ஒரு கல்லூரி ஆட்டோகிராப் கவிதை...
வருடத்தில் சில காலம்
வீசும் தென்றல் போல்
என் வாழ்வில்
நீ.
பக்கத்து வீதிக்கு கூட வர தயங்கியவனை
சொர்க்கத்து வீதிக்கு இழுத்து சென்றவள்
நீ.
என்னை நேசித்தது மட்டுமில்லாமல்
எனக்கு நேசிக்க கற்று கொடுத்தவளும்
நீ.
புதிராம் பெண்ணை
எனக்கு புரிய வைத்த
போதி மரம்
நீ.
அள்ளி அள்ளி கொடுத்தும்
குறையாத அமுத சுரபியாக
அன்பை பொழிந்தவள்
நீ.
உன்னுடைய நட்பை
என்னுடைய கண பொழுதை கடக்கும்
ஆக்ஸிஜனாக கொடுத்தவள்
நீ.
நம் நட்பின்
அடுத்த கட்டம்
தொடும் தூரத்தில்.
கலக்கத்துடன்
என் மனம்
தொலைத்தூரத்தில்.
6 comments:
மிக அருமையாக சொல்லியிருக்கின்றீர்கள்.
வாழ்த்துகள்
:) Nice.
BTW yaar andha 'NEE'.
-Arthi
அடடே.. ஆச்சர்யக்குறி..
இல்லன்னா கூட இது கவிதை தான் சரவணன்..
நல்லாருக்கு.. தொடர்ந்து எழுதுங்க..
அடடே.. ஆச்சர்யக்குறி..
இல்லன்னா கூட இது கவிதை தான்..
நல்லாருக்கு சரவணா.. தொடர்ந்து எழுதுங்க..
நன்றி ஆர்த்தி
பேரு போடாம கருத்து சொன்னாலும், முகமே தெரியுது, மகேந்திரன்... :-)
Post a Comment