Saturday, May 16, 2009

தேர்தல் முடிவும் என் முடியும்

தலைப்புல ஏதும் தப்பு இல்லை. சரியாத்தான் சொல்லியிருக்கேன்.

இன்னைக்கு தேர்தல் முடிவு இல்லையா? உருப்படியா என்ன பண்ணலாம்? நாடு தன்னோட தலையெழுத்த முடிவு எடுக்கும் போது, நாம நம்மோட தலையெழுத்த முடிவு பண்ணுவோம்ன்னு முடி வெட்ட கிளம்பினேன்.

அங்க கடையிலும் டிவில ரிசல்ட் பார்க்க கூட்டம் கூடியிருந்தது. கடைக்காரன் பத்து செகண்ட் முடி வெட்டுறான். பத்து செகண்ட் டிவி பார்க்குறான். அப்புறம் பத்து செகண்ட் ரெண்டையும் சேர்த்து செய்யிறான். பயமாத்தான் இருந்தது.

இதுக்கு நடுவுல அவனுக்கு போன் பண்ணி வேற ரிசல்ட் கேக்குறாங்க. இவரும் ஏதோ ராஷ்ட்ரபதி பவன் முன்னாடி நிக்கற நிருபர் மாதிரி செய்திகள அப்டேட் பண்ணிட்டு இருக்காரு. தவிர, பேப்பருலயும் ஏதோ குறிச்சு வச்சிக்கிறாரு.

ஏதோ சொல்ல போயி, நம்ம தலையில ஏடாகூடமா கைய வச்சிட கூடாதுல்ல.

“ஏண்ணா, கொஞ்சம் ஸ்பீடா பண்ணுங்க... நான் வேணா போயி மதியம் வரவா?”

“சார்.. வேண்டாம்... வேண்டாம்... ரிசல்ட் முடிஞ்சதும் மதியம் நிறைய கூட்டம் வரும்”

எதுக்கு மொட்டை போடவா?

---

இப்போதைக்கு வந்திருக்குற ரிசல்ட் படி, இந்த தேர்தல்ல கருத்து கணிப்பு ஒரளவுக்கு சரியா வந்திருக்குன்னு நினைக்குறேன். ஜெயலலிதா ’கஷ்டப்பட்டு’ ஹெலிகாப்டரில் ஊர் ஊராய் போய் பண்ணிய பிரச்சாரம், அவருக்கு பெரிய அளவில் எதையும் கொண்டுவரவில்லை. கலைஞர் படுத்துக்கொண்டே ஜெயித்து விட்டாரா, என்ன? விஜயகாந்த், அலைந்த அலைக்கு வெறுத்திருப்பார்.

இந்த தேர்தலில் போன தேர்தல் போலில்லாமல், ஜெயா டிவியில் அதிமுக பின் தங்கிய நிலையில் இருப்பதை முதலிலேயே ஒத்துக்கொண்டு முடிவுகளை அறிவித்து வருகிறார்கள். போன தேர்தல், நல்ல காமெடியாக இருந்தது.

பிஜேபி தோல்வியை ஒப்பு கொண்டுள்ளார்கள். அத்வானி ஆசை நிராசைதானா? முடி வெட்டும் கடையில், வாஜ்பாய் முகத்தை காட்டாதது தான் காரணம் என்றார்கள்.

காங்கிரஸ் முன்னணியில் இருப்பதை பார்க்கும் போது, இந்திய மக்களுக்கு அந்த கட்சியின் மீது பெரிய அளவில் எந்த வெறுப்பும் இல்லாதது போல் உள்ளது. மன்மோகன் சிங் முகத்துக்கு கிடைத்த ஓட்டா இது? திங்கள் கிழமை பங்குசந்தை துள்ளுமே?

----

இந்த நிலையில் இலங்கை தமிழர்களை நினைத்தால் தான் கஷ்டமாக உள்ளது. இன்னும் நாலு நாளில் ராஜீவ் நினைவு தினம் வருகிறது.

22 comments:

malar said...

காங்கரஸ் எதிர்பார்க்காத வெற்றி!!

geetha said...

dmk vandhadhu romba kashtama iruku

shabi said...

me the first

shabi said...

மீண்டும் கை கண்கள் பனி்த்் இடயம் இனிட்ு

Anonymous said...

அண்ணே! நான்தான் - என்னை தெரியல? நாந்தாண்ணே! பிரியாணிக்கும், நூறு ரூபாய்க்கும் வேல போன பச்சை தமிழன் பேசறேன்.

நீங்கெல்லாம் ஏதோ இலங்கை ப்ரெச்சனை பத்தி இவ்வளவு நாலா வாய் கிழிய கதிக்கிட்டுருந்தீங்க, ஆனா தமிழனோட இன உணர்வ சரியாய் புரிஞ்சிக்கல. தமிழன் தன்னோட சுய மரியாதை, சூடு, சொரணை - எத வேணும்னாலும் விட்டு கொடுத்துடுவான் - பிரியாணியும், நூறு ருபாய் கொடுத்தால் போதும்.

இனிமேல் ஈழ ப்ரெச்சனை அவ்வளவுதான்! அரோகரா!

Anonymous said...

மே 31 தமிழர்களின் விசேச நாளாக கொண்டாடப் பட்டுவருகிறது .........

Anonymous said...

Ungha title naanum vali moligiren,,
Enakku midiya pichukalam pola irundhuchu..Krish

வினோத் கெளதம் said...

//விஜயகாந்த், அலைந்த அலைக்கு வெறுத்திருப்பார்.//

Aamam Unmayil Veruthu iruppar..

//இந்த தேர்தலில் போன தேர்தல் போலில்லாமல், ஜெயா டிவியில் அதிமுக பின் தங்கிய நிலையில் இருப்பதை முதலிலேயே ஒத்துக்கொண்டு முடிவுகளை அறிவித்து வருகிறார்கள். //

Ithan Payangara Achariyam..

test said...

இறைவனிடம் மன்றாடுவோம், இந்திய அரசுக்கு நல்ல மனநிலையை தர வேண்டும் என்று ! திமுக தலைவர், இப்போதாவது எதுவும் செய்வாரா ?

Anonymous said...

//விஜயகாந்த், அலைந்த அலைக்கு வெறுத்திருப்பார்//
No. He did what he was supposed to - Split the votes and get the congrees- alliance to win. His brother-in-law has got 13,000 votes in the constituency where Vijayakanth is the sitting MLA. Vijayakanth had got 60,000 votes. People of kallakurichi has understood him, it is the turn of the rest of the TN people to understand!

சரவணகுமரன் said...

ஆமாங்க மலர்

சரவணகுமரன் said...

என்ன பண்றது கீதா?

சரவணகுமரன் said...

வாங்க shabi

சரவணகுமரன் said...

//பிரியாணிக்கும், நூறு ரூபாய்க்கும் வேல போன பச்சை தமிழன் //

:-((

சரவணகுமரன் said...

வாங்க கிரிஷ்

சரவணகுமரன் said...

வாங்க வினோத் கௌதம்

சரவணகுமரன் said...

பார்ப்போம் paulos raja

சரவணகுமரன் said...

//People of kallakurichi has understood him//

அப்ப சரியான தீர்ப்புதான் என்கிறீர்கள்...

Anonymous said...

#அண்ணே! நான்தான் - என்னை தெரியல? நாந்தாண்ணே! பிரியாணிக்கும், நூறு ரூபாய்க்கும் வேல போன பச்சை தமிழன் பேசறேன்.

நீங்கெல்லாம் ஏதோ இலங்கை ப்ரெச்சனை பத்தி இவ்வளவு நாலா வாய் கிழிய கதிக்கிட்டுருந்தீங்க, ஆனா தமிழனோட இன உணர்வ சரியாய் புரிஞ்சிக்கல. தமிழன் தன்னோட சுய மரியாதை, சூடு, சொரணை - எத வேணும்னாலும் விட்டு கொடுத்துடுவான் - பிரியாணியும், நூறு ருபாய் கொடுத்தால் போதும்.

இனிமேல் ஈழ ப்ரெச்சனை அவ்வளவுதான்! அரோகரா!#
இங்க இருக்கிற தமிழர்கள் சூடு சொரனையோடுதான் இருக்கிறார்கள் எவன் எப்படிபோனா எனக்கென்னன்னு உயிருக்கு பயந்து ஓடிவந்து இருப்பவர்களுக்குத்தான் சூடுவையும் சொரணையையும் கொஞ்சம் கொடுக்கணும்

Anonymous said...

சிறப்பான பதிவு இது சரவணா
உங்களின் கோணம் எப்போதுமே என்னை பிரம்மிக்க வைக்கிறது..
எழுதுவதற்கான செய்திகளை எதிர்பாராத இடங்களில் (சலூன்)
இருந்தெல்லாம் எடுப்பது உங்கள் பலம்..
தொடர்ந்து எழுதுங்க..

சரவணகுமரன் said...

நன்றி மகேந்திரன்

Aneez Jawahar said...

It is really happy to see people voting Congress to power once again.
It is a well deserved victory.
People all over India has voted for stability and development.