பி.வாசு கன்னடத்தில் பொல்லாதவனை எடுக்க போகிறாராம்.
எப்படி வரும்?
1) கன்னட படங்கறதால கொஞ்சம் பட்ஜெட் பார்த்து தான் எடுப்பாரு. அதனால பல்ஸருக்கு பதிலா, பிளாட்டினா.
2) கமர்ஷியலுக்காக ஒரிஜினல்ல இருக்குற தேவையில்லாத சீனை பெரிதாக்குவார். தேவையான சீனை சுருக்கிவிடுவார். அதன்படி, இந்த படத்தில் முதல் பாதி முழுக்க ஹீரோவும், ஹீரோயினும் லவ் பண்ணுவார்கள், நண்பர்கள் காமெடி பண்ணுவார்கள். கிளைமாக்சுக்கு கொஞ்சம் முன்னாடி ஹீரோ பைக்க தொலைப்பார்.
3) தொலைந்த பைக்கை ஹீரோ பெங்களூர் ஹார்பரில்(!) போயி தேடுவார்.
4) வில்லனை சுத்தி இருக்குற ரவுடிகளுக்கு வெள்ளை சட்டையும் மடிச்சு கட்டின வேட்டியும் தான் யூனிப்பார்ம்.
5) தனுஷ் அப்பா ஆஸ்பிட்டலில் இருக்கும் போது, “அப்பா என்றழைக்காத உயிர் இல்லையே” என்ற அப்பா செண்டிமெண்ட் பாடல் நிச்சயம்.
6) கிஷோர் இறந்தபின் அஞ்சு அழும் காட்சியை, குங்குமம், வளையல், வெள்ளை புடவை என்று இன்னும் மெருக்கேற்றுவார்.
7) பத்து வருஷம் முன்னாடி எடுத்திருந்தாங்கன்னா, செட்டு போட்டு இரண்டு பாட்டும், ஊட்டில ரெண்டு பாட்டு எடுத்திருக்கலாம். அவரோட, தற்போதைய ரேஞ்ச் படி ரெண்டு பாட்டு பாரின்ல தான்.
8) "எங்கேயும், எப்போதும்" ரீ-மிக்ஸ்க்கு பதிலாக ஒரு பழைய ராஜ்குமார் பாடலை ரீ-மிக்ஸ் பண்ணுவார்கள். படம் - வெள்ளி விழாதான். மெஜஸ்டிக் பக்கமிருக்குற ஒரு தியேட்டருல.
இந்த படம் மட்டும் கன்னடத்தில வெற்றியடைஞ்சுதுன்னா, அப்புறம் அதே டீம வச்சி அதே மாதிரி ஒரு படம் எடுப்பாரு. அப்படி இல்லாட்டி, அவர் பையனை அங்க இறக்கி விடுவாரு. அது கண்டிப்பா ஊத்திக்கும்.
---
இவ்ளோ சொன்னாலும், பி.வாசு படங்களில் இருந்த ஒரு நல்ல விஷயம், அவர் நகைச்சுவை நடிகர்களை பயன்படுத்திய விதம். முக்கியமாக, கவுண்டமணி. இவர் படங்களில் கவுண்டமணி, ஒரு சுதந்திர பறவை. வாசு இயக்கத்தில் கவுண்டமணி பேசிய வசனங்கள் ரொம்ப பிரபலம்.
சின்னதம்பி
தியேட்டரில் சம்பந்தமில்லாமல் ஒரு காட்சியில் தனியாக கைத்தட்டியபடி,
“சூப்பருப்பு..”
“எதுக்கு நீங்க இவருக்கு போயி கைத்தட்டுறீங்க?”
“ஏன்? அவருதான் கதையிலையே ஒரு பெரிய டர்னிங் பாயிண்டு. (அந்த காட்சியில் ஒரு வயதானவரை கீழே தள்ளி விட்டு இருப்பாங்க!) அவரு வந்ததுக்கப்புறம் தான் கதையில ஒரு கசமுசாலாம் ஏற்பட்டு... ம்ம்ம்.. அய்யோ..”
போட்டோவில் இருக்கும் அப்பாவிடம்,
“கோடி ரூபா கொடுத்தா கூட ஆறு மணிக்கு மேல நான் வேலை செய்ய மாட்டேனா? டேய்! முப்பது ரூபாடா...முப்பது ரூபா கொடுத்தா, நான் மூணு நாளைக்கு கண்ணு முழிச்சு வேல பார்ப்பேண்டா...
சேதுபதி IPS
கப்பலுக்கு போகும் ஆசையில் இருப்பவரிடம்,
நம்பியார்: டேய்! மடையா
கவுண்டமணி: டேயா? இந்த ஐநூறு ரூபா சம்பளத்துக்கு டேயா? ஆயிர ரூபா கொடுத்தீங்கன்னா, கெட்ட வார்த்தையில கூப்பிடுவீங்களா?
மன்னன்
தியேட்டரில்,
ரஜினி: இந்த மோதிரம், செயின் என்னப்பா பண்றது?
கவுண்டமணி: உள்ளே வாங்கி வெளியே விக்க வேண்டியதுதான்
ரஜினி: ஏன்பா?
கவுண்டமணி: அத எவன்பா அசிங்கமா கைல மாட்டிக்கிட்டு.
மைக்கில் - தொழிலதிபர் அவர்களே!
கவுண்டமணி: சே! எவண்டா தொழிலதிபரு? சீக்கிரம் மோதிரத்தையும், செயினையும் கொடுங்கப்பா... அடடா, நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடிலப்பா... புண்ணாக்கு விக்குறவன், குண்டுசி விக்குறவன் எல்லாம் தொழிலதிபராம்...
விஜயசாந்தி கை சொடுக்கி கூப்பிட்டவுடன்,
கவுண்டமணி: ஓ! இதுல டான்ஸ் வேற ஆட சொல்லுவாங்க, போல!
நாங்களாவது ஒங்கக்கிட்ட சொல்லிட்டு வந்தோம்... நீங்க எங்கக்கிட்ட சொல்லிட்ட வந்தீங்க?
”நீங்க இப்படி சொன்னா, நாங்க வாங்க மாட்டோம். மூஞ்ச சிரிச்ச மாதிரி வச்சிக்கிட்டு சொல்லுங்க” இதை சொல்லும் போது கவுண்டமணி முகத்தை பார்க்கணும். அப்பப்பா :-).
உண்ணாவிரதத்தில்,
ரகசிய குரலில், “ஏம்பா, எல்லாரும் தூங்கிட்டாங்க. நான் மட்டும் போயி ஏதாவது கடை திறந்திருந்தா, நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் சாப்பிட எதாவது வாங்கிட்டு வரட்டுமா?”
ரஜினி முறைக்கிறார்.
“நான் இங்க உக்கார்ந்ததே தப்பு. மூணாவது ரோவுல உக்கார்ந்திருந்தா, என் இஷ்டத்துக்கு எந்திரிச்சு ஓடி போயிருப்பேன். ஐம்பது வயசுக்கு மேல இந்த நாயிங்க செத்தா என்ன? பொழச்சா என்ன? என்னால பசி தாங்க முடியல.” அழுகிறார்.
போன வாரம், இந்த உண்ணாவிரத காமெடி பார்த்து சிரியோ சிரின்னு சிரிச்சோம்.
10 comments:
//போன வாரம், இந்த உண்ணாவிரத காமெடி பார்த்து சிரியோ சிரின்னு சிரிச்சோம்.//
எந்த உண்ணாவிரதம்! ;-)
//போன வாரம், இந்த உண்ணாவிரத காமெடி பார்த்து சிரியோ சிரின்னு சிரிச்சோம்.//
என்னாது..இது அரசியல் பதிவா?
சொல்லியிருந்தா நான் இந்த பக்கம் வந்திருக்கவே மாட்டேன்ல..!
:)
கடைசி லைன்ல பொடி வச்சிருக்கயேப்பா!
Walter vetrivel la kooda koundar solo vaa vandhu kalaki iruppar..javuli kadai comedy enaku romba pidichadhu...Krish
அருமையா தொகுத்து இருக்கீங்க..
அருமை.. முதல் பாதியும் அட்டகாசம்..
கிரி, மன்னன் படத்துல வர்ற உண்ணாவிரதம் தான் :-)
டக்ளஸ்,
அட, உண்மையிலே போன வாரம் ராஜ் டிவியில மன்னன் படம் போட்டாங்க... :-)
pappu, என்ன இது? எல்லோரும் அதுலயே இருக்கீங்க...
ஆமாம் கிரிஷ், அதுவும் கலக்கலா இருக்கும்....
நன்றி லோகு
Post a Comment