியாதே !
எப்படி என் மனதில் உள்ளதை பிரின்ட் போட்டுள்ளீர்கள் ?
have a look on my story
http://yuvaking2005.blogspot.com/
ஸ்டீபன்,
ஏன் அப்படி கேட்கறீங்க? உங்க கதை பாதி படிச்சேன். ரொம்ப பெரியதாக இருப்பதால், பிறகு படிக்கலாம் என்று புக்மார்க் செய்துள்ளேன். படித்தவரை நன்றாக இருந்தது. தப்பாக நினைச்சுக்காதீங்க...
அன்பின் சரவண குமரன்
கத நல்லா இருக்கு - எப்போது இப்படித்தான் நெலம - என்ன செய்யுறது - ஆமா அதென்ன உண்மைக்கதை .....
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Post a Comment