Thursday, May 7, 2009

பெங்களூரில் வீடா? - ஒரு எச்சரிக்கை

இது இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் (பெங்களூர் பதிப்பு) வெளிவந்த ஒரு பக்க விளம்பரம்.



ஒரு கட்டிட நிறுவனம் தவறாக வெளியிட்ட விளம்பரத்தை சுட்டி காட்டி பெங்களூர் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு. நிறுவனம் ஒன்றும் டூபாக்கூர் கம்பெனி அல்ல. இந்தியாவின் முன்னணி நிறுவனம். டி.எல்.எஃப்.

அனுமதியே வாங்காமல் எவ்வளவு தைரியமாக விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். எப்படியும் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையாக இருக்கலாம். இருந்தாலும், இல்லாத ஒன்றை இருப்பதாக கூறுவது குற்றம் தானே?

பெரிய கம்பெனி என்றால் எந்த பிரச்சினையும் இருக்காது என்று தான் நம்பி வாங்குவார்கள். அதிலும் மண் அள்ளி போட இப்படி சில நிறுவனங்கள்.

இந்த மேட்டரில் வாரி சுருட்ட வாய்ப்பிருந்தும், அந்த நிறுவனத்தின் தவறை அம்பலப்படுத்தியதற்காக பெங்களூர் மாநகராட்சியை பாராட்டலாம். ஆனால், அவர்களாலும் இப்படி எத்தனை நிறுவனங்களை கவனித்து கொண்டு இருக்க முடியும். புதியதாக வீடு வாங்குபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்த விளம்பரத்தில் கொடுத்துள்ளார்கள். கவனிக்கவும்.

இந்த அறிவிப்பு கொடுத்த எரிச்சல், இதில் உள்ள கடைசி வரியால் தான் ஒரளவுக்கு குறைந்தது.

This advertisement has been issued in the public interest and the cost of this advertisement will be recovered from the promoter/developer.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா.

12 comments:

இராகவன் நைஜிரியா said...

ஏமாற்றுவது என்பது வந்துவிட்டால் பெரிய கம்பெனி என்ன, சிறிய கம்பெனி என்ன.

சரவணகுமரன் said...

சரிதான் இராகவன்...

இன்றைய பேப்பரில் டி.எல்.எஃப். இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். வேறு ஒரு நிறுவனம் பேரில் அனுமதி வாங்கியிருப்பதாக.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பேப்பரை நல்லா கவனமா படிக்கிறீங்க.. :))

சரவணகுமரன் said...

கவனிக்கணும் இல்ல மேடம்... அட்லீஸ்ட் நமக்கு தேவையானதை...

முரளிகண்ணன் said...

நல்ல எச்சரிக்கைப் பதிவு

Boston Bala said...

கவனிக்க வேண்டியவர்களை டி எல் எஃப் சரியாக பார்க்கவில்லை போலிருக்கு?!

குப்பன்.யாஹூ said...

டீ எல் ef நிறுவனம் விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும், சென்னையில் இந்த நிறுவனம் நிறைய மக்களிடம் பணம் வாங்கி இழுத்து அடிக்கிறது கட்டடம் முடிக்காமல்.

குப்பன்_யாஹூ

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

சரவணகுமரன் said...

பாலா சார், அப்படியும் இருக்கலாம்.

ஒரு வேளை, இவுங்க கேட்டு அவங்க கொடுக்காம இருந்திருக்கலாமோ? அப்படின்னா விளம்பரம் கொடுத்திருக்க மாட்டாங்கல்ல? எப்படியோ போவுது...

சரவணகுமரன் said...

ஓ! அப்படியா? குப்பன்_யாஹூ...

Naresh Kumar said...

நல்ல பதிவு, தேவையான ஒன்று!!!

ராஜ நடராஜன் said...

இன்னும் இந்த டுபாக்கூர் வேலை நடந்துகிட்டுதான் இருக்குதா?

வளைகுடா நாடுகளுக்கும் இப்படி விளம்பரம்,5 நட்சத்திர ஓட்டல் செமினார்,10 ல இருந்து 20 தேக்கு,கொய்யா,மா மரம் 25 வருசத்துக்குப் பின்னால் எல்லாம் உனக்கே சொந்தம்ன்னு பொட்டி கட்டிகிட்டு வந்து காசு புடுங்கன ஆட்கள் வருவாங்க.எனது நண்பர்கள் இருவரும் கூட காசு குடுத்துட்டு ஜெகநாதன்னு ஒருத்தர தேடிகிட்டு இருக்காங்க.

(நான் அவங்க கூட செமினாருக்கெல்லாம் போய் டின்னர் மட்டும் சாப்பிட்டு விட்டு வந்து விட்டேன்)

விளம்பரம் உள்நோக்கில்லாமல் பொதுமக்கள் நன்மைக்காக வந்திருந்தால் பாராட்டப்படவேண்டியதே.