இந்த தேரி காட்டில் முந்திரி, பனை, தென்னை ஆகிய மரங்களை பார்க்கலாம். கொல்லாம்பழத்தை உப்பு போட்டு சாப்பிட்டு இருக்கீங்களா? வேண்டுமானால் சென்று, முந்திரியின் மேலுள்ள கொல்லாம்பழத்தை பறித்து சாப்பிட்டுவிட்டு வாருங்கள். முந்திரி கொட்டையை அங்கயே போட்டு விட்டு வரவும். காஸ்ட்லியான ஐட்டமாச்சே!
கீழே முந்திரி கொட்டை மட்டுமில்லை... சமயங்களில் பிணங்களும் கிடைக்கும். ஸ்கெட்ச் போடவும், பதுங்கவும் தகுந்த இடம் என்பதால் முந்திரிகாடுகள் அதற்கும் பிரபலம்.
இந்த தேரிக்காட்டில் பல படங்களை எடுத்துள்ளார்கள். நீங்களும் ஹீரோதான், கிழக்கு கரை, ஐயா, தாமிரபரணி என்று வில்லு வரை எடுத்துள்ளார்கள். சமீபகாலமாக, ஹரியின் படங்களில் அதிகமாக காணலாம்.
வில்லு படத்தில் இந்த மண்ணில் உடல் மறைவதாக காட்டுவார்கள். அதைப்போல் மணலில் மறையும் கோவில் ஒன்று இங்கு இருப்பதாக ஒருவர் சொன்னார். உண்மையா என்று தெரிந்தவர்கள் உறுதிப்படுத்தவும்.
இந்த மண்ணில் தான் டைட்டானியம் இருப்பதாக டாடா நிறுவனத்தினர் பதினைந்து கோடிவரை செலவு செய்து தெரிந்து கொண்டார்கள். டைட்டானியம் ராணுவத்திற்கு மிகவும் உதவும் உலோகம். மண்ணில் இருந்து பிரித்தெடுத்து விற்றால் கொள்ளை காசு வரும்.
இதற்காக தொழிற்சாலை ஆரம்பிக்க டாடா முயற்சி செய்ததும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு கருத்து கேட்கும் கந்தசாமிக்களாக சுற்றியதும் அனைவரும் அறிந்ததே.
எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரி இருப்பதால், தெரியாமல் உள்ளே நுழைந்தால் தொலைந்து போக வாய்ப்புகள் அதிகம். இந்த புகைப்படங்கள் கூட வெவ்வெறு இடங்களில் எடுத்தாலும், ஒரே மாதிரி வந்துள்ளது.
1 comment:
//முந்திரி கொட்டையை அங்கயே போட்டு விட்டு வரவும். காஸ்ட்லியான ஐட்டமாச்சே!//
:-)))
Post a Comment